இலித்தியம் அயோடைடு
இலித்தியம் அயோடைடு (Lithium iodide) என்பது LiI என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிம சேர்மமாகும். இலித்தியமும் அயோடினும் இணைந்து இச்சேர்மம் உருவாகிறது. காற்றில் திறந்து வைக்கும்போது அயோடைடு அயோடினாக ஆக்சிசனேற்றம்[2] அடைவதால் இது மஞ்சள் நிறமாக மாறுகிறது. சோடியம் குளோரைடு படிகமாதலின் மையக்கருத்தைப் பின்பற்றியே இலித்தியம் அயோடைடும் படிகமாகிறது[3] Various hydrates are also known.[4]
இனங்காட்டிகள் | |
---|---|
10377-51-2 | |
ChemSpider | 59699 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 66321 |
| |
பண்புகள் | |
LiI | |
வாய்ப்பாட்டு எடை | 133.85 கி/மோல் |
தோற்றம் | திடரூப வெண்படிகம் |
அடர்த்தி | 4.076 கி/செமீ3 (நீரற்ற) 3.494 கி/செமீ3 (டிரைஐதரேட்டு) |
உருகுநிலை | 469 °C (876 °F; 742 K) |
கொதிநிலை | 1,171 °C (2,140 °F; 1,444 K) |
151 கி/100 மிலீ (0 °செ) 167 கி/100 மிலீ (25 °செ) 433 கி/100 மிலீ (100 °செ) [1] | |
கரைதிறன் | எத்தனால், புரோபனால், ஈத்தேன்டையால், அம்மோனியா இவற்றில் கரையும் |
மெத்தனால்-இல் கரைதிறன் | 343 கி/100 மிலீ (20 °செ) |
அசிட்டோன்-இல் கரைதிறன் | 42.6 கி/100 மிலீ (18 °செ) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.955 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-2.02 கிஜூ/கி அல்லது -270.48 கிஜூ/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
75.7 ஜூ/மோல் கெ |
வெப்பக் கொண்மை, C | 0.381 ஜூ/கி கெ அல். 54.4 ஜூ/மோல் கெ |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
தீப்பற்றும் வெப்பநிலை | புகையாது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இலித்தியம் புளோரைடு இலித்தியம் குளோரைடு இலித்தியம் புரோமைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் அயோடைடு பொட்டாசியம் அயோடைடு உரூபிடியம் அயோடைடு சீசியம் அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகுஉயர்வெப்ப மின்கலன்களில் இலித்தியம் அயோடைடு மின்பகுளியாகப் பயனாகிறது. மேலும் செயற்கையாக இதயத்துடிப்பை முடுக்கிவிடக்கூடிய நீண்ட கால பயன்பாட்டு மின்கலன்களில் இது பயனாகிறது. திடரூப இலித்தியம் அயோடைடு நியூட்ரான்களை கண்டறியும் ஒளிர்பொருளாக விளங்குகிறது[5]. அயோடினுடன் சேர்ந்து அயோடின் கலவையாகவும் சூரிய மின்கலன்களில் சாய உணர் மின்பகுளியாகவும் இது பயன்படுகிறது.
கரிம தொகுப்பு வினைகளில் கார்பன் – ஆக்சிசன் பிணைப்பில் பிளவை உண்டாக்க உதவுகிறது. உதாரணமாக மெத்தில் எசுத்தர்களை கார்பாக்சிலிக் அமிலங்களாக மாற்றுவதில் பயன்படுகிறது:[6].
- RCO2CH3 + LiI + H2O → RCO2H + LiOH + CH3II
இலித்தியம் அயோடைடு இட அமைப்பியல் ஆய்வுகளில் முகவராக பயன்படுகிறது. சிறுநீரக நச்சுத்தன்மை காரணமாக தற்பொழுது இம்முறை கைவிடப்பட்டு இதற்குப் பதிலாக கரிம அயோடின் மூலக்கூறுகள் பயன் படுத்தப்படுகின்றன. கனிம அயோடின் கரைசல்களால் அதியூடழுத்தம், உயர் பாகுத்தன்மை போன்ற துன்பங்கள் விளைகின்றன[7] .
மேற்கோள்கள்
தொகு- ↑ Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
- ↑ "A PDF file from ESPICorp Inc., a supplier of lithium iodide" (PDF). Archived from the original (PDF) on 2008-03-09. பார்க்கப்பட்ட நாள் 2005-09-16.
- ↑ Wells, A.F. (1984) Structural Inorganic Chemistry, Oxford: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-855370-6.
- ↑ Ulrich Wietelmann, Richard J. Bauer "Lithium and Lithium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH: Weinheim. எஆசு:10.1002/14356007.a15_393.
- ↑ Some lithium iodide phosphors for slow neutron detection, K. P. Nicholson et al. Br. J. Appl. Phys. 6 104-106 (1955) எஆசு:10.1088/0508-3443/6/3/311
- ↑ André B. Charette, J. Kent Barbay, Wei He "Lithium Iodide" in Encyclopedia of Reagents for Organic Synthesis, 2005, John Wiley & Sons. எஆசு:10.1002/047084289X.rl121.pub2
- ↑ Hrvoje Lusic and Mark W. Grinstaff. X-ray-Computed Tomography Contrast Agents| Chem. Rev. 2013, 113 pp. 1641-1666.
வெளி இணைப்புகள்
தொகு- "Webelements – Lithium Iodide". பார்க்கப்பட்ட நாள் 2005-09-16. -->
- "Composition of LITHIUM IODIDE - NIST". பார்க்கப்பட்ட நாள் 2006-02-03. -->