இராமோசி ராவ்

இந்திய திரைப்பட தயாரிப்பாளர், ஊடக தொழில்முனைவோர்

செருகூரி இராமோசி ராவ் (Cherukuri Ramoji Rao) (பிறப்பு 16 நவம்பர் 1936) ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளரும், ஊடக தொழில்முனைவோருமாவார். [2] உலகின் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு அரங்கமான இராமோசி திரைப்பட நகர், திரைப்பட தயாரிப்பு நிறுவனமான உஷாகிரன் மூவிஸ், ஈடிவி என்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியவற்றைக் கொண்ட இரமோசி குழுமத்தின் தலைவராக உள்ளார். [3] [4] தெலுங்குத் திரையுலகில் இவர் செய்த படைப்புகளுக்காக நான்கு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், தேசிய திரைப்பட விருதையும் பெற்றுள்ளார். [5] 2016ஆம் ஆண்டில், பத்திரிகை, இலக்கியம், கல்வி ஆகியவற்றில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த கௌரவமான பத்ம விபூசண் வழங்கி கௌரவிக்கப்பட்டார். [6] [7]

இராமோசி ராவ்
Cherukuri Ramoji rao.png
பிறப்புசெருகூரி இராமோசி ராவ்
16 நவம்பர் 1936 (1936-11-16) (அகவை 86)
பெத்தபருப்புடி, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
தேசியம்இந்தியர்
பணி
  • Businessman
  • media entrepreneur
விருதுகள்
ஏப்ரல் 12, 2016 அன்று புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில், இராமோசி ராவிற்கு பத்ம விபூசண் விருதை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்

சொந்த வாழ்க்கைதொகு

இந்தியாவின் ஆந்திராவின் கிருட்டிணா மாவட்டத்திலுள்ள பெத்தபருபுடியில் ஒரு விவசாய குடும்பத்தில் இவர் பிறந்தார். இராமோசி குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் மார்கதர்சி நிதி நிறுவனம், ஈநாடு நாளிதல், ஈடிவி தொலைகாட்சி நிறுவனம், இரமாதேவி பொதுப்பள்ளி, பிரியா உணவகங்கள், உஷாகிரன் திரைப்பட நிறுவனம், ஐதராபாத்துக்கு அருகிலுள்ள இராமோசி திரைப்பட நகரம் ஆகியவை அடங்கும். ஆந்திராவில் உள்ள 'டால்பின் விடுதிகள்' குழுமத்தின் தலைவராகவும் உள்ளார்.

இவரது, இளைய மகன், செருகூரி சுமன், இரத்த புற்றுநோயால் 7 செப்டம்பர் 2012 அன்று இறந்தார். [8]

மேற்கோள்கள்தொகு

  1. "Rajinikanth gets Padma Vibhushan; Padma Shri for Priyanka, Ajay Devgn". The Indian Express. 25 January 2016. 22 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. Donthi, Praveen (December 2014). "How Ramoji Rao of Eenadu wrested control of power and politics in Andhra Pradesh". The Caravan (ஆங்கிலம்). 2019-12-30 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Largest film studio". Guinness World Records. 12 January 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "ETV Ramoji group forays into garment making". The Hindu. 5 March 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 January 2011 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  5. "Chairman Rao". The Caravan. 28 December 2015 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Padma Awards 2016".
  7. "Padma Awards 2016: Full List". NDTV.com. 25 January 2016.
  8. யூடியூபில் Ramoji Rao's Son Suman Died'd – Sakshi TV

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமோசி_ராவ்&oldid=3489612" இருந்து மீள்விக்கப்பட்டது