இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை

யாழ்ப்பாண மாவட்டத்துக்கான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான கி. சிவநேசன் மார்ச் 5, 2008 வியாழக்கிழமை பிற்பகல் 1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் குண்டுத்தாக்குதலில் கொலைசெய்யப்பட்டார்[1]. மாங்குளத்திற்குத் தெற்காக 2 கிலோமீற்றர் தொலைவிலும் ஓமந்தையில் இருந்து 25 கிமீ தொலைவிலும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் சிவனேசனின் வாகான் ஓட்டுனர் பெரியண்ணன் மகேஸ்வரராஜா என்பபவரும் கொல்லப்பட்டார். இத்தாக்குதலை இலங்கை இராணுவத்தின் ஆள ஊடுருவும் அணி நடத்தியதாக விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கி. சிவநேசன் வடக்கு மாகாணத்தின் பனை அபிவிருத்தி கூட்டுறவின் நிர்வாகியாக 1996 இருந்து 2005 வரை கடைமையாற்றினார்[2]. ஏ-9 நெடுஞ்சாலை மூடப்படிருப்பதால் யாழ்ப்பாணம் கரவெட்டியிலிருந்து குடும்பத்துடன் மல்லாவியில் இவர் தங்கியிருந்தார். 2007 ஆம் ஆண்டு நடுப்பகுதியிலும் கிளைமோர்த் தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பியிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

தொகு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதன் மூலம் தமிழ் இனத்தின் உரிமைக்காக - விடுதலைக்காக குரல் கொடுப்பதை - போராடுவதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது[3]

நோர்வே கண்டனம்

தொகு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் படுகொலை செய்யப்பட்டமைக்கு நோர்வே கண்டனம் தெரிவித்துள்ளது[4].

மாமனிதர் விருது

தொகு

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கி. சிவநேசனுக்கு தமிழீழத்தின் அதியுயர் விருதான மாமனிதர் விருது வழங்கி[5] மலரஞ்சலி செலுத்தினார்[6].

மேற்கோள்கள்

தொகு
  1. Tamil MP is killed in Sri Lanka
  2. Jaffna TNA MP Sivanesan killed in DPU Claymore attack
  3. நாடாளுமன்ற உறுப்பினர்களைக் படுகொலை செய்வதால் விடுதலைக்கான குரலை தடுத்து நிறுத்திட முடியாது: த.தே.கூ.
  4. சிவநேசன் படுகொலைக்கு நோர்வே கண்டனம்
  5. சிவநேசனுக்கு "மாமனிதர்" விருது வழங்கி தமிழீழ தேசியத் தலைவர் மதிப்பளிப்பு
  6. LTTE leader pays tribute to Sivanesan MP

வெளி இணைப்புகள்

தொகு