இலங்கை முள்ளெலி

Chordata

இலங்கை முள்ளெலி (Ceylon spiny mouse-மசு பெர்னாண்டோனி) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும்.[2] இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1] இது சிங்கள மொழியில் சிறீலங்கா கடு கீன் மியா ( ශ්‍රී ලංකා ක‍ටු හීන් මීයා) என அழைக்கப்படுகிறது.

இலங்கை முள்ளெலி
Ceylon spiny mouse
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முரிடே
பேரினம்:
மசு (பேரினம்)
இனம்:
M. fernandoni
இருசொற் பெயரீடு
Mus fernandoni
(பிலிப்சு, 1932)

விளக்கம் தொகு

இதனுடைய உடல் நீளம் 9 முதல் 11 செ.மீ. ஆகும். வாலின் நீளம் 6 முதல் 7 செ.மீ. ஆகும். உடல் மேல் பகுதி சிவப்பு சாம்பல் நிறத்தில், சாம்பல் நிற தட்டையான முள்ளெலும்புகளை (ஒவ்வொன்றும் 11 மிமீ நீளம்) கொண்டுள்ளது. ஒன்றோடொன்று கலந்த மெல்லிய உரோமங்களைக் கொண்டுள்ளது. உடலின் கீழ்ப்பகுதி வெண்மையிலிருந்து சாம்பல் நிறமுடையது. பல நீண்ட கறுப்பு முடிகள் கொண்டது. காதுகள் கருமையானவை மற்றும் ஒப்பீட்டளவில் பெரியவை. நீள மூக்கு கூர்மையாக காணப்படும். வால் அடர் ஊதா நிறம் செதில்களுடன் உடலைவிட நீளமானது. வெட்டுப்பல் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

பரம்பல் தொகு

இலங்கை முள்ளெலி என்பது அழிந்து வரும் ஒரு சிற்றினமாகும். இது பின்வரும் இடங்களிலிருந்து மட்டுமே அறியப்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 de A. Goonatilake, W.L.D.P.T.S. (2019). "Mus fernandoni". IUCN Red List of Threatened Species 2019: e.T13961A22404354. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T13961A22404354.en. https://www.iucnredlist.org/species/13961/22404354. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. Myers, P., R. Espinosa, C. S. Parr, T. Jones, G. S. Hammond, and T. A. Dewey. 2023. The Animal Diversity Web (online). Accessed at https://animaldiversity.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_முள்ளெலி&oldid=3927876" இலிருந்து மீள்விக்கப்பட்டது