இலங்கை வெள்ளப்பெருக்கு, சனவரி 2011

இலங்கையின் கிழக்கு, மத்திய, மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்களில் 2011 சனவரி முற்பகுதியில் இருந்து பலத்த வெள்ளப்பெருக்கு, மற்றும் மண்சரிவு ஏற்பட்டது. பெரும் மழை காரணமாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை திருகோணமலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களும், அநுராதபுரம், மத்திய மாகாணத்தில் பதுளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களே வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் மற்றும் மண் சரிவினால் சனவரி 11 ஆம் நாள் வரையில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். 8 இலட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 22,532 குடும்பங்களைச் சேர்ந்த 86,344 பேர் 203 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்தது[1].

சனவரி 2011 இலங்கை வெள்ளப்பெருக்கு
நாள்சனவரி 2011-இன்று
அமைவிடம்மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, பொலன்னறுவை, அநுராதபுரம், பதுளை, கண்டி, நுவரெலியா
இறப்புகள்14

காரணம் தொகு

2011 சனவரி 8 சனிக்கிழமை முதல் ஆரம்பமான வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை நாடெங்கும், குறிப்பாக கிழக்கு, மட மத்திய மாகாணங்களில் பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. இந்த அதிகரித்த மழைப்பொழிவுக்கு லா-நினா எனப்படும் பசுபிக் கடல்மேற்பரப்பில் ஏற்படுகின்ற வெப்பநிலை மாற்றமே காரணம் என காலநிலையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குளங்கள் பெருக்கெடுப்பு தொகு

தொடர் மழை காரணமாக நாடெங்கணும் உள்ள 59 முக்கிய குளங்களில் 36 குளங்கள் பெருக்கெடுத்தன. அநுராதபுரத்தில் 7 குளங்கள் பெருக்கெடுத்ததோடு பதவிய மற்றும் ராஜாங்கனை குளங்களின் தலா இரு வான் கதவுகள் திறக்கப்பட்டன. மட்டக்களப்பில் 4 குளங்கள் பெருக்கெடுத்ததை அடுத்து உருகாமம் குளத்தின் இரு வான் கதவுகள் திறக்கப்பட்டன. அம்பாந்தோட்டையில் 8 குளங்களும் குருநாகலில் 5 குளங்களும் திருகோணமலையில் 2 குளங்களும் மன்னாரில் கட்டுக்கரை குளமும் பெருக்கெடுத்தன[2].

பாதிப்புகள் தொகு

மட்டக்களப்பு தொகு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மாவட்டத்தின் 75 வீதமான பகுதிகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சனவரி 10 காலை 08:30 மணி வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் 85.6 மிமீ மழை பெய்தது[3].

மேற்கோள்கள் தொகு

  1. "கிழக்கில் ஓயாத மழை : மக்கள் அவதி 14 பேர் பலி". தினகரன். 2011-01-11 இம் மூலத்தில் இருந்து 2011-01-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110115225954/http://thinakaran.lk/2011/01/11/_art.asp?fn=n1101111. பார்த்த நாள்: 2011-01-11. 
  2. "36 குளங்கள் பெருக்கெடுப்பு". tamil.news. 2011-01-08. http://tamil.news.lk/index.php?option=com_content&view=article&id=11911:--6----&catid=35:latest-news&Itemid=385. பார்த்த நாள்: 2011-01-11. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. >"Record rainfall in 100 years in Batticaloa District". டெய்லிநியூஸ். 2011-01-11. http://www.dailynews.lk/2011/01/11/news17.asp. பார்த்த நாள்: 2011-01-11. [தொடர்பிழந்த இணைப்பு]