இராவ் துலாராம் சிங்
இராவ் துலாராம் சிங் (Rao Tula Ram)(சுமார் 9 டிசம்பர் 1825 - 23 செப்டம்பர் 1863) என்பவர் யதுவன்ஷி அகிர் வம்ச அரசர் அல்லது ரேவாரியின் தலைவர் ஆவார். இவர் 1857ஆம் ஆண்டு அரியானாவில் நடந்த சிப்பாய்க் கிளர்ச்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். இங்கு இவரை இம்மாநில வீரராகக் கருதுகின்றனர்.[1]
இராவ் துலாராம் சிங் | |
---|---|
மன்னர் | |
இராவ் துலாராம் தபால் தலை, 2001-ல் | |
ஆட்சிக்காலம் | 1838 -1857 |
முன்னையவர் | ராவ் புரான் சிங் |
பின்னையவர் | பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
பிறப்பு | circa ராம்புரா, ரேவாரி, அகிர்வால், பஞ்சாப் | 9 திசம்பர் 1825
இறப்பு | 23 செப்டம்பர் 1863 காபூல், ஆப்கானித்தான் | (அகவை 37)
தந்தை | ராவ் புரான் சிங் |
தாய் | ராணி கியான் கவுர் |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதுலாராம் சிங் 1825ஆம் ஆண்டு திசம்பர் 9ஆம் தேதி ரேவாரியின் ராம்புரா புறநகர்ப் பகுதியில் அகிர் குடும்பத்தில் பூரன் சிங் மற்றும் கியான் கவுருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இளம் வயதில் தந்தையினை இழந்தார்.[2]
ஆட்சி
தொகு1857 இந்தியக் கிளர்ச்சி
தொகுஆரம்ப வெற்றி
தொகு1857ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி இவர் தனது உறவினர் ராவ் கோபால் தேவ் மற்றும் நானூறு முதல் ஐந்நூறு சீடர்களுடன் சேர்ந்து உள்ளூர் வட்டாச்சியாரை பதவி நீக்கம் செய்து ரேவாரியை ஆக்கிரமித்தார். இவர் சுமார் 5000 வீரர்களைக் கொண்ட படை ஒன்றை உருவாக்கினார். துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளைத் தயாரிப்பதற்கான பட்டறையை ஒன்றையும் அமைத்தார். ராவ் துலா ராம், பேரரசர் பகதூர் ஷா மற்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போரை நடத்திக் கொண்டிருந்த பிற கிளர்ச்சிப் படைகளுக்கு உதவினார். இவர் தில்லி வீழ்ச்சிக்கு பத்து நாட்களுக்கு முன்பு பக்த் கான் மூலம் ரூ 45000/- மற்றும் தேவையான பொருட்களை அதிக அளவில் வழங்கினார். மேலும் இரண்டாயிரம் கோதுமை மூட்டைகளையும் வழங்கினார்.[சான்று தேவை]
போர்
தொகுஇராவ் படைகள், இவரது உறவினர் ராவ் கிர்சான் சிங் தலைமையில் நர்நால் புறநகர்ப் பகுதியான நாசிப்பூரில் 1857ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் நாள் பிரித்தானியப் படைகளுடன் போரிட்டனர். இராவ் துலாராமின் படைகளின் முதல் தாக்குதல் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இத்தாக்குதலில் பிரித்தானியப் படைகள் சிதறி ஓடியது; பல பிரித்தானைய அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.[3]
பின்னர் ஆங்கிலேயப் படைகளின் பதிலடியினால், நர்னால் இராவ் துலாரம் ராஜஸ்தானுக்குச் சென்று ஒரு வருடம் தாந்தியா தோபே படையில் சேர்ந்தார். ஆனால் ராஜஸ்தானில் உள்ள சிகரில் நடைபெற்ற போரில் தாந்தியா தோபின் படைகள் பிரித்தானியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. இதன் பிறகு இராவ் துலாராம் ஈரானின் ஷாவிடம் உதவி பெற இந்தியாவை விட்டு வெளியேறினார். (காண்க: நவம்பர் 1856 முதல் ஏப்ரல் 1857 வரையிலான ஆங்கிலேய-பாரசீகப் போர்). ஆப்கானித்தான் அமீரகத்தின் ஆட்சியாளரான தோஸ்த் முகமது கான் (1938 முதல் 42 வரையிலான முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போரையும் பார்க்கவும்) மற்றும் பிரித்தானிய காலனித்துவ சாம்ராஜ்யத்திற்கு எதிராக அனைத்து ரஷ்யாவின் இரண்டாம் அலெக்சாண்டர் பேரரசர். இராவ் துலாராமின் சொத்துக்கள் 1859-ல் ஆங்கிலேயர்களால் பறிமுதல் செய்யப்பட்டன, இருப்பினும் அவரது இரண்டு மனைவிகளின் உரிமைகள் தக்கவைக்கப்பட்டன. 1877ஆம் ஆண்டில், அகிர்வால் பகுதியின் தலைவராக இருந்த அவரது மகன் இராவ் யுதிஸ்டர் சிங்குக்கு அவரது பட்டம் மீட்டெடுக்கப்பட்டது.[4]
இறப்பு
தொகு23 செப்டம்பர் 1863 அன்று, இவர் தனது 38 வயதில் ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் தொற்று காரணமாக இறந்தார்.[4]
மரியாதை
தொகுஇந்திய அரசு 23 செப்டம்பர் 2001 அன்று ராவ் துலாராம் நினைவு தபால் தலையை வெளியிட்டது.[சான்று தேவை]
தியாகிகள் சிகப்பு
தொகுஇராவ் துலாராமின் நினைவினை நினைவுகூரும் வகையில் இரண்டு நாள் ஷாஹிதி மேளா (தியாகிகள் கண்காட்சி) ஆண்டுதோறும் செப்டம்பரில் ரேவாரி நகரின் இராம்புராவில் நடத்தப்படுகிறது.[5]
மேலும் பார்க்கவும்
தொகு- ராவ் மித்ரா சென் அஹிர்
- ராவ் ருடா சிங்
மேற்கோள்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Republic Day Celebrations". The Tribune. 28 January 2008.
- ↑ महान योद्धा थे राव तुलाराम, अंग्रेजों से आखिरी सांस तक लड़े : अजीत सिंह, Dainik Bhskar, 10 Dec 2018.
- ↑ Prakash, Buddha (1967). Glimpses of Haryana (in ஆங்கிலம்). University of Kurukshetra. p. 110.
- ↑ 4.0 4.1 Punjabi University (2001). "The Panjab Past and Present, Volume 32". Punjab (India). Department of Punjab Historical Studies, Punjabi University, Original from the University of Michigan. pp. 76, 77, 78. பார்க்கப்பட்ட நாள் 7 October 2014.
- ↑ Upadhyay, R. K. (1996). Widowed and Deserted Women in Indian Society. India. Dept. of Women and Child Development & Harnam Publications. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185247113.