இராதிகா மேனன்
இராதிகா மேனன் (Radhika Menon) என்பவர் இந்திய வெளியீட்டாளர் ஆவார். இவர் 1996-ல் தனது பதிப்பகமான துலிகாப் புத்தகங்கள் என்ற நிறுவனத்தை நிறுவினார்.[1]
ஆரம்ப நாட்கள்
தொகுசிறுவயதில் எனிட் பிளைடன், சார்லசு ஆமில்டன் மற்றும் டபுள்யூ. ஈ. ஜோன்சு போன்ற எழுத்தாளர்களைப் படிக்க விரும்புவதாக மேனன் குறிப்பிட்டார்.[2]
தொழில்
தொகு1978ஆம் ஆண்டில், குழந்தைகள் கல்வியில் ஆர்வத்துடன் மேனன், ஜே. கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் பணியாற்றினார்.[2] சென்னையில் உள்ள ஜே கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் பணியாற்றிய பிறகு, மேனல் தில்லியில் உள்ள சர்தார் படேல் பள்ளியில் பணியாற்றினார்.[3]
மேனனும் அவரது மைத்துனி இந்து சந்திரசேகரும் சொந்த புத்தகங்களை வெளியிடுவதற்கு "போதுமான பணம் சம்பாதிக்க" துலிகா என்ற பத்திரிகை சேவையைச் தொடங்கி நடத்தினர். இதைத் தொடர்ந்து, சந்திரசேகர் 1995-ல் புது தில்லியில் துலிகா புத்தக நிறுவனத்தினை நிறுவினார். மேலும் மேனன் சென்னையில் துலிகா நிறுவனத்தை நிறுவினார்.
துலிகா புத்தகங்கள்
தொகுதுலிகாவின் குழந்தைகளுக்கான புத்தகங்கள் 1996-ல் இந்திய வெளியீட்டில் ஒரு குறிப்பிடத்தக்கத் தாக்கத்தினை ஏற்படுத்தியது. ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் குழந்தைகள் இலக்கியங்களை இப்பதிப்பகம் வெளியிடுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Chaini, Sanjitha Rao (7 March 2016). "'The More Packed With Facts And Figures, The Better They Sell'". Archived from the original on 5 மார்ச் 2024. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ 2.0 2.1 "Down memory lane with Tulika". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2016-12-09.
- ↑ "Radhika Menon talks about Tulika". KitaabWorld இம் மூலத்தில் இருந்து 2016-12-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161220152904/https://kitaabworld.com/blogs/in-focus/radhika-menon-talks-about-tulika.