இலாசுகரி பசார்
இலாசுகரி பசார் (Lashkari Bazar) என்பது ஆப்கானித்தானில் இலாசுகர் காவில் அமைந்துள்ள கசனவித்து பேரரசின் ஆட்சியாளர்களின் அரண்மனை குடியிருப்பு ஆகும். அசல் பெயர் அநேகமாக அல்-அசுகர் என்பதாக இருக்கலாம்.[2]
இலாசுகரி பசார் | |
---|---|
தொல்லியல் தளம் | |
ஆள்கூறுகள்: 31°33′57″N 64°21′03″E / 31.565961°N 64.350822°E | |
நாடு | ஆப்கானித்தான் |
மாகாணம் | எல்மந்து |
வரலாறு
தொகுதளத்தின் சில கட்டமைப்பு கூறுகள் பார்த்தியப் பேரரசின் காலத்தைச் சேர்ந்தவையாகக் குறிப்பிடுகிறது. [2] மைய அரண்மனை (32x52 மீட்டர்) சமனிட் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது ( பொ.ச.819-999 ).[2] 661 ஆம் ஆண்டிலேயே அரேபியர்களால் இப்பகுதி கைப்பற்றப்பட்டது. மேலும் பெரிய மற்றும் பணக்கார நகரமாக வளர்ந்தது.[3]
தென்பகுதியிலுள்ள மிகப் பெரிய அரண்மனை (170x100 மீட்டர்) கசினியின் மகுமூதுவால் (பொ.ச.998-1030) நிறுவப்பட்டது. மேலும் அவரது மகன் முதலாம் மசூத் (பொ.ச.1030-1041) மூலம் விரிவாக்கப்பட்டது.[2][4][5][3] இலாசுகரி பசாரில் உள்ள அரண்மனைகள் கசனவித்து ஆட்சியாளர்களின் குளிர்காலத் தங்குமிடமாக இருந்தன. அதன் தலைநகரம் கசினியில் இருந்தது.[3] தெற்கு அரண்மனைச் சுவரின் மேற்பரப்புப் பூச்சுகள், ஓவியங்கள், சுதை ஓவியங்கள், செதுக்கப்பட்ட பளிங்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.[2] சுமார் 100 மீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய சந்தைத் தெரு, அரண்மனை அமைப்புடன் இணைகிறது.[2]
வடக்கு அரண்மனை பிற்கால ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது.[3][2]
பிற்கால குரித் வம்சத்தினர் பொ.ச.1151இல் அரண்மனைகளை சூறையாடினர். ஆனாலும் பின்னர் அவற்றை மீட்டெடுத்தனர். மேலும் கட்டிடக்கலையின் சில பகுதிகள் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது.[3][2] அவர்கள் தெற்கே சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலா-இ-போஸ்ட் கோட்டையை கட்டிடக்கலை வளைவுடன் கட்டினார்கள்.
சமீபத்தில் இடிபாடுகள் தலிபான் வன்முறையில் இருந்து தப்பி ஓடிய ஆப்கானித்தான் அகதிகளால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டன.[6]
-
இலாசுகரி பசாரின் அரண்மனை சுவர் ஓவியங்களில் கசனவித்துகளின் உருவங்கள்
-
அரண்மனை சுவர்களில் காணப்படும் ஓவியம், இலாசுகரி பசார்
-
அரண்மனை சுவர்களில் காணப்படும் ஓவியம், இலாசுகரி பசார்
சான்றுகள்
தொகு- ↑ Schlumberger, Daniel (1952). "Le Palais ghaznévide de Lashkari Bazar". Syria 29 (3/4): 257. பன்னாட்டுத் தர தொடர் எண்:0039-7946. https://www.jstor.org/stable/4390312.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Petersen, Andrew (1996). Dictionary of Islamic Architecture. Routledge. pp. 161–162.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 Kipfer, Barbara Ann (29 June 2013). Encyclopedic Dictionary of Archaeology (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 576. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4757-5133-8.
- ↑ Schlumberger, Daniel (1952). "Le Palais ghaznévide de Lashkari Bazar". Syria 29 (3/4): 251–270. பன்னாட்டுத் தர தொடர் எண்:0039-7946. https://www.jstor.org/stable/4390312.
- ↑ Fehérvári, Géza; Shokoohy, Mehrdad (1980). "ARCHEOLOGICAL NOTES ON LASHKARI BAZAR". Wiener Zeitschrift für die Kunde des Morgenlandes 72: 83–95. பன்னாட்டுத் தர தொடர் எண்:0084-0076. https://www.jstor.org/stable/23866273.
- ↑ "Afghan war displaced settle in lost city". South China Morning Post.