இஸ்லாமாபாத் உயிரியல் பூங்கா
இசுலாமாபாத் உயிரியல் பூங்கா (Islamabad Zoo) முன்பு மார்கசார் உயிரியல் பூங்கா என்று அழைக்கப்பட்டது. 82 ஏக்கர் (33 ஹெக்டேர்) பரப்பளவு கொண்ட இது பாக்கித்தானின் இசுலாமாபாத் தலைநகர் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இது 1978 இல் திறக்கப்பட்டது. இது பாக்கித்தானின் மூலதன மேம்பாட்டு ஆணையத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
வரலாறு
தொகுஇது சிறுத்தைகள், புள்ளிமான் மற்றும் பிராந்தியத்தில் காணப்படும் இந்திய சிறுமான்களுக்கான அடைக்கலமாக 1978 இல் தொடங்கப்பட்டது. மார்கல்லா மலைகளின் அடிவாரத்தில் இது அமைந்துள்ளது. இது விரைவில் பிரபலமடைந்து சப்பானிய தோட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. பின்னர் ஒரு பறவை கூண்டு கட்டப்பட்டது. இதை ஒரு பொழுதுபோக்கு பகுதியாகவும், வனவிலங்கு சரணாலயமாகவும் மேம்படுத்தவும் விரிவாக்கவும் 2008 ஆகத்து மாதத்தில் 1407.8 மில்லியன் பாக்கித்தானிய ரூபாய் திட்டத்தின் மதிப்பீட்டில் மூலதன மேம்பாட்டு ஆணையம் ஒரு திட்டத்தை வகுத்தது. பிப்ரவரி 2019 நிலவரப்படி, இதை சிறப்பாக நிர்வகிப்பதற்கும் விலங்குகளை பராமரிப்பதற்கும் இசுலாமாபாத் வனவிலங்கு மேலாண்மை வாரியத்திடம் கட்டுப்பாட்டை ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சர்தாஜ் குல் செனட் குழுவிடம் தெரிவித்தார். [1]
விமர்சனங்கள்
தொகுசெப்டம்பர் 2016 அன்று, காவன் என்ற 32 வயதான ஆசிய யானை, கடந்த இரண்டு தசாப்தங்களாக சங்கிலியால் பிணைக்கப்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டது. [2] இது சர்வதேச கவனத்தை ஈர்த்தது. மேலும் சமூக ஊடகங்களில் #SaveKavaan ஹேஸ்டேக் இருந்தது. இதன் விளைவாக மிருகக்காட்சிசாலை கவானை தனது தாய்நாடான கம்போடியாவிற்கு அனுப்ப முடிவு செய்தது. [3] ஆனால் காவன் இன்னும் அங்கேயே இருந்து துன்பப்படுகிறது. சூலை 2017 இல், சிங்கத்தின் பாலுக்கு பதிலாக வெல்மிஞ்ச் பாலை அதை வள்ப்பவர்கள் அதிக அளவில் அருந்த வழங்கியதால் நான்கு சிங்க குட்டிகள் இறந்தன. [4] பின்னர் 2017 ஆம் ஆண்டில், இதன் ஊழியர்களின் அலட்சியம் காரணமாக ஒரு ஆண் தீக்கோழி இறந்தது. [5] ஆகத்து 2018 இல், இதன் விரிவாக்கத்தில் ஆறு மான்கள் ஓநாய் மூலம் அனுப்பப்பட்டன. மிருகக்காட்சிசாலையில் மோசமான தரம், அவை வைக்கப்பட்டுள்ள சிறிய கூண்டுகள் ஆகியவற்றால் அதன் உடல்நிலை சரியில்லை என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது. [6]
இங்கிருந்து காவனை விடுவிக்கக் கோரி 2016 ஆம் ஆண்டு முதல் பிரபல பாப் பாடகர் செர் நான்கு ஆண்டு கால பிரச்சாரத்தைத் தொடர்ந்து யானை காவன் உடனடியாக வேறு சரணாலயத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. [7] [8]
விலங்கு பட்டியல்
தொகுஇங்கு காணப்படும் உயிரினங்கள்
தொகு- கரும்பருந்து
- புல்வெளிக் கழுகு
- வல்லூறு
- பேசாத அன்னம்
- கறுப்பு அன்னம்
- காட்டு வாத்து
- உள்நாட்டு வாத்து
- வளர்ப்புப் புறா
- பொன்னிற பெருஞ்செம்போத்து
- இந்திய மயில்
- நாரை
- பச்சைக்கிளி]]
- பெரிய பச்சைக்கிளி
- மஞ்சள்கொண்டை கிளி
- காதற்கிளி
- இந்தியக் கழுகு ஆந்தை
- தீக்கோழி
- பழுப்பு கரடி
- சிங்கம் [9]
- இந்திய ஓநாய்
- முயல்
- சமவெளி வரிக்குதிரை
- வெர்வெட் குரங்கு
- செம்முகக் குரங்கு
யானை வகைகள்
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Shahid, Jamal (2019-02-21). "Islamabad wildlife dept should take over Marghazar Zoo: minister". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-30.
- ↑ (Pakistan Today)
- ↑ (Dunya News)
- ↑ (Pakistan Today)
- ↑ "(PakObserver)". Archived from the original on 2017-11-16. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
- ↑ Editorial (2019-02-23). "Marghazar Zoo". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-30.
- ↑ "Pakistan to free elephant Kaavan after campaign by US singer Cher". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
- ↑ "Pakistan to free elephant Kaavan after campaign by US singer Cher | Daily FT". www.ft.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-05-24.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Go hear them roar!: Lions’ roar echoes at capital zoo after over a decade - The Express Tribune" (in en-US). The Express Tribune. 2016-05-30. http://tribune.com.pk/story/1112681/go-hear-roar-lions-roar-echoes-capital-zoo-decade/.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் இஸ்லாமாபாத் உயிரியல் பூங்கா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.