இரிடியம்(III) அயோடைடு

வேதிச் சேர்மம்


இரிடியம்(III) அயோடைடு (Iridium(III) iodide) I3Ir என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரிடியத்தின் அயோடைடு உப்பு என இது வகைப்படுத்தப்படுகிறது.

இரிடியம்(III) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரிடியம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
7790-41-2
ChemSpider 9226575
InChI
  • InChI=1S/3HI.Ir/h3*1H;/q;;;+3/p-3
    Key: WUHYYTYYHCHUID-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
Image
Image
பப்கெம் 18534463
  • [I-].[I-].[I-].[Ir+3]
  • O.O.[I-].[I-].[I-].[Ir+3]
  • O.O.O.[I-].[I-].[I-].[Ir+3]
பண்புகள்
I3Ir
வாய்ப்பாட்டு எடை 572.93 g·mol−1
தோற்றம் அடர் பழுப்பு திண்ம்மம்[1]
அடர்த்தி 7.4 கி·செ.மீ−3[1]
கரைதிறன் நீர் மற்றும் பென்சீன் ஆகியவற்றில் கரையாது[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இரிடியம்(III) ஐதராக்சைடு
இரிடியம்(III) குளோரைடு
இரிடியம்(III) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ரோடியம்(III) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

இரிடியம்(IV) அயோடைடுடன் ஐதரசனை 210 °பாகை செல்சியசு வெப்பநிலையில் சேர்த்து குறைத்தல் வினையின் மூலம் இரிடியம்(III) அயோடைடை பெறலாம்.[2] ஐதரசன் அயோடைடுடன் இரிடியம் டை ஆக்சைடு[3] அல்லது இரிடியம்(III) ஐதராக்சைடு ஆகியவற்றை வினைபுரியச் செய்தும் இதை உருவாகலாம்.[4]

இயற்பியல் பண்புகள்

தொகு

இரிடியம்(III) அயோடைடு நீரில் கரையாது. அடர் பழுப்பு நிற திண்மமாக காணப்படுகிறது.[1] குரோமியம் முக்குளோரைடு போல ஒற்றை சாய்வு படிகமாகும்.[5][6] இதன் முந்நீரேற்று மஞ்சள் நிறத்தில் உள்ளது. இதை சூடாக்கும்போது இருநீரேற்றாக அல்லது நீரிலியாக நீரிழப்பு அடைகிறது. . இரிடியம்(III) அயோடைடு ஒரு ஒற்றை நீரேற்றையும் கொண்டுள்ளது.[3][7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Dale L. Perry (2016). Handbook of Inorganic Compounds, Second Edition. CRC Press. p. 523. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8.
  2. Malatesia, Lamberto (March 31, 1961). PART I - STUDIES ON RHENIUM COORDINATION COMPOUNDS: HEXAISOCYANIDERHENIUM(I) SALTS; PART il - STUDIES ON IRIDIUM COMPOUNDS: ISOCYANIDE DERIVATIVES OF IRIDIUM, CARBONYL DERIVATIVES OF IRIDIUM IODIDES (PDF) (Report). Archived from the original (PDF) on 2018-10-30.
  3. 3.0 3.1 William Pettit Griffith (1967). The chemistry of the rarer platinum metals (Os, Ru, Ir, and Rh). Interscience Publishers. p. 241.
  4. Raymond Eller Kirk; Donald Frederick Othmer; Herman Francis Mark (1963–1970). WHICH VOLUME?. Encyclopedia of Chemical Technology: Editorial board: Herman F. Mark, chairman, John J. McKetta, Jr. [and] Donald F. Othmer. Interscience Publishers. p. 871. இணையக் கணினி நூலக மைய எண் 2519460.வார்ப்புரு:Fcn
  5. R. Blachnik (2013). Taschenbuch für Chemiker und Physiker Band 3: Elemente, anorganische Verbindungen und Materialien, Minerale. Springer-Verlag. p. 494. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-58842-6.
  6. Brodersen, K. (February 1968). "Structure of β-RuCl3, RuI3, IrBr3, and IrI3" (in en). Angewandte Chemie International Edition in English 7 (2): 148–148. doi:10.1002/anie.196801481. பன்னாட்டுத் தர தொடர் எண்:0570-0833. 
  7. H. J. Kandiner (2013). Iridium. Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-12128-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிடியம்(III)_அயோடைடு&oldid=4178457" இலிருந்து மீள்விக்கப்பட்டது