இலித்தியம் புரோமைடு
இலித்தியம் புரோமைடு (Lithium bromide) என்பது LiBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியமும் புரோமினும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தின் அதிகமான நீர் உறிஞ்சும் திறனைக் கொண்டிருப்பதால் இது பல குளிர் சாதானக் கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
7550-35-8 | |
ChemSpider | 74049 |
EC number | 231-439-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82050 |
வே.ந.வி.ப எண் | OJ5755000 |
| |
UNII | 864G646I84 |
பண்புகள் | |
LiBr | |
வாய்ப்பாட்டு எடை | 86.845(3) கி/மோல் |
தோற்றம் | வெண்மையான திண்மம் நீர் உறிஞ்சும் |
அடர்த்தி | 3.464 கி/செ.மீ3 |
உருகுநிலை | 552 °C (1,026 °F; 825 K) |
கொதிநிலை | 1,265 °C (2,309 °F; 1,538 K) |
143 கி/100 மி.லி (0 °செ) 166.7 கி/100 மி.லி (20 °செ) 266 கி/100 மி.லி (100 °செ) | |
கரைதிறன் | மெத்தனால், எத்தனால், ஈதர், அசிட்டோன்ஆகியனவற்றில் கரையும். பிரிடினில் சிறிதளவு கரையும். |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.784 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-350.3 கியூ/மோல் |
Std enthalpy of combustion ΔcH |
-157 கியூ/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
66.9 யூ/மோல் K |
வெப்பக் கொண்மை, C | 51.88 யூ/மோல் K |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
1800 மி.கி/கி.கி (வாய்வழி, எலி)[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இலித்தியம் புளோரைடு இலித்தியம் குளோரைடு இலித்தியம் அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் புரோமைடு பொட்டாசியம் புரோமைடு ருபீடியம் புரோமைடு சீசியம் புரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பும் பண்புகளும்
தொகுஇலித்தியம் கார்பனேட்டுடன் ஐதரோ புரோமிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்துவதால் இலித்தியம் புரோமைடைத் தயாரிக்கலாம். இவ்வுப்பு மற்ற கார உலோக புரோமைடுகள் போலில்லாமல் பல படிக வடிவ நீரேற்றுகளாக உருவாகிறது[3] . இலித்தியம் புரோமைடின் நீரிலி வடிவம் சோடியம் குளோரைடு போல கனசதுர படிகங்களாக உருவாகிறது.
இலித்தியம் ஐதராக்சைடு மற்றும் ஐதரோபுரோமிக் அமிலம் ( ஐதரசன் புரோமைடின் நீர்க் கரைசல்) ஆகியன தண்ணீர் முன்னிலையில் இலித்தியம் புரோமைடை வீழ்படிவாக்குகின்றன.
LiOH + HBr → LiBr + H2O
பயன்கள்
தொகுகுளிர் சாதானக் கருவிகளில் ஈரம் உலர்த்தியாக இலித்தியம் புரோமைடு பயன்படுத்தப்படுகிறது. இவ்வுப்புகளை நீருடன் சேர்த்து உட்கவர் குளிர்விப்பிகளில் பயன்படுத்துகிறார்கள். தவிர இவை கரிம தொகுப்பு வினைகளில் வினைப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக இது சில மருந்துகளுடன் கூட்டு விளைபொருளாக மீள்நிகழ் வினையுடன் உருவாகிறது.[2]
மருத்துவப் பயன்கள்
தொகுஆரம்பகால 1990 களில் இலித்தியம் புரோமைடு தூக்க மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1940 களில் இந்தப்பயன்பாடு குறைந்து போனது. ஏனெனில், உப்புக்கு மாற்றாக இதைப் பயன்படுத்திய சில இதய நோயாளிகள் பிறகு இறந்து போனார்கள்.[4]
இலித்தியம் கார்பனேட்டு மற்றும் இலித்தியம் குளோரைடு உப்புகள் போல இதுவும் இருமுனைக் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு 225 மில்லி கிராம் இலித்தியம் புரோமைடு கொடுத்துவந்தால் புரோமியம் நோய்க்கு ஆளாக நேரிடும்.
தீங்குகள்
தொகுஇலித்தியம் உப்புகள் அரிப்புத்தன்மையும் உளவியல் சார்ந்த நோய்களுக்கு காரணமாகவும் இருக்கின்றன. இலித்தியம் புரோமைடு உப்பானது நீரில் கரையும் போது வெப்பத்தை வெளிப்படுத்துகிறது. ஏனெனில் இது, கரைசலின் எதிர் உள்ளுறை வெப்பத்தைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://chem.sis.nlm.nih.gov/chemidplus/rn/7550-35-8
- ↑ 2.0 2.1 Ulrich Wietelmann, Richard J. Bauer "Lithium and Lithium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH: Weinheim.
- ↑ Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
- ↑ Bipolar disorder
வெளி இணைப்புகள்
தொகு- "A PDF file from GFS Chemicals, a supplier of lithium bromide" (PDF). Archived from the original (PDF) on 2006-03-16. பார்க்கப்பட்ட நாள் 2005-09-15.