இராணி சந்தா
இராணி சாந்தா (Rani Chanda-1912-19 சூன் 1997) என்பவர் ஓர் இந்தியக் கலைஞரும் எழுத்தாளரும் ஆவார்.[1]
இராணி சந்தா | |
---|---|
பிறப்பு | இராணி தே சூலை 1912 மிட்னாபூர், இந்தியா |
இறப்பு | 19 June 1997 சாந்திநிகேதன், மேற்கு வங்காளம், இந்தியா |
தேசியம் | இந்தியா |
பணி | எழுத்தாளர், கலைஞர் |
இளமை
தொகுஇராணி சந்தா பூர்ணாசசி தேவி மற்றும் குல சந்திர தே ஆகியோரின் ஐந்து குழந்தைகளில் ஒருவர் ஆவார்.[2] இவரது தந்தை இரவீந்திரநாத் தாகூரின் நண்பர். விசுவபாரதியில் இசை, நடனம் மற்றும் கலைகளில் பயிற்சி பெற்ற இவர், இரவீந்திரநாத்தின் நடன நாடக உரைகளில் வழக்கமான பங்கேற்பவராக இருந்தார். இந்தியாவில் உலர் புள்ளி பொறி வரைதலின் முன்னோடியான முகுல் சந்திர டே, இவரது மூத்த சகோதரர் ஆவார்.[3]
படைப்புகள்
தொகுஇரவீந்திரநாத் தாகூர் முதலில் இராணி சந்தாவினை எழுதுமாறு அறிவுறுத்தினார். அபனிந்திரநாத் தாகூர், இரவீந்திரநாத் கதைகளைச் சொல்லும்போது, தலைப்பைத் தீர்மானிக்க முடியாமல், தான் எடுத்த குறிப்புகளைக் கவிஞருக்குக் காட்டுவார். கவிஞர் இவற்றை விரும்பினார். மேலும் அபனிந்திரநாத்தை இதுபோன்ற கதைகளைச் சேகரிக்க ஊக்குவித்தார். இத்தொகுப்புகள் பின்னர் அபனிந்திரநாத்தின் 70வது பிறந்தநாளில் கோரோவா என்ற பெயரில் வெளியிடப்பட்டன.[4]
இரவீந்திரநாத் தாகூர் உடல்நிலை சரியில்லாமல் எழுதக் கூட முடியாதபோது, இராணி சந்தா கவிஞரின் பேச்சைக் கேட்டு கடிதங்களை எழுதுவார். இதில் இவர் கையெழுத்திடுவார். இந்தக் காலகட்டத்தில் கவிஞர் உரைத்த கவிதைகளையும் கட்டுரைகளையும் இவர் பதிவு செய்தார்.
இராணி சந்தா 1942ஆம் ஆண்டில் இந்தியச் சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்டதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த தன்னுடைய நாட்களை விவரிக்கும் ஜெனானா படோக் என்ற புத்தகத்தை இவர் எழுதினார்.[5] போத்தே கேட் எனத் தனது கணவருடன் உத்தியோக பூர்வச் சுற்றுப்பயண அனுபவங்களைப் பற்றி எழுதினார்.[6]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇராணி சந்தா ரவீந்திரநாத் தாகூரின் தனிப்பட்ட செயலாளர் அனில் குமார் சந்தாவை மணந்தார். இது ஒரு காதல் திருமணமாக இருந்தது. இதனைக் கவிஞர் நிகழ்த்திவைத்தார். இவர்கள் திருமண விழா 1934ஆம் ஆண்டில் பம்பாயில் உள்ள டாட்டா அரண்மனையில் நடந்தது. இதில் சரோஜினி நாயுடு, ஆர். ராஜகோபாலாச்சாரி மற்றும் எஸ். இராதாகிருஷ்ணன் போன்ற பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தாகூரின் மரணத்திற்குப் பிறகு, இவர் தனது கணவருடன் தில்லிக்குச் சென்று தனது வாழ்க்கையின் 20 ஆண்டுகளை அங்கே கழித்தார்.[7] 1955ஆம் ஆண்டில், கலாச்சாரக் குழுவில் உறுப்பினராக இருந்த இவர், தனது கணவருடன் கிழக்கு ஐரோப்பா மற்றும் அப்போதைய சோவியத் ஒன்றியத்திற்குச் சென்றார்.[1] 1972ஆம் ஆண்டில் சாந்திநிகேதனுக்குத் திரும்பிய இவர், சியாம்பதி என்ற இடத்தில் இறக்கும் வரை தனது ஜீத் பூம் இல்லத்தில் தங்கியிருந்தார்.[7]
விருதுகள்
தொகுஇராணி சந்தா 1954ஆம் ஆண்டில் தனது பயணக் குறிப்பான பூர்ணோகும்போவிற்காக இரவீந்திர புரசுகார் விருதினைப் பெற்றார். இவருக்கு கொல்கத்தா பல்கலைக்கழகம் புவன் மோகினி தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தது. இரவீந்திர பாரதி பல்கலைக்கழகம் இவரது இலக்கியத்திற்காக டி. லிட். பட்டம் வழங்கியது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Sengupta, Subodh Chandra. সংসদ বাঙালি চরিতাভিধান – দ্বিতীয় খণ্ড. সাহিত্য সংসদ.
- ↑ George Allen & Unwin. The International Who's Who 1943–44. p. 197.
- ↑ Sarkar. "Print the legends". The Hindu. https://www.thehindubusinessline.com/blink/watch/print-the-legends/article9727808.ece.
- ↑ Rani Chanda (1941). Ghorowa.
- ↑ Chanda, Rani. Jenana Fatok. Prakash Bhavan.
- ↑ Chanda, Rani. Pathe-ghāṭe. Ananda.
- ↑ 7.0 7.1 Mukhopadhay, Abir. "শূন্য নীড়". ABP.