இலித்தியம் மாலிப்டேட்டு

இலித்தியம் மாலிப்டேட்டு (Lithium molybdate) என்பது Li2MoO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். முக்கியமாக இது தொழில்துறை குளிரூட்டிகளில் பல வகையான வினைத்தடுப்பானாக பயன்படுத்தப்படுகிறது.

இலித்தியம் மாலிப்டேட்டு
இனங்காட்டிகள்
13568-40-6 Y
ChemSpider 3346702 Y
InChI
  • InChI=1S/2Li.Mo.4O/q2*+1;;;;2*-1 Y
    Key: NMHMDUCCVHOJQI-UHFFFAOYSA-N Y
  • InChI=1/2Li.Mo.4O/q2*+1;;;;2*-1/r2Li.MoO4/c;;2-1(3,4)5/q2*+1;-2
    Key: NMHMDUCCVHOJQI-FFXFYZCHAF
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6093689
  • [Li+].[Li+].[O-][Mo]([O-])(=O)=O
பண்புகள்
Li2MoO4
வாய்ப்பாட்டு எடை 173.82 கி/மோல்
தோற்றம் வெண்மையான நெடியற்ற தூள்
நீருறிஞ்சும் அல்லது ஒளிபுகவிடும் படிகம்
அடர்த்தி 3.07 கி/செ.மீ3 (தூய படிகம்), 2.66 கி/செ.மீ3 (நீரேற்றுப் படிகம்)
உருகுநிலை 705 °C (1,301 °F; 978 K)
நன்றாக கரைகிறது.
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் மாலிப்டேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பயன்கள்

தொகு

தொழிற்சாலை மைய குளிரூட்டி அமைப்புகளில் இலித்தியம் புரோமைடை ஈர்க்கும் கருவிகளில் அரிமானத் தடுப்பியாக இலித்தியம் மாலிப்டேட்டு பயன்படுத்தப்படுகிறது. நிறமற்ற ஒளிபுகும் நீர்மமாகவும், வெண்மை நிறப் படிகத் தூளாகவும் இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது. இரு வடிவங்களிலும் நச்சுப் பொருளாக இது வகைப்படுத்தப்படவில்லை[1].

கடுங்குளிர் ஃபோனான் – மினுமினுப்பு உணரிகளில் Li2MoO4 படிகங்கள் பயன்படுகின்றன. இங்கு இவை சில அரிய அணுக்கரு செயல்முறைகளை ஆராய்வதற்குப் பயன்படுகின்றன. குறையிழப்பு மின்கடத்தாப் பண்புகள் காரணமாக Li2MoO4 பீங்கானை வானலை வாங்கிகளில் பயன்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் மரபார்ந்த சிட்டங்கட்டல் முறைக்குப் பதிலாக அறைவெப்பநிலையில் அடர்த்தல் முறைக்கு சாத்தியமுள்ளதாக நம்பப்படுகிறது[2]


மேற்கோள்கள்

தொகு
  1. Barinova, O. P.; Danevich, F. A.; Degoda, V. Ya.; Kirsanova, S. V.; Kudovbenko, V. M.; Pirro, S.; Tretyak, V. I. (2010-01-21). "First test of crystal as a cryogenic scintillating bolometer". Nuclear Instruments and Methods in Physics Research Section A: Accelerators, Spectrometers, Detectors and Associated Equipment 613 (1): 54–57. doi:10.1016/j.nima.2009.11.059. http://www.sciencedirect.com/science/article/pii/S0168900209022712. 
  2. Kähäri, Hanna; Ramachandran, Prasadh; Juuti, Jari; Jantunen, Heli. "Room-Temperature Densified Li2MoO4 Ceramic Patch Antenna and the Effect of Humidity" (in en). International Journal of Applied Ceramic Technology: n/a–n/a. doi:10.1111/ijac.12615. பன்னாட்டுத் தர தொடர் எண்:1744-7402. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/ijac.12615/abstract.