இலால்கர் அரண்மனை

இந்தியக் கட்டிடங்கள்

இலால்கர் அரண்மனை (Lalgarh Palace) என்பது இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள பிகானேரில் உள்ள ஒரு அரண்மனையாகும். தற்போது இது பாரம்பரிய விடுதியாக உள்ளது. இது 1902 மற்றும் 1926 க்கு இடையில் பிகானேர் மகாராஜா சர் கங்கா சிங்கிற்காக கட்டப்பட்டது. இலட்சுமி நிவாஸ் அரண்மனை இலால்கர் அரண்மனையின் ஒரு பகுதியாகும். ஆனால் அது குத்தகைக்கு கொடுக்கப்பட்டு சமீபத்தில் ஒரு பாரம்பரிய விடுதியாக பயன்படுத்தப்படுகிறது.

இலால்கர் அரண்மனை
இலால்கர்
இலால்கர் அரண்மனை is located in இராசத்தான்
இலால்கர் அரண்மனை
இராஜஸ்தானில் அரண்மனையின் அமைவிடம்
பொதுவான தகவல்கள்
வகைஅரண்மனை, விடுதி
கட்டிடக்கலை பாணிஉத்சா கலை, ராஜ்புத் கட்டிடக்கலை
நகரம்பிகானேர்
நாடுஇந்தியா
ஆள்கூற்று28°02′28″N 73°19′54″E / 28.0410°N 73.3316°E / 28.0410; 73.3316
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக் கலைஞர்(கள்)சாமுவேல் சுவின்டன் ஜாகப்

வரலாறு

தொகு

இந்த அரண்மனை 1902 மற்றும் 1926 க்கு இடையில் இந்தோ சரசனிக் பாணியில் கட்டப்பட்டது. மகாராஜா கங்கா சிங் (1881-1942) சிறுவயதாக இருந்தபோது, தற்போதுள்ள ஜுனாகாத் கோட்டை மன்னருக்குப் பொருத்தமற்றதாகக் கருதியதால், இந்த கட்டிடம் பிரித்தனியக் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சிப் பிரதிநிதியால் [1] நிறுவப்பட்டது. கங்கா சிங் தனது தந்தை மகாராஜா லால் சிங்கின் நினைவாக அரண்மனைக்கு பெயரிட வேண்டும் என்று முடிவு செய்தார். [2]

கங்கா சிங், வேட்டையாடுவதற்காக புகழ்பெற்றவர். [3] இவருடன் வேட்டையாடுவதற்காக அரண்மனைக்கு வந்த 1920 இல் ஜார்ஜஸ் கிளெமென்சோ, ராணி மேரி, ஐந்தாம் ஜார்ஜ், ஹார்டிங் பிரபு, இர்வின் பிரபு உட்பட பல விருந்தினர்களுக்கு விருந்தளித்தது. அரண்மனையின் முதல் குறிப்பிடத்தக்க விருந்தினராக கர்சன் பிரபு இருந்தார்.

 
இரவில் அரண்மனையின் தோற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. Patnaik, pages 27 and 58.
  2. Crites, page 94.
  3. Patnaik, pages 67.

இலக்கியத்தில்

தொகு
  • Crump, Vivien; Toh, Irene (1996). Rajasthan (hardback). London: Everyman Guides. p. 400 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85715-887-3.
  • Michell, George; Martinelli, Antonio (2005). The Palaces of Rajasthan. London: Frances Lincoln. p. 271 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7112-2505-3.
  • Crites, Mitchell Shelby; Nanji, Ameeta (2007). India Sublime – Princely Palace Hotels of Rajasthan (hardback). New York: Rizzoli. p. 272 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8478-2979-8.
  • Patnaik, Naveen (1990). A Desert Kingdom – The Rajputs of Bikaner (hardback). London: Weidenfeld and Nicolson. p. 120 pages. No known ISBN.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலால்கர்_அரண்மனை&oldid=4086777" இலிருந்து மீள்விக்கப்பட்டது