இரும்குளங்கரா துர்காதேவி கோயில்
இரும்குளங்கரா துர்காதேவி கோயில் இந்தியாவின் கேரளாவின் திருவனந்தபுரம் மணக்காடு பகுதியில் தோட்டம் என்னுமிடத்தில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். திருவனந்தபுரம் நகரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலுக்கு தென்மேற்கில் சுமார் 1.8 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் உள்ளது. இக்கோயிலின் மூலவர் துர்க்கை ஆவார். <ref>Irumkulangara Durga Devi Temple<ref>
நிலவியல்
தொகுஇக்கோயில் அமைவிடம்.
வரலாறு
தொகுகேரளாவில் உள்ள பழமையான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயில் இரண்டு குளங்களின் கரையில் அமைந்துள்ளது. அதனாலேயே "இரும்" என்றால் இரண்டு மற்றும் "குளம்" என்றால் குளம் என்ற வகையில் இப்பெயர் பெற்றது. திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான பத்மநாப சுவாமி கோயிலுக்கும் இந்த கோயிலுக்கும் தொடர்பு உள்ளதாக நம்பப்படுகிறது. பழங்காலத்தில்,பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து பூசாரிகள் பூசைகளைச் செய்ய நாட்டுப்படகுகள் மூலம் இங்கு வந்ததாக நம்பப்படுகிறது.
துணைத்தெய்வங்கள்
தொகுஇக்கோயிலின் மூலவர் துர்க்கா தேவி ஆவார். இந்த மூலவர் ஆதிபராசக்தியின் வ்டிவமான துர்க்கா பகவதியாக காட்சியளிக்கிறார். மூலவரின் நட்சத்திரம் கார்த்திகை ஆகும்.
இக்கோயிலில் வளாகத்தில் கணேஷ் கடவுள், நாகராஜா, பிரம்ம ராட்சஸ், பைரவர், மதன் தம்புரான், நவக்கிரகம் ஆகியோர் துணைத்தெய்வங்களாக உள்ளனர்.
வழிபாட்டு நேரம்
தொகுஇக்கோயில் காலை 5:00 முதல் 10.00 வரையிலும், மாலை 5.00 முதல் 8.00 வரையிலும் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும்.
விழாக்கள்
தொகுஇக்கோயிலின் முக்கிய திருவிழா பங்குனி மகோத்சவம் ஆகும். இவ்விழா மார்ச் மாதத்தில் சுமார் 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் மண்டல விருதம், விநாயக சதுர்த்தி, கார்த்திகை, ஆயில்ய பூசை, ராமாயண பாராயணம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெறுகின்றன.
போக்குவரத்து
தொகுKSRTC மத்திய பேருந்து நிலையம் திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. பிற நகரங்களுக்குச் செல்ல இங்கிருந்து ஏராளமான பேருந்துகள் உள்ளன. மணக்காடு அல்லது கமலேஸ்வரத்தில் இறங்க வேண்டும். கிழக்குக் கோட்டையிலிருந்து கோவளம் வழித்தடத்தில் தனியாருக்குச் சொந்தமான மற்றும் KSRTC பேருந்துகள் மணக்காடு மற்றும் கமலேஸ்வரம் வழியாகச் செல்கின்றன. அருகிலுள்ள திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையம் கோயிலிலிருந்து 3.5 கிமீ. தொலைவில் உள்ளது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் கோயிலிலிருந்து 3 தொலைவில் உள்ளது.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- இரும் குலநகர துர்காதேவி கோவில்
- மணக்காடு
- இரும்குளங்கரா துர்காதேவி கோவில் பரணிடப்பட்டது 2020-02-19 at the வந்தவழி இயந்திரம்
- I இரும்குளங்கரா கோவில் பரணிடப்பட்டது 2023-06-07 at the வந்தவழி இயந்திரம்