இலாந்தனைடு குளோரைடுகள்

இலாந்தனைடுகளும் குளோரினும் சேர்ந்து உருவாகும் குளோரைடுகள்

இலாந்தனைடு குளோரைடுகள் (Lanthanide chlorides) என்பவை இலாந்தனைடு தனிமங்களான இலந்தனத்திலிருந்து இலூட்டீசியம் வரையிலான தனிமங்கள் குளோரினுடன் வினைபுரிந்து உருவாகக்கூடிய இரசாயன சேர்மங்களின் குழுவைக் குறிக்கும். இந்த சேர்மங்களில் இலாந்தனைடு தனிமங்கள் பொதுவாக +2 மற்றும் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலைகளில் இருக்கும். குறைந்த ஆக்சிசனேற்ற நிலைகளில் உள்ள இலாந்தனைடுகள் கொண்ட சில சேர்மங்களும் உள்ளன.

இலாந்தனைடு இருகுளோரைடுகள் தொகு

நியோடிமியம், சமாரியம், யூரோப்பியம், டிசிப்ரோசியம், தூலியம் மற்றும் இட்டெர்பியம் ஆகிய இலாந்தனைடுகள் ஈரிணைதிற குளோரைடுகளை உருவாக்குகின்றன. நாப்தலீனில் உள்ள டெட்ரா ஐதரோபியூரான் அல்லது இலித்தியம் உலோகத்தைப் பயன்படுத்தி மூவிணைதிற குளோரைடுகளை ஒடுக்குதல் வினைக்கு உட்படுத்தி குறைப்பதன் மூலம் ஈரிணைதிற குளோரைடுகளைத் தயாரிக்கலாம்:[1]

LnCl3 + Li → LnCl2 + LiCl (Ln=Nd,Sm,Eu)

மூவிணைதிற குளோரைடை உலோகம் அல்லது ஐதரசனைப் பயன்படுத்தி ஒடுக்குதல் வினைக்கு உட்படுத்தி குறைப்பதன் மூலம் ஈரிணைதிற குளோரைடுகளைத் தயாரிக்கலாம்:[2][3]

2 LnCl3 + Ln → 3 LnCl2 (Ln=Nd,Sm,Eu?,Dy,Tm,Yb)
2 LnCl3 + H2 → 2 LnCl2 + 2 HCl (Ln=Nd,Sm,Eu,Dy,Tm,Yb)

இலாந்தனைடு முக்குளோரைடு தொகு

ஆக்சைடு அல்லது கார்பனேட்டை ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைப்பதன் மூலம் இலாந்தனைடு முக்குளோரைடுகளை பொதுவாகத் தயாரிக்கலாம். இவை ஆக்சைடுகளை உயர்வெப்பக்கார்பன் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முக்குளோரைடுகளின் நீரற்ற வடிவங்களை உருவாக்க, அம்மோனியம் குளோரைடு வழி எடுக்கப்படுகிறது. நீரிலி நிலை இலாந்தனைடு முக்குளோரைடுகள் அதிக உருகு நிலை கொண்டவையாக பொதுவாக வெளிர் நிறத்தில் இருக்கும்.

இலாந்தனைடு முக்குளோரைடுகள்[4]
MCl3 நிறம் கட்டமைப்பு வகை f-கூடு கட்டமைப்பு
LaCl3 நிறமற்றது UCl3-வகை f0
CeCl3 நிறமற்றது UCl3-வகை f1, இருமை
PrCl3 பச்சை UCl3-வகை f2, மும்மை
NdCl3 இளஞ்சிவப்பு UCl3-வகை f3, நாற்கூட்டு
PmCl3 பச்சை UCl3-வகை f4, ஐம்மை
SmCl3 மஞ்சள் UCl3-வகை f5, அறுவன்
EuCl3 மஞ்சள் UCl3-வகை f6, ஏழன்
GdCl3 நிறமற்றது UCl3-வகை f7, எண்மி
TbCl3 வெண்மை PuBr3-வகை f8, ஏழன்
DyCl3 வெண்மை AlCl3-வகை f9, அறுவன்
HoCl3 மஞ்சள் AlCl3-வகை f10, ஐம்மை
ErCl3 ஊதா AlCl3-வகை f11, நாற்கூட்டு
TmCl3 மஞ்சள் AlCl3-வகை f12, மும்மை
YbCl3 நிறமற்றது YCl3-வகை f13, இருமை
LuCl3 நிறமற்றது AlCl3-வகை f14

மேற்கோள்கள் தொகு

  1. Rossmainth, Kurt (1979-01-01). "Herstellung der klassischen Seltenerd(II)-chloride in Lösung". Anorganische, Struktur- und Physikalische Chemie 110 (4): 109–114. doi:10.1007/BF00903752. 
  2. Gerd Meyer, Lester R. Morss (1991). Synthesis of lanthanide and actinide compounds. Springer. பக். 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7923-1018-7. https://books.google.com/books?id=bnS5elHL2w8C&pg=PA161. 
  3. Brauer, Georg; Baudler, Marianne (1975). Handbuch der Präparativen Anorganischen Chemie, Band I. (3rd ). Stuttgart: Ferdinand Enke. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-432-02328-6. 
  4. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாந்தனைடு_குளோரைடுகள்&oldid=3775343" இலிருந்து மீள்விக்கப்பட்டது