இலங்கையில் தேயிலை உற்பத்தி

இலங்கையில் தேயிலை உற்பத்தி வெளிநாட்டு வருவாயைப் பெற்றுத்தரும் பிரதான வளமாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% ஆக இருந்து, 2013 இல் 1,527 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொடுத்தது.[1]

வரலாறு தொகு

 
ஜேம்ஸ் டெய்ளர் 1860 ஆம் ஆண்டு கண்டியில்
 
1867 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கையின் முதல் தேயிலைத் தோட்டம் லூல்கந்துரை தேயிலைப் பெருந்தோட்டத்துக்கான பெயர் பலகை

இலங்கையில் கறுப்புத் தேயிலையின் உற்பத்தி திவில் காணப்பட்ட கோப்பி பெருந்தோட்டங்கள் ஏமியா வஸ்டரிக்ஸ் (Hemileia vastatrix) என்ற நுண்மத்தாக்குதலுக்கு உள்ளாகி அழிவுற்றதன் பின்னர் தொடங்கியது. கோப்பி பெருந்தோட்ட அதிகாரிகள் வேறு ஒரு பயிருக்கான தேவையை உணரத்தொடங்கினர். லூல்கந்துரை பெருந்தோட்டம் தேயிலை வளர்ப்பிற்கான ஆர்வத்தைக் கொண்டிருந்தது. பெருந்தோட்டத்துக்கு வந்திருந்த ஜேம்ஸ் டெய்ளர் 1867 தேயிலைப் பயிரிட்டார். மொத்தம் 19 ஏக்கர் நிலத்தில் தேயிலை பெயிரிடப்பட்டது. வட இந்தியாவில் தேயிலை வளர்ப்பு, தேயிலை உற்பத்தி போன்றவற்றில் அனுபவம் பெற்றிருந்த டெய்ளர், தனது வீட்டின் முன்னரையில் உற்பத்தி தொடர்பான பல சோதனைகளைச் செய்தார். தேயிலை இலையைக் தனது கைகளால் சுருட்டி, வாடிய அத்தேயிலைகளை களிமண் அடுப்பில் கரியைப் பயன்படுத்தி சுட்டார். இவ்வாறு தயாரிக்கப்பட்ட தேயிலை இலண்டன் நகரின் ஏலத்தில் கூடிய விலையைப்பெற்றது. இது இலங்கையில் தேயிலை உற்பத்தியை ஊக்கமூட்டியது. 1890 இல் இலங்கை 22,900 தொன் தேயிலையை உற்பத்தி செய்தது இது 1873–1880 வரை உற்பத்தி செய்யப்பட்ட 12 கிலோவுடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய வளர்ச்சியாகும்.

1971 வரை பெரும்பாலான தேயிலைப் பெருந்தோட்டங்கள் பிரித்தானியர் வசமே காணப்பட்டது, இவை நில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி அரசவசப்படுத்தப்பட்டது. 1990 ஆண்டு முதல் தேயிலைப் பெருந்தோட்டங்களின் நிர்வாகம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தேயிலை வளர்ப்பு பகுதிகள் தொகு

இலங்கையில் முக்கிய தேயிலை வளப்புப் பகுதிகள் ஆறு காணப்படுகின்றன:

மாறுபட்ட தயாரிப்புகள் தொகு

இலங்கை கறுப்புத் தேயிலை இலங்கையில் வளர்க்கப்படும் கறுப்புத் தேயிலையாகும். இது நல்ல நறுமணத்தைக் கொண்டிருப்பதோடு சிற்றஸ் அமிலத்தின் மணத்துக்கு ஒப்பானதாகும். தேயிலை சுவையூட்டிகள் கலந்தோ அல்லது கலக்கப்படாமலோ அருந்தப்படுகிறது. தேயிலை பல பெருந்தோட்டங்களில் பல உயரங்களில் வளர்க்கப்படுகிறது, உயரத்துக்கமைய சுவையும் வேறுபடுகிறது.

  • மொறவக் கோரளை 2500 அடிக்கு குறைவான உயரமான பகுதியில் வளரும் தேயிலை
  • கண்டி 2500 அடிக்கு மேல் உயரமான பகுதியில் வளரும் தேயிலை
  • ஊவா 2800 அடிக்கு மேல் உயரமான பகுதியில் வளரும் தேயிலை
  • தம்புள்ள மற்றும் டிக்கோயா 3500 அடிக்கு மேல் உயரமான பகுதியில் வளரும் தேயிலை
  • நுவரெலியா 6000 அடிக்கு மேல் உயரமான பகுதியில் வளரும் தேயிலை

உசாத்துணை தொகு

  1. Sri Lanka Export Development Board, 2014, Industry Capability Report: Tea Sector, http://www.srilankabusiness.com/pdf/industrycapabilityreport_tea_sector.pdf

Further reading தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tea plantations in Sri Lanka
என்பதில் ஊடகங்கள் உள்ளன.