இலங்கையில் பகடிவதை

இலங்கையில் பகடிவதை

ஒரு கல்வி நிலையத்தின் மாணவருக்கோ ஊழியருக்கோ உடல் அல்லது உள ஊறுவிளைவிக்கும் அல்லது மனவலியையோ அச்சத்தையோ ஏற்படுத்தும் எந்தவொரு செயலும் இலங்கையில், பகடிவதை (Ragging in Sri Lanka) என அழைக்கப்படுகின்றது.[1] அரசு சார்பற்ற அமைப்பான கியூரின் (CURE) நிறுவுநர்களில் ஒருவரான அருசு அகர்வால், பகிடிவதையால் மிகமோசமான தாக்கத்திற்குள்ளாகிய நாடாக இலங்கையைக் குறிப்பிடுகின்றார்.[2][3]

வரலாறுதொகு

இலங்கையின் பண்டைய கல்வி நிலையங்களில் பகடிவதையோ அதற்கொத்த செயற்பாடோ நிலவியமைக்கான எந்தப் பதிவுகளும் இல்லை.[4] இலங்கையில் பகடிவதையானது பிரித்தானிய ஆதிக்கத்தின்போது அறிமுகப்படுத்தப்பட்டது.[5]

தற்போதைய நிலைதொகு

இலங்கையில் பகடிவதைக்கு எதிரான சட்டங்கள் இருந்தாலும், தற்போதும் பல பல்கலைக்கழகங்களில் பகடிவதை இடம்பெற்று வருகின்றது.[6][7] பொதுவாக, புதுமுக மாணவர்கள் பகடிவதைக் காலம் என அழைக்கப்படும் காலப்பகுதிக்கு மேனிலை மாணவர்களால் பகடிவதைக்குள்ளாக்கப்படுகின்றனர். இது பொதுவாக ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்கும்.[8]

அறிமுகம்தொகு

பகடிவதையின்போது, மேனிலை மாணவர்களுக்கும் புதுமுக மாணவர்களுக்குமிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக, அறிமுக நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு.[9]

உடைக் குறிமுறைப் பகடிவதைதொகு

பகடிவதைக் காலத்தின்போது, புதுமுக மாணவர்கள் குறித்த உடைக் குறிமுறையைப் பின்பற்றும்படி மேனிலை மாணவர்களால் வற்புறுத்தப்படுவதுண்டு. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மேனிலை மாணவர்கள் விதித்த உடைக் குறிமுறைப்படி, பாவாடை (Skirt) அணிய மறுத்த மாணவிகள் சிலர், மேனிலை மாணவர்களால் அறையப்பட்ட நிகழ்வை உடைக் குறிமுறைப் பகடிவதைக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.[10]

பாலியல் துன்புறுத்தல்தொகு

பாலியல் வசைச் சொற்களால் திட்டுதல், அவற்றைக் கூறும்படி வற்புறுத்துதல், ஆடைகளைக் களையும்படி வற்புறுத்துதல் போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் பகடிவதையில் மேற்கொள்ளப்படுகின்றன.[11]

உடலியல் துன்புறுத்தல்தொகு

அதிகப்படியான உடற்பயிற்சிகளைச் செய்ய வற்புறுத்துதல், தோப்புக்கரணம் போடச் செய்தல், மின்னேற்றுதல், தாக்குதல் போன்ற உடலியல் துன்புறுத்தல்கள் பகடிவதையில் மேற்கொள்ளப்படுகின்றன.[12][13]

அரசியலின் பங்குதொகு

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களில் உள்ள அரசியல் தலையீட்டுக்கும் பகடிவதைக்கும் தொடர்பு இருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.[14][15][16][17]

பாரிய நிகழ்வுகள்தொகு

 • 1974இல், வித்தியாலங்காரப் பல்கலைக்கழகத்தில் (களனிப் பல்கலைக்கழகம்) இடம்பெற்ற பகடிவதை தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியமையால் அலுவலர்கள் நால்வர் தண்டிக்கப்பட்டனர்.[18] மேலும், மாணவர்கள் 12 பேர் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், மூவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டனர்.[19]
 • 1975இல், பேராதனைப் பல்கலைக்கழகத்தில், பகடிவதையிலிருந்து தப்பிப்பதற்காக இராமநாதன் மண்டபத்தின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே குதித்த 22 அகவை நிரம்பிய மாணவியான உரூபா இரத்தினசீலி, இதன் காரணமாக முடக்குநோய்க்கு ஆளானார்.[20] இவருடைய பெண்குறியினுள் மேனிலை மாணவர்கள் மெழுகுவர்த்தியைச் செலுத்த முயன்றதால், இவர் விடுதியிலிருந்து வெளியே குதித்ததாகத் தெரியவந்தது.[21] இவர் 2002இல் தற்கொலை செய்துகொண்டார்.[22]
 • 1993இல், உருகுணை பல்கலைக்கழக மாணவரான சமிந்த புஞ்சிகேவா, பகடிவதை காரணமாக உயிரிழந்தார்.[20]
 • 1993இல், அக்குமனவைச் சேர்ந்த மாணவரான பிரசங்க நிரோசண, பகடிவதை காரணமாக உயிரிழந்தார்.[23]
 • 1997இல், உருகுணை பல்கலைக்கழகத்தில், மேனிலை மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.[20]
 • 1997இல், 21 அகவை நிரம்பிய, பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் மாணவரான செல்வவிநாயகம் வரப்பிரகாசு, கடுமையான பகடிவதை காரணமாக, சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார். இதற்குக் காரணமாக அமைந்த மேனிலை மாணவர் ஒருவருக்குச் சாவுத் தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டதுடன், இன்னொருவரிடம் தண்டப்பணம் அறவிடப்பட்டது.[24]
 • 1997இல், அம்பாறையில் அமைந்துள்ள ஆடி தொழினுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவரான கலும் துசார விசேதுங்க, கடுமையான உடற்பயிற்சிகளை நீண்ட நேரம் செய்ய வற்புறுத்தப்பட்டதாலும் அதிகப்படியாக மது அருந்தச் செய்யப்பட்டதாலும் உயிரிழந்தார்.[25]
 • 2002இல், சிரீ சயவர்தனபுர பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு முகாமைத்துவ மாணவரான சமந்த விதானகே, பகடிவதைக்கு எதிரான கலந்துரையாடலை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.[26]
 • 2006இல், பகடிவதைக்கு எதிரான கட்டளைக்கு மாணவர்கள் ஒத்துழைக்க மறுத்ததால், சிரீ சயவர்தனபுர பல்கலைக்கழகத் துணைவேந்தரான சந்திம விசேபண்டார பதவிவிலகினார்.[27]
 • 2011இல், உருகுணை பல்கலைக்கழக மாணவி ஒருவர், பகடிவதை காரணமாகப் பகுதியான முடக்குநோய்க்கு ஆளானார்.[28] இதற்குக் காரணமாக அமைந்த மாணவி பல்கலைக்கழகத்திலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.[29]
 • 2011இல், பேராதனைப் பல்கலைக்கழகப் புதுமுக மாணவர் ஒருவரைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதற்காக, மாணவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.[20]
 • 2013இல், பேராதனைப் பல்கலைக்கழகப் புதுமுக மாணவிகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதற்காக, இரண்டாம் ஆண்டு மாணவிகள் மூவருக்கு மூன்று கிழமைகளுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டது.[20]
 • 2015இல், இலங்கை சபரகமுவ பல்கலைக்கழக மாணவியான அமாலி சதுரிக்கா, பகடிவதை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார்.[30]
 • 2015இல், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உள் நாட்டு மருத்துவ நிறுவகத்தில், பகடிவதை தொடர்பான சச்சரவு காரணமாக மாணவர் ஒன்றியத்தை எதிர்த்ததால், 150இற்கு மேற்பட்ட ஒன்றிய உறுப்பினர்களால் தாக்கப்பட்டு, மாணவர்கள் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.[6]

பள்ளிக்கூடங்களில்தொகு

சட்டம்தொகு

இலங்கையில், 1998ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் ஏனைய வடிவங்களிலான வன்முறைகளைத் தடைசெய்யும் சட்டத்தின்படி, பகடிவதை ஒரு குற்றச்செயல் ஆகும்.[17]

பகடிவதை எதிர்ப்புதொகு

இலங்கையிலுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பகடிவதை எதிர்ப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.[32] அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 919ஆம் இலக்கச் சுற்றறிக்கைப்படி, உயர்கல்வி நிறுவனங்களிற்கு அனுமதி பெறும் மாணவர் ஒவ்வொருவரும் பகடிவதையைத் தொடங்கவோ தூண்டவோ செய்யவோ மாட்டேன் எனவும் பகடிவதைக்கு உதவமாட்டேன் எனவும் கட்டாயம் கையொப்பமிடவேண்டும்.[33]

புகழ்பெற்றவர்களின் வாழ்வில்தொகு

 • களனிப் பல்கலைக்கழகத்தில் கடுமையான பகடிவதையை எதிர்கொள்ள நேரிட்டதாக இலங்கை நடிகையான இயசோதா விமலதர்ம தெரிவித்திருந்தார்.[34]
 • பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பகடிவதைக்காளானதாக இலங்கைத் தமிழ் எழுத்தாளரான செங்கை ஆழியான் தெரிவித்திருந்தார்.[35]

இதனையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. Dinesha Samararatne (2013 மே 15). "Addressing causes of ragging in Lankan universities". The Island. பார்த்த நாள் 2016 பெப்ரவரி 28.
 2. Harsh Agarwal. "Evolution of Ragging". Coalition to Uproot Ragging from Education. பார்த்த நாள் 2016 மார்ச் 6.
 3. Brian Senewiratne (2011 மார்ச் 20). "Ragging At S. Thomas’". The Sunday Leader. பார்த்த நாள் 2016 மார்ச் 6.
 4. Lionel Wijesiri (2010 மே 12). "Say no to ragging". Daily News. பார்த்த நாள் 2016 பெப்ரவரி 28.
 5. Shameera Anuruddha Mahawattage (2005 செப்டம்பர் 14). "Ragging and Free Education". The Island. பார்த்த நாள் 2016 பெப்ரவரி 28.
 6. 6.0 6.1 Aanya Wipulasena (2015 செப்டம்பர் 13). "Ragging makes mockery of free education". Sunday Times. பார்த்த நாள் 2016 மார்ச் 1.
 7. "பகிடிவதை". தினக்குரல் (2014 நவம்பர் 15). பார்த்த நாள் 2016 மார்ச் 1.
 8. Lakna Paranamanna (2009 செப்டம்பர் 13). "Ragging ‘culture’ in universities". Nation. பார்த்த நாள் 2016 மார்ச் 6.
 9. ஈழ பாரதி (1989 மே 13). "'ராக்கிங்' எதிர்ப்பியக்கம் தேவை". திசை. pp. 2. 
 10. Maryam Azwer (2012 பெப்ரவரி 5). "Ragging: A Student’s Nightmare". The Sunday Leader. பார்த்த நாள் 2016 மார்ச் 6.
 11. "றாக்கிங் = பண்பாடு?". செய்திக்கதிர். 1986 மார்ச் 1. pp. 10-11. 
 12. "பகிடி வதையின் முடிவுப் பாதை!". புதிய பூமி. 1997 நவம்பர். pp. 3. 
 13. உதயபிரகாஷினி-நமசிவாயம (2000). "உயர் கல்வி நிறுவனங்களில் பகிடிவதை". ஆசிகள்: 57-59. 
 14. "Editorial, Dinamina Violence among university students". PresInform (2000 நவம்பர் 13). பார்த்த நாள் 2016 பெப்ரவரி 29.
 15. "பகிடிவதையை ஒழித்துக்கட்டி பல்கலைக்கழகங்களை காப்பாற்ற வேண்டும்". தினகரன் (2011 திசம்பர் 29). பார்த்த நாள் 2016 பெப்ரவரி 29.
 16. மன்னார் அமுதன் (2009 திசம்பர் 25). "ராகிங் எனும் பகிடிவதை - மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம்". திண்ணை. பார்த்த நாள் 2016 பெப்ரவரி 29.
 17. 17.0 17.1 பல்கலைக்கழக மாணவர் சாசனம். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு. 2012. பக். 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-955-583-115-4. 
 18. "V. W. Kularatne - J. P. U. M.". The Island (2003 நவம்பர் 13). பார்த்த நாள் 2016 பெப்ரவரி 28.
 19. "Death of V. W. Kularatne". The Island (2002 நவம்பர் 17). பார்த்த நாள் 2016 பெப்ரவரி 28.
 20. 20.0 20.1 20.2 20.3 20.4 பாலியல் மற்றும் பால்நிலைசார் வன்முறைகளைத் தடுத்தல் பல்கலைக்கழகங்களுக்கான மூலோபாயம். CARE International Sri Lanka. 2015. பக். 75-76. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-955-1138-07-3. 
 21. Dr. Brian Senewiratne (2011 மார்ச் 27). "Ragging – My Experience". The Sunday Leader. பார்த்த நாள் 2013 திசம்பர் 17.
 22. Kalinga Weerakkody (2003 சனவரி 11). "Campus hall stormed: academics held hostage". The Island. பார்த்த நாள் 2016 பெப்ரவரி 28.
 23. Kishani Samaraweera (2015 பெப்ரவரி 22). "Ragging contributes nothing". The Nation. pp. 7. 
 24. "பல்கலை மாணவர் பலி: சந்தேகநபரான மாணவருக்கு மரண தண்டனை". அத தெரண (2014 சூலை 4). பார்த்த நாள் 2016 பெப்ரவரி 29.
 25. Tharuka Dissanaike (1998 சனவரி 4). "What next?". Sunday Times. பார்த்த நாள் 2016 பெப்ரவரி 29.
 26. Laila Nasry (2002 நவம்பர் 17). "The rage, the pain". Sunday Times. பார்த்த நாள் 2016 பெப்ரவரி 29.
 27. Arthur Wamanan (2011 ஏப்ரல் 10). "‘Ragging is now an act of frustration’". The Nation. பார்த்த நாள் 2016 பெப்ரவரி 29.
 28. Imaad Majeed (2011 திசம்பர் 25). "Uni “Mafia” Behind Ragging". The Sunday Leader. பார்த்த நாள் 2016 பெப்ரவரி 29.
 29. Leon Berenger (2011 திசம்பர் 25). "Female student suspended: Ruhuna rag victim semi-paralysed in hospital". The Sunday Leader. பார்த்த நாள் 2016 பெப்ரவரி 29.
 30. ஏ. எச். சித்தீக் காரியப்பர் (2015 பெப்ரவரி 22). "மாணவி மரணம் தற்கொலை அல்ல! திடுக்கிடும் கடிதம்!". தினகரன். பார்த்த நாள் 2016 மார்ச் 1.
 31. "'ராகிங்'–கல்லூரி நிர்வாகம் கடும் நடவடிக்கை!". தினமுரசு. 1994 மே 15. pp. 3. 
 32. கெலும் பண்டார (2013 மார்ச் 30). "பகடிவதை குற்றச்சாட்டில் 13 மாணவர்கள் இடைநிறுத்தம்". தமிழ்மிரர். பார்த்த நாள் 2016 மார்ச் 1.
 33. பேராசிரியர் காமினி சமரநாயக்க (2010 சனவரி 15). "ஆணைக்குழு சுற்றறிக்கை இல. 919". பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு. பார்த்த நாள் 2016 மார்ச் 1.
 34. Kumar de Silva (2010 சனவரி 5). ""Acting is consciously being unconscious"-Yashodha". The Island. pp. 3. 
 35. செங்கை ஆழியான் (சூலை 2010). "சுயசரிதை 10: பல்கலைக்கழக றாக்கிங்". மல்லிகை (374): 11-13. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையில்_பகடிவதை&oldid=2063088" இருந்து மீள்விக்கப்பட்டது