இல்லிக்கல் கல்லு

கேரள சுற்றுலா மையம்

இல்லிக்கல் கல்லு (Illickal Kallu) என்பது தென்னிந்தியாவின் கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தில் இல்லிக்கல் மலையின் மேல் அமைந்துள்ள ஒரு பகுதி ஆகும். கோட்டயம் தொடருந்து நிலையத்திலிருந்து இல்லிகல் கல்லுக்கான தொலைவு 57 கி.மீ. ஆகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3400 அடி உயரத்தில் அமைந்துள்ள இல்லிக்கல் கல்லு, மூன்னிலாவ் மற்றும் மீனாசில் தாலுகாவின் தலநாடு கிராமத்தில் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும். இந்தப் பாறையின் ஒரு பாதி மட்டுமே எஞ்சியிருக்கிறது, பாறையின் மற்ற பாதி விழுந்துவிட்டது. இதன் அருகிலுள்ள நகரம் டீகோய் . இந்த மலை உச்சியில் இருந்து ஏராளமான மலை ஓடைகள் உருவாகி கீழே பாய்ந்து மீனாசிலாறை உருவாக்குகின்றன. சுற்றுலா பயணிகள் சிகரத்தை அடைய ஒரு கி.மீ. தொலைவுக்கு மலையேற வேண்டும்.

இல்லிக்கல் கல்லு
Tourist destination
இல்லிக்கல் பாறை
இல்லிக்கல் பாறை
இல்லிக்கல் கல்லு is located in கேரளம்
இல்லிக்கல் கல்லு
இல்லிக்கல் கல்லு
Location in Kotayam, Kerala, India
இல்லிக்கல் கல்லு is located in இந்தியா
இல்லிக்கல் கல்லு
இல்லிக்கல் கல்லு
இல்லிக்கல் கல்லு (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°44′43″N 76°48′42″E / 9.745227°N 76.8117649°E / 9.745227; 76.8117649
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கொல்லம்
அரசு
 • வகைகிராம பஞ்சாயத்து
 • நிர்வாகம்മൂന്നിലവ്, Thalanadu
பரப்பளவு
 • மொத்தம்33.41 km2 (12.90 sq mi)
ஏற்றம்
1,036 m (3,399 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிகாள்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
686580
வாகனப் பதிவுKL-35
அருகில் உள்ள நகரங்கள்மூனிலவு, எராட்டுப்பேட்டா
இல்லிகல் கல்லுவுக்கு செல்லும் பாதை

இல்லிக்கல் மலையில் மூன்று மலைகள் உள்ளன. ஒவ்வொன்றும் கடல் மட்டத்திலிருந்து 3,400 அடி வரை உயரம் கொண்டவை. இந்த ஒவ்வொரு மலையும் ஒவ்வோரு விந்தை வடிவில் உள்ளன. இவற்றில் ஒன்று காளான் தோற்றத்தை ஒத்திருக்கிறது, அதனால்தான் இது குடகல்லு (குடை வடிவ பாறை) என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது மலை பக்கவாட்டுகளில் சற்று கூன் போட்டிருக்கும். எனவே இது கூனன் கல் (கூனு கல்லு) என்று குறிப்பிடப்படுகிறது. நீலக்கொடுவிலி என்ற மூலிகை இங்கு வளர்வதாக கூறப்படுகிறது. இப்பூ அமானுட சக்தி பெற்றது எனபதால் இதை வைத்திருப்போருக்கு செல்வம் பெருகும், அருவடை செழிக்கும் என்று இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இந்த இரண்டு குன்றுகளுக்கு குறுக்கே அரை அடி அகலத்தில் ஒரு பாலம் இருக்கிறது. இதன் பெயர் நரகப் பாலம். இல்லிக்கல் கல்லுவின் அழகும் நிலப்பரப்பும் கொடைக்கானலில் உள்ள தூண் பாறைகளைப் போன்றது. [1]

இந்த மலைய உச்சியில் இருந்து பார்த்தால், அரபிக் கடல் தொடுவானத்தின் கீழ் மெல்லிய நீலப்பட்டிழை போல இழையும். பௌர்ணமி நாளில் இங்கிருந்து பார்த்தால் சூரிய அஸ்தமனக் காட்சி கனவுலகமே கண்ணில் தெரிவதுபோலத் தோன்றும். அப்போது முழு நிலா மெல்ல மெல்ல மேலெழும்பி, தகதகக்கும் மற்றொரு கதிரவன்போல தோன்ற அசல் ஆதவனோ தங்க ஒளி மங்க மறைவான்.

சுற்றுலா

தொகு

ஏராளமான மலைகளும், தவழும் மேகங்களுக்கும், ஆழமான பள்ளத்தாக்குகளும் கொண்ட இல்லிகல் கல்லுவிலின் காட்சிகள் மனதை மயக்கும். உச்சியை அடைய ஒரு கிலோமீட்டர் தொலைவு இருக்கும்போது டி.டி.பி.சி (மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் குழு) அமைத்த சோதனைச் சாவடி குறிக்கிடுகிறது. இதற்கு அப்பால் தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பார்வையாளர்கள் இங்குள்ள நுழைவுச்சீட்டு மையத்தில் நுழைவு கட்டணம் மற்றும் வாகனத் தரிப்பிட கட்டணம் போன்றறவற்றை செலுத்த வேண்டும். இதன்பிறகு மலை உச்சிக்கு நடந்தோ சுற்றுலா துறையின் ஈப்புகளிலோ செல்லலாம். 2017 ஆண்டு ஒரு பயணிக்கு நேரிட்ட இறப்பினால் தற்போது, நரகபாலம் வழியாக சிகரத்தின் உச்சிக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.


கட்டிகாயம் அருவி இது இல்லிக்கல் கல்லுவிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுமார் இரண்டு கி.மீ தொலைவுக்கு மலையிலேறி   இந்த அருவியை அடையவேண்டும். இந்த அருவியை பார்க்கச் செல்வதில் எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், வழுக்கும் பாறைகளில் கவனித்து நடக்க வேண்டும்.

எலவீழபூஞ்சிரா என்பது இல்லிகல் கல்லுவிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கவரும் இடமாகும். எலவீழபூஞ்சிராவுக்ககு செல்ல சரியாக நடைபாதை அமைக்கபடவில்லை. மேலும் இது சாலைவழிக்கு வெளியேயான சாகச பயணமாக கருதப்படுகிறது. எலவீழபூஞ்சிரா என்றால் 'இலைகள் விழாத பள்ளத்தாக்கு' என்று பொருள். இதன் மிக உயர்ந்த பகுதியானது கண்ணாடிப்பாறை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒரே இடத்தில் இருந்து சூரிய உதயத்தையும், சூரியன் மறைவையும் பார்ர இயலும். தொடுபுழா ஆறு மற்றும் கழுகன்குலிமலை அருவி போன்றவற்றினால் செழித்து வளர்ந்த மூங்கில் தோப்புகள், புல்வெளிகள், காட்டுப்பூக்கள் கொண்ட பழக்கனம் பீடபூமியானது இப்பகுதியின் அருகிலேயே உள்ளது. மழைக்காலங்களில், பள்ளத்தாக்கு நிரப்பப்பட்டு கேரளத்தைச் சுற்றியுள்ள சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு அழகிய நிலப்பரப்பாக உருவாக்குகிறது.

வாகமன்: என்பதும் இப்பகுதியின் அருகிலுள்ள மற்றொரு கவரக்கூடிய இடமாகும். இது கேரளத்தின் ஒரு மலைவாழிடமாகும். நேஷனல் ஜியோகிராஃபிக் டிராவலர் வாகமனை "இந்தியாவில் பார்க்கவேண்டிய மிகவும் கவர்ச்சிகரமான 50 இடங்கள்" என்ற கோப்பகத்தில் பட்டியலிட்டுள்ளது. [சான்று தேவை] .

குறிப்புகள்

தொகு
  1. "Illikkal Kallu, a beautiful holiday destination for adventure seekers". Holiday Rentals. Archived from the original on 2019-12-20. பார்க்கப்பட்ட நாள் 2019-12-19.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இல்லிக்கல்_கல்லு&oldid=3593578" இலிருந்து மீள்விக்கப்பட்டது