இலட்சுமணன் நரசிம்மன்

இந்திய-அமெரிக்க தொழில் நிர்வாகி

இலட்சுமணன் நரசிம்மன் (Laxman Narasimhan, பிறப்பு 15 மே 1967)[1] என்பவர் ஒரு இந்திய-அமெரிக்க வணிக நிர்வாகி மற்றும் ஸ்டார்பக்ஸ் மற்றும் ரெக்கிட்டின் முன்னாள் முதன்மை செயல் அலுவலர் (சிஇஓ) ஆவார்.

இலட்சுமணன் நரசிம்மன்
2017 இல் நரசிம்மன்
பிறப்பு15 மே 1967 (1967-05-15) (அகவை 57)
புனே, இந்தியா
கல்விபுனே பொறியியல் கல்லூரி (பிடெக்)
பென்சில்வேனியா பல்கலைக்கழகம் (எம்.ஏ, எம்.பி.ஏ)
பட்டம்ஸ்டார்பக்ஸ் மற்றும் ரெக்கிட்டின் முன்னாள் முதன்மை செயல் அலுவலர்
முன்னிருந்தவர்ஹோவர்ட் ஷூல்ட்ஸ் (செயல்)
கெவின் ஜான்சன்
பின்வந்தவர்பிரையன் நிக்கோல்
பிள்ளைகள்2

இவர் முன்பு பெப்சிகோவின் தலைமை வணிக அதிகாரியாக (CCO) இருந்தார். இவர் 2022 அக்டோபரில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் இடைக்கால தலைமை செயல் அலுவலராக சேர்ந்தார், மேலும் 2023 ஏப்ரலில் ஹோவர்ட் ஷுல்ட்ஸ் தலைமை செயல் அலுவலராக பதவியேற்றார். 2024 ஆகத்தில் இவர் ஸ்டார்பக்சால் விடுவிக்கபட்டார்.[2][3]

துவக்ககால வாழ்க்கை

தொகு

நரசிம்மன் 15, மே, 1967 அன்று இந்தியாவின் புனேயில் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தார். புனே பொறியியல் கல்லூரியில் இயந்திரப் பொறியியலில் பட்டமும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள லாடர் இன்ஸ்டிடியூட்டில் சர்வதேச படிப்பில் முதுகலையும், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில், நிதித்துறையில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார்.[4][5]

தொழில்

தொகு

நரசிம்மன் 2012 வரை 19 ஆண்டுகள் மெக்கின்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார், அவர்களின் புது தில்லி . புது தில்லி அலுவலகத்தின் இயக்குநராகவும் பகுதியின் மேலாளராகவும் உயர்ந்தார்.[4] 2012 இல், இவர் பெப்சிகோவில் சேர்ந்தார், தலைமை வணிக அதிகாரியாக உயர்ந்தார்.[4]

நரசிம்மன் 2019 செப்டம்பரில் ரெக்கிட் பென்கிசரின் தலைமை செயல் அலுவலராக ராகேஷ் கபூருக்குப் பிறகு பொறுப்பேற்றார்.[5][6] "தனது முன்னோடியின் நிர்வாகத்தின் இறுதி ஆண்டுகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தவறான நடவடிக்கைகள் மற்றும் மந்தமான வளர்ச்சியைத் தொடர்ந்து, நிறுவனத்துக்கு புத்துயிரூட்ட திருப்புமுனையான ஒரு திட்டத்தை வகுத்தார்." இருப்பினும், 2022 செப்டம்பரில் நிறுவனம் எதிர்பாராத விதமாக நரசிம்மனின் "தனிப்பட்ட, குடும்ப காரணங்களை" மேற்கோள் காட்டி அவரது ராஜினாமாவை அறிவித்தது.

2022 செப்டம்பரில், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமை செயல் அலுவலராக நரசிம்மன் வருவார் என்று அறிவித்தது. 2022 மார்ச்சில் கெவின் ஜான்சன் பதவி விலகியதிலிருந்து இடைக்கால தலைமை செயல் அலுவலராக இருந்த ஹோவர்ட் ஷுல்ட்ஸுக்குப் பிறகு இவர் பதவியேற்றார்.[2][7] தலைமை செயல் அலுவலராக நரசிம்மன் பதவியேற்பதற்கு முன், என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை அறிய, ஆறு மாதங்கள் காபி கடை ஊழியராக பயிற்சி பெற்றார்.[8][9] தி நியூயார்க் டைம்ஸ் நரசிம்மனை, ஷூல்ட்ஸை விட ஸ்டார்பக்ஸ் தொழிற்சங்கமயமாக்கத்துக்கு போதுமான எதிர் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று விவரித்துள்ளது.[10]

2024 ஆகத்தில், ஸ்டார்பக்ஸ் நரசிம்மன் நிறுவனத்தை விட்டு உடனடியாக வெளியேறுவார் என்று அறிவித்தது, அவருக்குப் பதிலாக சிபொட்டில் தலைமை செயல் அலுவலர் பிரையன் நிக்கோல் நியமிக்கப்பட்டார்.

நரசிம்மன் மாலை 6 மணிக்கு மேல் வேலை செய்வதில்லை என்று கூறி தலைப்புச் செய்தியாக ஆனார்.[11]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

நரசிம்மனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன், கனெக்டிகட்டின் கிரீன்விச்சில் வசிக்கிறார்.[12] இவர் ஆறு மொழிகள் பேசக்கூடியவர்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Reckitt boss Laxman Narasimhan: Growing up in India, you learn resilience". The Times. 1 May 2022. https://www.thetimes.co.uk/article/reckitt-boss-laxman-narasimhan-growing-up-in-india-you-learn-resilience-3lbckn77h. 
  2. 2.0 2.1 "Starbucks names a new chief executive.". The New York Times. 2022-09-01. https://www.nytimes.com/2022/09/01/business/dealbook/starbucks-ceo.html. 
  3. Lucas, Amelia (2024-08-14). "Starbucks is giving incoming CEO Brian Niccol $85 million in cash and stock as he departs Chipotle". CNBC (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-15.
  4. 4.0 4.1 4.2 "Laxman Narasimhan". World Economic Forum. பார்க்கப்பட்ட நாள் 14 June 2019.
  5. 5.0 5.1 5.2 O'Dwyer, Michael (12 June 2019). "Reckitt poaches Pepsi executive as new boss". பார்க்கப்பட்ட நாள் 14 June 2019 – via telegraph.co.uk.
  6. "The Board – RB". rb.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-18.
  7. "Starbucks's new CEO will work in cafes once a month". Washington Post. https://www.washingtonpost.com/business/2023/03/24/starbucks-ceo-barista-shift-frontline-work/. 
  8. "Starbucks new CEO reveals his favorite coffee order after spending 6 months working side by side with baristas". Fortune (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-28.
  9. "Starbucks CEO Laxman Narasimhan is making store-level changes after training as a barista". Nation's Restaurant News (in ஆங்கிலம்). 2023-09-28. பார்க்கப்பட்ட நாள் 2023-11-28.
  10. "Starbucks and Union Agree to Work Out Framework for Contract Talks". The New York Times. 28 February 2024. https://www.nytimes.com/2024/02/27/business/economy/starbucks-workers-united-union.html. 
  11. "Who Is Laxman Narasimhan, Recently Fired Starbucks' Indian-Origin CEO". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2024-08-15.
  12. "Laxman Narasimhan". outstanding50award. Archived from the original on 23 September 2019. பார்க்கப்பட்ட நாள் 23 September 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமணன்_நரசிம்மன்&oldid=4075829" இலிருந்து மீள்விக்கப்பட்டது