இராமவர்ம குலசேகரன்

இராமவர்மன் (11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி [5] ), என்பவர் குலசேகரப் பெருமாள் சக்கரவர்த்திகள் என்ற பெயரில், இடைக்கால கேரளாவின் சேர வம்சத்தின் கடைசி மன்னராக இருந்தார். [6] [7] இவர் மிகவும் வெற்றிகரமான, சக்திவாய்ந்த சோழ சாம்ராச்சியத்திற்கு எதிரான போர்களுக்கு மிகவும் பிரபலமானவர் ஆவார்.

இராமவர்மன்
குலசேகர பெருமாள்
கோயில் அதிகாரிகள்
சேரமான் பெருமாள்
சேர மன்னார்(தமிழ்)
சக்கரவர்த்திகள் (மா கோ)
திருவடி
பெருன்ன கோயில் கல்வெட்டுகள் (கி.பி 1099)
சேர பெருமாள் இராச்சிய மன்னர்
ஆட்சிக்காலம்கி.பி 1089 மற்றும் 1122 கி.பி[1]
முன்னையவர்ஆதித்யா கோதா "இரணாதித்யா" ( 1036–1089 கி.பி)[2]
பின்னையவர்வீர கேரளா[3]
குழந்தைகளின்
பெயர்கள்
வீர கேரளா[4]
மரபுசேர வம்சம்
மதம்இந்துயிசம்

சேரபெருமாள் மன்னரின் நேரடி அதிகாரம் மத்திய கேரளவில் தலைநகர் மாகோட்டை (மகோதயா, இன்றைய கொடுங்கல்லூர்) சுற்றியுள்ள நாட்டிற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. [8] இவரது அரசாட்சி உள்ளூர் தலைவர்கள் அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக ஒப்பிடும்போது பெயரளவில் இருந்தது. நம்பூதிரி பிராமணர்களுக்கு மத மற்றும் சமூக விஷயங்களில் பெரும் அதிகாரம் இருந்தது. [9]

இராமவர்மனின் ஆட்சி காலங்கள் குறித்த தேதியிட்ட கல்வெட்டுகள் கொயிலாண்டிக்கு அருகிலுள்ள பந்தலயானி கொல்லம் என்ற இடத்தில் காணலாம் .திருவல்லூர் (பெரியாறு), சங்கனாச்சேரிக்கு அருகிலுள்ள பெருன்னா நெடும்புரம் தாலி (பாரதப்புழா) மற்றும் கொல்லம் ஆகிய இடங்களில் காணலாம். [10] இராமவர்மனைப் பற்றிய கடைசி கல்வெட்டு தஞ்சையின் திருவலஞ்சுழியில் காணப்படுகிறது. (விக்கிரம சோழ மன்னனின் ஆட்சி ஆண்டில் தேதியிடப்பட்டுள்ளது)

இராமவர்மனின் ஆட்சி காலத்தில் வேனாடு (தெற்கு கேரளா) புதிய சோழர்களால் ஆக்கிரமிப்பைக் கண்டது. கி.பி 1097இல் விழிஞ்சம் மற்றும் கொல்லம் துறைமுகங்கள் சோழ-பாண்டிய படைகளால் கைப்பற்றப் பட்டது. இருப்பினும், கி.பி 1102 இல் சேரரால் கொல்லத்தை மீட்டெடுக்க முடிந்தது. பொ.ச. 1102 தேதியிட்ட ஒரு பதிவில், ராஜா தனது நான்கு அமைச்சர்கள், ஆயிரம் நாயர் வீரர்களின் தலைவர் மற்றும் எரநாட்டின் தலைவரான மன விக்ரம புந்துராக்கோன் (சமோரின்) ஆகியோருடன் கொல்லத்தில் ஒரு படைக்குத் தலைமை தாங்கினார் என்று கூறுகிறது. [11] கி.பி. 1102 மற்றும் 1118 ஆகிய ஆண்டுகளில் சோழர்கள் கொல்லம் மற்றும் விழிஞ்சம் ஆகிய இடங்களை மீண்டும் கைப்பற்றினர். இதன் மூலம் சேர மன்னர் சோழர்களுக்கு கப்பம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [12]

இராமவர்மனின் ஆட்சியின் இறுதி காலத்தில் கொடுங்கல்லூர் சேர இராச்சியத்தின் இரண்டாவது தலைமையகமாக கொல்லம் செயல்பட்டது. அறிஞர்களின் கூற்றுப்படி, "வேனாட்டின் விசுவாசத்தைப் பாதுகாப்பதில் கொல்லத்தின் பழைய ஆளும் குலத்துடனான திருமண உறவுகளின் மூலோபாய நன்மையும் தெற்கு கேரளாவில் தொடர்ச்சியான சோழ-பாண்டிய தாக்குதல்களின் வெளிச்சத்தில் கருதப்படலாம்". [13] 12ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கொல்லத்தின் ஆட்சியாளர் வீர கேரளா என்பவர் கடைசி சேர மன்னனின் மகன் என்று ஒரு பாரம்பரியம் உள்ளது. [12]

குறிப்புகள்

தொகு
  1. As per M. G. S. Narayanan (1972)
  2. As per M. G. S. Narayanan (1972)
  3. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 86.
  4. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 86.
  5. Narayanan, M. G. S. 2002. ‘The State in the Era of the Ceraman Perumals of Kerala’, in State and Society in Premodern South India, eds R. Champakalakshmi, Kesavan Veluthat, and T. R. Venugopalan, pp.111–19. Thrissur, CosmoBooks.
  6. Menon, A Sreedhara (1 January 2007). A Survey Of Kerala History. D C Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126415786. பார்க்கப்பட்ட நாள் 7 January 2019.
  7. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 20. 125 - 130, 467-470.
  8. Noburu Karashmia (ed.), A Concise History of South India: Issues and Interpretations. New Delhi: Oxford University Press, 2014. 143-44.
  9. Narayanan, M. G. S. 2002. ‘The State in the Era of the Ceraman Perumals of Kerala’, in State and Society in Premodern South India, eds R. Champakalakshmi, Kesavan Veluthat, and T. R. Venugopalan, pp.111–19. Thrissur, CosmoBooks.
  10. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 20. 125 - 130, 467-470.
  11. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 127.
  12. 12.0 12.1 Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 171.
  13. Narayanan, M. G. S. Perumāḷs of Kerala. Thrissur (Kerala): CosmoBooks, 2013. 154.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமவர்ம_குலசேகரன்&oldid=2934895" இலிருந்து மீள்விக்கப்பட்டது