இலித்தியம் புளோரைடு

இலித்தியம் புளோரைடு (Lithium fluoride) என்பது LiF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது நிறமற்ற திடப்பொருளாகும். படிக அளவு குறையும்போது வெள்ளை நிறமாக மாறுகிறது. இதன் கட்டமைப்பு சோடியம் குளோரைடுக்கு ஒப்பானது, ஆனால் தண்ணீரில் மிகவும் குறைவாக கரையும். இலித்தியம் புளோரைடு முக்கியமாக உருகிய உப்புகளின் ஓர் அங்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.[4] இலித்தியம் மற்றும் புளோரின் இரண்டும் இலேசான தனிமங்களாகவும் புளோரின் அயனி அதிக வினைத்திறன் கொண்டதாகவும் இருப்பதால், தனிமங்களிலிருந்து இலித்தியம் புளோரைடு உருவாகிறது. பெரிலியம் ஆக்சைடுக்கு அடுத்தபடியாக நிறைக்கு எதிராக உயர்ந்த அளவு ஆற்றலை இச்சேர்மம் வெளியிடுகிறது.

இலித்தியம் புளோரைடு
Lithium fluoride
Lithium fluoride boule
இலித்தியம் புளோரைடு
__ Li+     __ F

__ Li+     __ F
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் புளோரைடு
இனங்காட்டிகள்
7789-24-4 Y
ChemSpider 23007 Y
EC number 232-152-0
InChI
  • InChI=1S/FH.Li/h1H;/q;+1/p-1 Y
    Key: PQXKHYXIUOZZFA-UHFFFAOYSA-M Y
  • InChI=1/FH.Li/h1H;/q;+1/p-1
    Key: PQXKHYXIUOZZFA-REWHXWOFAG
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 224478
வே.ந.வி.ப எண் OJ6125000
  • [Li+].[F-]
UNII 1485XST65B Y
பண்புகள்
LiF
வாய்ப்பாட்டு எடை 25.939(2) g/mol
தோற்றம் வெள்ளை தூள் அல்லது நீருறிஞ்சும் படிகங்கள்
அடர்த்தி 2.635 கி/செ.மீ3
உருகுநிலை 845 °C (1,553 °F; 1,118 K)
கொதிநிலை 1,676 °C (3,049 °F; 1,949 K)
0.127 கி/(100 மி.லி) (18 °செல்சியசு)
0.134 கி/(100 மிலி) (25 °செல்சியசு
1.84×10−3[1]
கரைதிறன் ஐதரோபுளோரிக் அமிலத்தில் கரையும்
ஆல்ககாலில் கரையாது
−10.1·10−6 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.3915
கட்டமைப்பு
படிக அமைப்பு முக மைய கனசதுரம்
Lattice constant a = 403.51 பைக்கோ மீட்டர்
மூலக்கூறு வடிவம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-616 கிலோயூல்/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
35.73 யூல்/(மோல்·கெல்வின்)
வெப்பக் கொண்மை, C 1.507 யூல்/(கிராம்·கெல்வின்)
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H315, H319, H335[2]
Lethal dose or concentration (LD, LC):
143 மி.கி/கி.கி (வாய்வழி, எலிt)[3]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இலித்தியம் குளோரைடு
இலித்தியம் புரோமைடு
இலித்தியம் அயோடைடு
இலித்தியம் அசுட்டடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் புளோரைடு
பொட்டாசியம் புளோரைடு
உருபீடியம் புளோரைடு
சீசியம் புளோரைடு
பிரான்சியம் புளோரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தயாரிப்பு

தொகு

இலித்தியம் ஐதராக்சைடு அல்லது இலித்தியம் கார்பனேட்டுடன் ஐதரசன் புளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து இலித்தியம் புளோரைடு தயாரிக்கப்படுகிறது.[5]

பயன்பாடுகள்

தொகு

மின்கலன்களுக்கான இலித்தியம் அறுபுளோரோபாசுபேட்டு தயாரிப்பு

தொகு

இலித்தியம் புளோரைடு ஐதரசன் புளோரைடுடனும் பாசுபரசு பெண்டா குளோரைடுடனும் வினைபுரிந்து இலித்தியம் அறுபுளோரோபாசுபேட்டு (Li[PF6]) உருவாகிறது. இலித்தியம் அயனி மின்கலத்தில் பயன்படும் மின்பகுளியாக இது பயன்படுத்தப்படுகிறது.

இலித்தியம் புளோரைடு மட்டும் ஐதரசன் புளோரைடை உறிஞ்சி பைபுளோரைடு உப்பை உருவாக்காது.[6]

உருகிய உப்புகளில்

தொகு

உருகிய பொட்டாசியம் பைபுளோரைடை மின்னாற்பகுப்பு வினைக்கு உட்படுத்துவதன் மூலம் புளோரின் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்பகுளியில் சில சதவீதம் LiF இருக்கும்போது இந்த மின்னாற்பகுப்பு வினை மிகவும் திறமையாகத் தொடர்கிறது. கார்பன் மின்முனைகளில் Li-C-F இடைமுகத்தை உருவாக்குவதற்கு இது உதவுகிறது. FLiNaK, சோடியம் புளோரைடு மற்றும் பொட்டாசியம் புளோரைடு ஆகியவற்றுடன் LiF கலவையைக் கொண்டுள்ளது. உருகிய உப்பு அணுக்கரு உலை பரிசோதனைக்கான முதன்மைக் குளிரூட்டியாக FLiBe; 2LiF·BeF2 (66 மோல்%-LiF, 33 மோல்% - BeF2) பயன்படுகிறது.[4]

ஒளியியல்

தொகு

இலித்தியம் புளோரைடு சேர்மத்துக்கான ஆற்றல் இடைவெளியின் காரணமாக, அதன் படிகங்கள் குறுகிய அலைநீள புற ஊதா கதிர்வீச்சுக்கு வெளிப்படுவது மற்ற எந்தப் பொருளையும் விட அதிகம். எனவே வெற்றிட புற ஊதா நிறமாலைக்கான சிறப்பு ஒளியியலில் LiF பயன்படுத்தப்படுகிறது. புளோரைடு எக்சு கதிர் நிறமாலையியலில் விளிம்புநிலை படிகமாகவும் பயன்படுத்தப்படுகிறது.[7]

கதிரியக்க் உணரி

தொகு

காமா கதிர்கள், பீட்டா துகள்கள் மற்றும் நியூட்ரான்கள் (மறைமுகமாக 6
3
Li
அணுவைப் பயன்படுத்தி அயனியாக்கும் கதிர்வீச்சு வெளிப்பாட்டைப் பதிவுசெய்யும் வழிமுறையாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. (என்-ஆல்ஃபா) அணுக்கரு எதிர்வினை) வெப்ப ஒளிர் டோசிமீட்டர்களில். 96% செறிவூட்டப்பட்ட 6LiF நுண்தூள் நுண்கட்டுமான குறைக்கடத்தி உணரிகளுக்கு நியூட்ரான் வினைத்திறன் பின் நிரப்பும் பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது.[8]

அணுக்கரு உலை பயன்பாடு

தொகு

பொதுவாக ஐசோடோப்பு இலித்தியம்-7 இல் அதிக அளவில் செறிவூட்டப்பட்ட இலித்தியம் புளோரைடு திரவ-புளோரைடு அணு உலைகளில் பயன்படுத்தப்படும் விருப்பமான புளோரைடு உப்புக் கலவையின் அடிப்படை அங்கமாக அமைகிறது. பொதுவாக இலித்தியம் புளோரைடுடன் பெரிலியம் புளோரைடை கலந்து ஒரு கார கரைப்பான் (FLiBe) உருவாகிறது. இதில் யுரேனியம் மற்றும் தோரியத்தின் புளோரைடுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இலித்தியம் புளோரைடு விதிவிலக்காக வேதியியல் ரீதியாக நிலைப்புத்தன்மை கொண்டதாகும். LiF/BeF2 கலவைகள் (FLiBe) குறைந்த உருகுநிலையுடன் (360 முதல் 459 °செல்சியசு அல்லது 680 முதல் 858 °பாரங்கீட்டு வரை) அணு உலை பயன்பாட்டிற்கு பொருத்தமான புளோரைடு உப்பு சேர்க்கைகளின் சிறந்த நியூட்ரான் தன்மை பண்புகளுடன் உள்ளன. உருகிய உப்பு அணுக்கரு உலை பரிசோதனை இரண்டு குளிரூட்டும் சுற்றுகளில் இரண்டு வெவ்வேறு கலவைகளைப் பயன்படுத்துகிறது.

எதிர்மின் வாய் பயன்பாடு

தொகு

இலித்தியம் புளோரைடு பலபடி ஒளியுமிழும் டையோடுகள் மற்றும் கரிம ஒளியுமிழும் டையோடுகளில் எலக்ட்ரான் உட்செலுத்தலை மேம்படுத்த ஓர் இணைப்பு அடுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. LiF அடுக்கின் தடிமன் பொதுவாக 1 நானோ மீட்டராக இருக்கும். LiF இன் மின்கடத்தா மாறிலி (அல்லது ஒப்பீட்டு அனுமதி, ε) 9.0 ஆகும்.[9]

இயற்கைத் தோற்றம்

தொகு

கிரைசைட்டு கனிமம் இயற்கையாகத் தோன்றும் இலித்தியம் புளோரைடு சேர்மமாகும். இது மிகவும் அரிதான ஒரு கனிமமாக அறியப்படுகிறது.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. John Rumble (June 18, 2018). CRC Handbook of Chemistry and Physics (in English) (99 ed.). CRC Press. pp. 5–188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1138561632.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. "Lithium fluoride - Product Specification Sheet". Sigma-Aldrich. Merck KGaA. பார்க்கப்பட்ட நாள் 1 Sep 2019.
  3. "Lithium fluoride". Toxnet. NLM. Archived from the original on 12 August 2014. பார்க்கப்பட்ட நாள் 10 Aug 2014.
  4. 4.0 4.1 Aigueperse J, Mollard P, Devilliers D, et al. (2005). "Fluorine Compounds, Inorganic". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a11_307. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527303854.
  5. "Improved High Efficiency Stacked Microstructured Neutron Detectors Backfilled With Nanoparticle 6LiF". IEEE Trans. Nucl. Sci. 59 (1): 167–173. 2012. doi:10.1109/TNS.2011.2175749. Bibcode: 2012ITNS...59..167B. 
  6. Aigueperse, Jean; Mollard, Paul; Devilliers, Didier; Chemla, Marius; Faron, Robert; Romano, René; Cuer, Jean Pierre (2005), "Fluorine Compounds, Inorganic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a11_307
  7. "Lithium Fluoride (LiF) Optical Material". Crystran 19. 2012.
  8. "Present status of microstructured semiconductor neutron detectors". Journal of Crystal Growth 379: 99–110. 2013. doi:10.1016/j.jcrysgro.2012.10.061. Bibcode: 2013JCrGr.379...99M. 
  9. "Low-Frequency Dielectric Constant of LiF, NaF, NaCl, NaBr, KCl, and KBr by the Method of Substitution". Phys. Rev. B 2 (12): 5068–73. 1970. doi:10.1103/PhysRevB.2.5068. Bibcode: 1970PhRvB...2.5068A. 
  10. "Griceite mineral information and data". Mindat.org. Archived from the original on 7 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 Jan 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_புளோரைடு&oldid=4158963" இலிருந்து மீள்விக்கப்பட்டது