இலக்சுமண் சிங் சங்பங்கி
இலக்சுமன் சிங் சங்பங்கி (Lakshman Singh Jangpangi) (1905-1976) இந்திய நாட்டின் அரசு ஊழியர் ஆவார். கார்டோக் மற்றும் யதுங் பிராந்தியங்களில் முன்னாள் இந்திய வர்த்தக முகவராக இருந்தார்.[1] 1905 ஆம் ஆண்டு சூலை மாதம் 24 ஆம் தேதி இந்திய நாட்டின் உத்தரகண்ட் மாநிலத்தின் சோகர் பள்ளத்தாக்கில் உள்ள பர்புவில் பிரிட்டிசு நிர்வாகத்தின் பணக்கார அதிகாரியான ராய் சாகேப் சோகன் சிங்கிற்கு பிறந்தார். அல்மோரா நகராட்சியில் பள்ளிப்படிப்பை முடித்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை இறுதிப் படிப்பை முடித்தார்.
இலக்சுமன் சிங் சங்பங்கி | |
---|---|
பிறப்பு | 24-சூலை-1905 பர்பூ, சோகர் பள்ளத்தாக்கு, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், இந்தியா |
இறப்பு | 1976 |
செயற்பாட்டுக் காலம் | 1930-1962 |
பெற்றோர் | ராய் சாகேப் சோபன் சிங் |
விருதுகள் | பத்மசிறீ |
1930 ஆம் ஆண்டில், மேற்கு திபெத்தில் உள்ள கார்டோக்கில் உள்ள பிரிட்டிசு வர்த்தக நிறுவனத்தில் கணக்காளராகச் சேர்ந்தார். மேலும் 1941 ஆம் ஆண்டு பணிபுரியும் வர்த்தக முகவராக பதவி உயர்வு பெற்றார்.[1] 1946 ஆம் ஆண்டில், அவர் வர்த்தக முகவராக ஆனார். 1959 ஆம் ஆண்டு வரை யதுங் பிராந்தியத்திற்கு மாற்றப்படும் வரை பதவியில் தொடர்ந்தார்.[2][3] 1962 ஆம் ஆண்டு வர்த்தக முகமைகள் ஒழிக்கப்பட்டதன் மூலம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.[4] இந்திய அரசு 1959 ஆம் ஆண்டில், தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக நான்காவது உயரிய இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்தது.[5]
இலக்சுமன் சிங் சங்பங்கி [6] 1976 ஆம் ஆண்டு கல்துவானி நகரத்தில் 71 வயதில் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Apna Uttarakhand". Apna Uttarakhand. 2015. Archived from the original on 27 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 23 April 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Indian Presence in Tibet". Clause Arpi. 2015. பார்க்கப்பட்ட நாள் 23 April 2015.
- ↑ "Notes" (PDF). Claude Arpi. 2015. Archived from the original (PDF) on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 23 April 2015.
- ↑ "Claude Arpi profile" (PDF). Claude Arpi. 2015. Archived from the original (PDF) on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 23 April 2015.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
- ↑ "Apna Uttarakhand". Apna Uttarakhand. 2015. Archived from the original on 27 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 23 April 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)"Apna Uttarakhand" பரணிடப்பட்டது 2015-07-27 at the வந்தவழி இயந்திரம். Apna Uttarakhand. 2015. Retrieved 23 April 2015.