இருபுளோரோசிலேன்

வேதிச் சேர்மம்

இருபுளோரோசிலேன் (Difluorosilane) என்பது SiH2F2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். வாயு நிலையில் காணப்படும் இச்சேர்மம் சிலேனின் வழிப்பெறுதியாகக் கருதப்படுகிறது. இதில் சிலேனிலுள்ள இரண்டு ஐதரசன் அணுக்கள் புளோரின் அணுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும்.

இருபுளோரோசிலேன்
இனங்காட்டிகள்
13824-36-7
ChemSpider 109934
InChI
  • InChI=1S/F2H2Si/c1-3-2/h3H2
    Key: PUUOOWSPWTVMDS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 123331
  • F[SiH2]F
பண்புகள்
F2H2Si
வாய்ப்பாட்டு எடை 68.10 g·mol−1
தோற்றம் நிறமற்ற வாயு
உருகுநிலை −122 °C (−188 °F; 151 K)
கொதிநிலை −77.8 °C (−108.0 °F; 195.3 K)
வெப்பவேதியியல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
262.12 யூல்/மோல்•கெல்வின்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

இருகுளோரோசிலேனுடன் ஆண்டிமனி டிரைபுளோரைடு சேர்மத்தைச் சேர்த்து புளோரினேற்றம் செய்தால் இருபுளோரோசிலேனை தயாரிக்கலாம்.[1] [2]

3 SiH2Cl2 + 2 SbF3 → 3 SiH2F2 + 2 SbCl3

சிலிகான் டெட்ராபுளோரைடுடன் ஐதரசனைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் இருபுளோரோசிலேன் உருவாகும்.

SiF4 + 2 H2 → SiH2F2 + 2 HF

நிலக்கரியை எரிக்கும்போதும் சிறிதளவு இருபுளோரோசிலேன் உருவாகிறது.[3]

பண்புகள்

தொகு

இருபுளோரோசிலேனின் கொதிநிலை −77.8 °செல்சியசு ஆகும். இதன் உறைநிலை −122 °செல்சியசு வெப்பநிலையாகும். இவ்வாயு ஒரு நிறமற்ற வாயுவாகும். சிலிக்கான் புளோரின் பிணைப்புகளுக்கு இடையேயான பிணைப்பு இடைவெளி 1.358 Å ஆக உள்ளது. புளோரோசிலேனில் உள்ள பிணைப்பு இடைவெளியைவிட இது அதிகமாகும். ஆனால் முப்புளோரோசிலேனில் உள்ள பிணைப்பு இடைவெளியைக் காட்டிலும் இது குறைவாகும்.[4]

வினைகள்

தொகு

இருபுளோரோசிலேன் வாயுவில் மின்சாரத்தை செலுத்தும்போது ஐதரசன் அணுக்கள் முன்னுரிமையாக அகற்றப்படுகின்றன. ஐதரசனுடன் சேர்ந்து டெட்ராபுளோரோடைசிலேன் (SiHF2SiHF2) உருவாகிறது.[2]

2 SiH2F2 → SiHF2SiHF2+ H2

உயர்ந்த வெப்பநிலையில், இருபுளோரோசிலேன் விகிதவியலல்லா முறையில் ஐதரசன் மற்றும் புளோரின் அணுக்கள் பரிமாறப்பட்டு முப்புளோரோசிலேனும் புளோரோசிலேனும் உருவாகின்றன.[4]

பயன்

தொகு

இருபுளோரோசிலேன் பல் துவாரங்களைத் தடுப்பதற்காக பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.[5]

சிலிக்கான் நைட்ரைடு படலங்களை படிய வைப்பதற்கு இரசாயன நீராவி படிவு முறையிலும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 郝润蓉 等. 无机化学丛书 第三卷 碳 硅 锗分族. 科学出版社, 1998. pp 178. 2.3 卤代硅烷
  2. 2.0 2.1 Addison, C. C. (1973). Inorganic Chemistry of the Main-Group Elements (in ஆங்கிலம்). Royal Society of Chemistry. p. 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780851867526.
  3. Kruszewski, Łukasz; Fabiańska, Monika J.; Ciesielczuk, Justyna; Segit, Tomasz; Orłowski, Ryszard; Motyliński, Rafał; Kusy, Danuta; Moszumańska, Izabela (November 2018). "First multi-tool exploration of a gas-condensate-pyrolysate system from the environment of burning coal mine heaps: An in situ FTIR and laboratory GC and PXRD study based on Upper Silesian materials". Science of the Total Environment 640-641: 1044–1071. doi:10.1016/j.scitotenv.2018.05.319. பப்மெட்:30021271. Bibcode: 2018ScTEn.640.1044K. 
  4. 4.0 4.1 Ebsworth, E. A. V. (2013). Volatile Silicon Compounds: International Series of Monographs on Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. pp. 54–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781483180557.
  5. Brambilla, Eugenio (2001). "Fluoride – Is It Capable of Fighting Old and New Dental Diseases?". Caries Research 35 (1): 6–9. doi:10.1159/000049101. பப்மெட்:11359049. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபுளோரோசிலேன்&oldid=3961723" இலிருந்து மீள்விக்கப்பட்டது