இராமநாத் தாகூர்

இராமநாத் தாகூர் (Ramanath Tagore, அக்டோபர் 26, 1801 - சூன் 10, 1877), ரோம நாத் தாகூர் என்றும் உச்சரிக்கப்படும் இவர் 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிசு இந்தியாவில் கொல்கத்தாவில் முன்னணி சமூக பிரமுகர்களில் ஒருவராக இருந்தார். தாகூர் குடும்பத்தைச் சேர்ந்த ஜோராசங்கா கிளையைச் சேர்ந்த இராம்மணி தாகூரின் மகனாவார்.[1] மேலும் இவர் துவாரகநாத் தாகூரின் தம்பியும், பிரசன்ன குமார் தாகூரின் உறவினரும் ஆவார்.[2] பின்னர், கொல்கத்தாவின் சுற்றுப்புறங்களில் ஒன்றான பட்டாலாவில் குடும்பச் சொத்துகளை வாங்கினார். [3]

சாதனைகள்தொகு

இவர் 1829 இல் ஒன்றிய வங்கியின் திவானாக ஆனார். மேலும் வங்கி மூடப்படும் வரை வங்கியுடன் இருந்தார்.[2] இவரது சிறு வயதில், இவர் இராசாராம் மோகன் ராயின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். மேலும், பிரம்ம சமாஜத்தின் அசல் அறங்காவலர்களில் ஒருவராக இருந்தார்.[4] பிரிட்டிசு இந்திய சங்கத்தை நிறுவிய நபர்களில் ஒருவரான இராமநாத், 1867 முதல் 1877 வரை அதன் தலைவராகவும் இருந்தார்.

இந்தியச் சங்கம், அதன் சமகாலச் சங்கமான பிரிட்டிசு இந்தியச் சங்கத்துடன் சேர்ந்து அரசியல் நனவை வளர்ப்பதில் ஒரு வினையூக்கமான பங்கைக் கொண்டிருந்தது. எழுபதுகளின் போது கொல்கத்தா மாணவர் சமூகம் பல சமூகங்களைக் கொண்ட ஒரு தேனீக்கூட்டம் என்று பிபின் சந்திர பாலின் நினைவுக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது. சுரேந்திரநாத்துக்கு அடுத்ததாக, கிறிஸ்டோ தாசு பால், இராஜேந்திர லாலா மித்ரா, இராமநாத் தாகூர், திகம்பர மித்ரா, கே.எம்.பானர்ஜி மற்றும் லால் மோகன் கோசு போன்ற பல தலைவர்கள் இருந்தனர்.[5]

இந்து மேளாவின் புரவலர்களில் ஒருவராகவும் இவர் இருந்தார்.[6] மேற்கத்திய கலையைப் பாராட்ட அந்த காலத்தில் இருந்த அரிதான நபர்களில் ஒருவரான இவர் ஓவியங்களை ஆரம்பத்தில் சேகரித்தவர்களில் ஒருவராவார்.[7]

மரியாதைதொகு

1866ஆம் ஆண்டில் இவர் வங்காள சட்டமன்றக் குழுவின் உறுப்பினரானார். குத்தகைதாரர்களின் உரிமைகளை பெற கடுமையாக வாதிட்டதினால், இவருக்கு 'போராளிகளின் நண்பன்' என்று பெயரிடப்பட்டது. நகராட்சி விசயங்களில் இவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். முக்கியமாக நிம்தொல்லா தகன மைதானத்தை மாற்றுவதற்கான முன்மொழிவு அதன் அசல் இடத்திலேயே தக்கவைக்கப்பட்டது இவரது முயற்சிகளின் காரணமாக இருந்தது. 1873இல் தலைமை ஆளுநரின் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்ட இவர் ஒரு ராஜா என்ற பெயரிடப்பட்டார். விக்டோரியா மகாராணியின் 1874 பிறந்தநாள் கௌரவங்களில், பஞ்சத்தின் போது இவர் ஆற்றிய சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக, நார்த்ரூக் பிரபு என்பவரால் இந்தியாவின் நட்சத்திரத்தின் தோழராக கௌரவிக்கப்பட்டார்.. 1877ஆம் ஆண்டு பிரகடன தர்பாரில், இவரை இந்தியத் தலைமை ஆளுநர் லிட்டன் பிரபு இவரை மகாராஜா என்று பெயரிட்டார்.[8]

எழுதுதல்தொகு

பிரசன்னா குமார் தாகூருடன் இணைந்து, இன்டியன் ரிபார்மர் என்ற இதழைத் தொடங்கினார் . இவர் "இந்து" என்ற புனைப்பெயரில் ஹர்காரா மற்றும் இங்கிலிஷ்மேன் போன்ற பத்திரிக்கைகளிலும் விரிவாக பங்களித்தார்.

குறிப்புகள்தொகு

  1. Bandopadhyay, Hiranmay, Thakurbarir Katha, p31, Sishu Sahitya Samsad.
  2. 2.0 2.1 Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), 1976/1998, Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, p456, ISBN 81-85626-65-0
  3. Bandopadhyay, Hiranmay, Thakurbarir Katha, p19, Sishu Sahitya Samsad.
  4. Sastri, Sivanath, History of the Brahmo Samaj, 1911-12/1993, p549, 557, Sadharan Brahmo Samaj, 211 Bidhan Sarani, Kolkata.
  5. Sengupta, Nitish, History of the Bengali-speaking People, (2001/2002), p287, UBS Publishers’ Distributors Pvt. Ltd., ISBN 81-7476-355-4.
  6. Sastri, Sivanath (2001) [1903], Ramtanu Lahiri O Tatkalin Banga Samaj, New Age Publishers Pvt. Ltd., page 151.
  7. Guha Thakurta, Tapati, Art in Old Calcutta, the Melting Pot of Western Styles, in Calcutta, the Living City, Vol I, edited by Sukanta Chaudhuri, pp 148-151, Oxford University Press, ISBN 0-19-563696-1.
  8. Cotton, H.E.A., Calcutta Old and New, 1909/1980, p596, General Printers and Publishers Pvt. Ltd.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமநாத்_தாகூர்&oldid=2992254" இருந்து மீள்விக்கப்பட்டது