இலிம்பாங் வானூர்தி நிலையம்
இலிம்பாங் வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: LMN, ஐசிஏஓ: WBGJ); (ஆங்கிலம்: Limbang Airport; மலாய்: Lapangan Terbang Limbang) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தின் இலிம்பாங் பிரிவு, இலிம்பாங் நகரில் உள்ள ஒரு வானூர்தி நிலையம் ஆகும்.
Limbang Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | மலேசிய அரசாங்கம் | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் Malaysia Airports Holdings Berhad | ||||||||||
சேவை புரிவது | இலிம்பாங்; இலிம்பாங் மாவட்டம் | ||||||||||
அமைவிடம் | இலிம்பாங், சரவாக், கிழக்கு மலேசியா | ||||||||||
திறக்கப்பட்டது | 7 ஏப்ரல் 2004 | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் ({{{utc}}}) | ||||||||||
உயரம் AMSL | 10 ft / 3.048 m | ||||||||||
ஆள்கூறுகள் | 04°48′29″N 115°00′37″E / 4.80806°N 115.01028°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2015) | |||||||||||
| |||||||||||
இந்த வானூர்தி நிலையம் நகர மையத்தில் இருந்து 4.8 கி.மீ. தொலைவில் உள்ளது.[2] 15 ஜூலை 2004-இல் திறக்கப்பட்ட இந்த வானூர்தி நிலையம், ஆண்டுக்கு 250,000 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. போக்கர் 50 (Fokker 50); மற்றும் ஏடிஆர் 72-500 (ATR 72-500) போன்ற பெரிய ரக வானூர்திகளைக் கையாளக் கூடியது.[1]
பொது
தொகுபழைய இலிம்பாங் வானூர்தி நிலையம் 1963-இல் பிரித்தானிய இராணுவத்தால், இந்தோனேசியா - மலேசியா பிரச்சினை (Indonesia-Malaysia Confrontation) ஏற்பட்ட போது கட்டப்பட்டது. லிம்பாங் நகரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் மாஸ் குன்று (ஆங்கிலம்: Mas Hill; மலாய்: Bukit Mas) எனும் இடத்தில் கட்டப்பட்டது..
பழைய வானூர்தி நிலையம், பன்னாட்டு குடிசார் வான்பயண அமைப்பின் (International Civil Aviation Organization) பாதுகாப்பு தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை. பழைய வானூர்தி நிலையம் மலைகளால் சூழப்பட்டது.
மற்றும் ஓடு பாதையின் இரு புறங்களிலும் மரங்கள் போன்ற உயரமான தாவரங்கள் இருந்தன. இந்த நிலைமை, வானூர்திகளுக்கு அபாயகரமானதாக இருந்தது.
வரலாறு
தொகு1978 ஆம் ஆண்டில், முற்றிலும் புதிய வானூர்தி நிலையத்திற்கு ஒரு புதிய தளத்தைத் தேர்ந்தெடுக்க ஓர் ஆலோசனை நிறுவனம் நியமிக்கப்பட்டது. மேலும் புதிய வானூர்தி நிலையத்தின் அமைப்பைப் பற்றிய ஒரு பெரும் திட்டம் வரையப்பட்டது. போக்கர் எப் 27 வானூர்தி (Fokker F27); மற்றும் போயிங் 737 (Boeing 737) ஜெட் வானூர்திகளுக்கு இடமளிப்பதே புதிய வானூர்தி நிலையம் அமைப்பதின் தலையாய இலக்காகும்.
நீண்ட தாமதத்திற்குப் பிறகு, புதிய லிம்பாங் வானூர்தி நிலையத் திட்டம் 2000-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளில் முடிக்கப்பட்டது. வானூர்தி நிலையம் அதிகாரப்பூர்வமாக 7 ஏப்ரல் 2004-இல் திறக்கப்பட்டது. மேலும் 15 ஏப்ரல் 2004-இல் முழு பயன்பாட்டுக்கு வந்தது.
புதிய வானூர்தி நிலையம்
தொகுபுதிய ஓடுபாதை 1500 மீ நீளம் கொண்டது. மற்றும் டி அவாலாந்த் (de Havilland Canada DHC-6 Twin Otter), போக்கர் 50 (Fokker 50), ஏடிஆர் 72-500 (ATR 72-500) வானூர்திகளின் பயன்பாட்டிற்கு ஏற்றது. புதிய வானூர்தி நிலையம் லிம்பாங் நகரின் வடமேற்கே 4.8 கி.மீ. தொலைவில் அமைக்கப் பட்டது.[2]
தற்போது, மாஸ் விங்ஸ் நிறுவனத்தின் வானூர்திகள் லிம்பாங் நிலையத்தில் தலையாய நிறுவனமாகச் செயல்படுகிறது. இந்த நிலையத்தை முன்பு மலேசியா எயர்லைன்சு; பிளை ஏசியன் எக்ஸ்பிரஸ் (Fly Asian Express) ஆகிய வானூர்தி நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன.
சேவை
தொகுவிமானச் சேவைகள் | சேரும் இடங்கள் |
---|---|
மாஸ் விங்ஸ் (MASwings) |
கோத்தா கினபாலு பன்னாட்டு வானூர்தி நிலையம் கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் லாவாஸ் வானூர்தி நிலையம் மிரி வானூர்தி நிலையம் |
போக்குவரத்து புள்ளிவிவரங்கள்
தொகு(ஆண்டு) | (பயணிகள்) | (வானூர்தி நகர்வுகள்) |
---|---|---|
2003 | 83,459 |
5,046
|
2004 | 96,209 |
5,691
|
2005 | 105,652 |
5,568
|
2006 | 89,814 |
4,366
|
2007 | 50,107 |
2,552
|
2008 | 49,181 |
2,112
|
2009 | 45,512 |
1,949
|
2010 | 50,044 |
2,171
|
2011 | 56,211 |
1,968
|
2012 | 57,852 |
1,880
|
2013 | 61,074 |
2,075
|
2014 | 63,870 |
2,660
|
2015 | 58,300 |
2,849
|
(ஆண்டு) | (சரக்கு - மெட்ரிக் டன்கள்) |
---|---|
2003 | 226
|
2004 | 179
|
2005 | 289
|
2006 | 379
|
2007 | 440
|
2008 | 475
|
2009 | 530
|
2010 | 560
|
2011 | 498
|
2012 | 744
|
2013 | 742
|
2014 | 596
|
2015 | 565
|
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Limbang Airport at Malaysia Airports Holdings Berhad
- ↑ 2.0 2.1 2.2 WBGJ - LIMBANG at Department of Civil Aviation Malaysia