ஈக்குவடாரின் தேசியக் கொடி
ஈக்குவடாரின் தேசியக் கொடி (national flag of Ecuador) மஞ்சள்(இரட்டை அகலம்), நீலம், சிவப்பு நிறக் கிடைநிலைப் பட்டைகளைக் கொண்டது. ஈக்குவடாரின் தேசியக்கொடி முதலில் 1835 இலும், பின் 1860 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 இலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது உள்ள கொடியின் வடிவமைப்பு 1900 இல் இறுதி செய்யப்பட்டு, ஈக்குவடார் படையுடை அதன் மையத்தில் மேற்படியுமாறு வடிவமைக்கப்பட்டது. மஞ்சள், நீலம், சிகப்பு வண்ணத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஈக்குவடாரில் உள்ள ஒவ்வொரு மாகாணத்தையும் குறிக்கும் உடுக்களை கொண்ட வெள்ளை, நீல நிறக் கொடி பயன்படுத்தப்பட்டது. ஈக்குவடார் நாட்டின் கொடி கொலம்பியா, வெனிசுலா நாட்டு கொடிகளின் வடிவமைப்பை ஒத்திருக்கும். இம்மூன்று நாட்டுக் கொடிகளும் வெனிசுலா நாட்டுத் தளபதி பிரான்சிஸ்கோ-டி-மிராண்டாவினால் முன்மொழியப்பட்டு, வெனிசுலா அரசால் 1811 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொலம்பியாவும் சிறு மாறுதல்களுடன் இம்முன்மொழிவை ஏற்றுக்கொண்டது. ஈக்குவடாரின் கொடி கொலம்பியா நாட்டுக் கொடியுடன் எல்லா கூறுபாடுகளிலும் ஒத்திருந்தது. ஆகவே, கடல்வழி வணிகத்திற்காக வேறுவிதமான கொடியைக் கொலம்பியா பயன்படுத்துகிறது. கெய்திக் கொடி, டொமினிக்கா குடியரசுக் கொடி, எல் சல்வடார்க் கொடிகளோடு இணைந்து, ஈக்குவடார்க் கொடி ஆகிய நான்கு கொடிகளின் வடிவமைப்புகளே தம்முள் அனைத்துத் தேசிய குறியீடுகளையும் சின்னங்களையும் குறிக்கின்றன.[1]
பிற பெயர்கள் | La Tricolor (முந்நிறம்) |
---|---|
பயன்பாட்டு முறை | State and war கொடி and state and naval ensign |
அளவு | 2:3 |
ஏற்கப்பட்டது | 26 செப்டம்பர் 1860 ( அண்மை விகிதம், நவம்பர் 2009 முதல் அண்மை வரை) |
வடிவம் | மஞ்சள் (இரட்டை அகலம்), நீலம்,சிவப்பு, உள்ள கிடைநிலை முந்நிறக் கொடி. மையத்தில் ஈக்குவடார் தேசிய படையுடை மேற்படிந்துள்ளது. |
வடிவமைப்பு
தொகுவடிவமைப்பு
தொகுஈக்குவடாரின் தகவல் தொழில்நுட்பத்திற்கான தேசியத் தலைமையகம் தேசிய கொடி, கொடியில் உள்ள கேடய வடிவ மரபுச் சின்னம், பிற தேசிய குறியீடுகளுக்கான வடிவமைப்பு, விகிதம் போன்றவற்றை விவரிக்கும் ஒழுங்குமுறைகளை 2009, நவம்பரில் வெளியிட்டது.
ஈக்குவடாரின் தேசிய கொடி 2.20 மீட்டர் நீளமும், 1.47 மீட்டர் அகலமும் 3:2 விகிதத்திலலுள்ளது. இக்கொடி மூன்று வண்ணத்தில் உள்ள கிடைமட்ட பட்டைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.கொடியின் பாதி பகுதி வரை மஞ்சள் பட்டையும், அடுத்த கால் பகுதியில் நீலமும், மீதம் உள்ள கால் பகுதியில் சிகப்பு பட்டையும் உள்ளது.[2] மையத்தில் உள்ள கேடய வடிவிலான அதன் மரபுச் சின்னம் செவ்வக வடிவத்தில் 12:10 என்ற விகிதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஈக்குவடாரின் தேசியச் செந்தரச் சின்னத்திலும் கொடியில் உள்ளது போலவே கேடய சின்னம் 0.9மீ பக்கச் சதுர வடிவத்தில் இருக்கும். அதனைச் சுற்றிலும் 4 செ.மீ உயரம், 3 செமீ. அகலத்தில் தங்க நிறத்திலான ரோம முகப்பு எழுத்துரு தங்கநிற நூலினால் 55 செமீ விட்ட அளவுக்கு நெய்யப்பட்டிருக்கும். இது படைசார் நிறுவனங்களிலும் அமைப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், கொடியைசெய்வோர் விற்கும்போது செய்த நிறுவனத்தின் பெயர், செய்யப்பட்ட வருடம் ஆகியவற்றை 20மிமீ நீளமும்10 மி.மீ அகலமும் உள்ள துணிச் சிட்டையில் அச்சிட்டு, அதனைக் கொடியின் பின்புறம் இணைக்க வேண்டும்.[3]
மரபுப் படைச் சின்னம்
தொகுஈக்குவடார் நாட்டுக் கொடியின் மையப்பகுதியில் உள்ள முட்டை வடிவக் கேடய அமைப்பில் பின்னணியாக உள்ள மலை சிம்பராசோ மலை ஆகும். ஆந்திசு மலைத்தொடரின் ஒரு பகுதியான சிம்போராசோ ஈக்குவடாரின் உயர்ந்த மலையாகும். அதன் அடிவாரத்தில் தோன்றும் ஆறு குவாயாசு ஆகும். ஆற்றின் மீதுள்ள நீராவி கப்பலும் குவாயாசு என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கப்பல் குவாயாவாக்குவிலில் கட்டப்பட்டது. இதுவே ஈக்குவடார் மற்றும் தென் அமெரிக்காவில் கட்டப்பட்ட முதல் நீராவி கப்பல் ஆகும். 1841, அக்டோபர் 9 இல் இக்கப்பல் நாட்டுக்கு காணிக்கையாக்கப்பட்டது. இக்கப்பல் காடிசியசின் வணிக, பொருளாதாரத்தைச் சுட்டும் கூறுபாடுகளைக் கொண்டுள்ளது. இரண்டு பாம்புகளால் சுற்றப்பட்ட ஒரு தூணின் மேலே சிறகுகளை விரித்த கழுகு ஒன்று அமர்ந்திருப்பதை போன்று கப்பலில் உள்ள தூண் வடிவமைக்கப்பட்டுள்ளது. .[4] மையத்தில் உள்ள இச்சின்னமும் கொடியின் வண்ணத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. மலைகளுக்கு மேலே தங்கநிறச் சூரியனைச் சுற்றி, மார்ச்சு முதல் ஜூன் வரையிலான Aries, Taurus, Gemini Cancer ஆகிய ஓரைசார்ந்த வானியல் படிமங்கள், படைத் தளபதி யுவான் யோசே புளூரசை ஆட்சியில் இருந்து தூக்கியெறிந்த 1845 மார்ச்சு புரட்சியைக் குறிப்பிட அமைந்துள்ளன.
கேடயத்திற்கு மேலே இருக்கும் பெரிய சிறகு விரித்த கழுகு ஈக்குவடாரின் அதிகார்ரம், பெருமை, வலிமையைக் குறிக்கிறது. தனது இறக்கைகளை விரித்து வைத்துக் கொண்டு இருக்கும் இக்கழுகு எதிரிகளை தாக்க எந்நேரமும் ஆயத்தமாக இருப்பதை உணர்த்துகிறது. இக்கேடயம் நான்கு ஈக்குவடார் கொடியினால் சூழப்பட்டுள்ளதை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இடது பக்கத்தில் காணப்படும் இலை மணிமுடி குடியரசின் வெற்றிகளைக் குறிக்கிறது[5]. வலது பக்கத்தில் உள்ள பனை இலை விடுதலையையும் விடுதலைப் போராட்ட ஈகிகளையும் அடையாளப்படுத்துகிறது.இக்கேடயத்திற்கு கீழே உள்ள கத்திகள் குடியரசின் கண்ணியத்தைச் சுட்டுகின்றன. மரபுப் படைச் சின்ன இறுதி வடிவமைப்பு 1990 இல் முற்றுபெற்றது.[6].
குறியீடுகளின் பொருள்கள்
தொகுமஞ்சள் : பயிர்கள், வளமிக்க மண்
நீலம் : பெருங்கடல், தெளிந்த வானம்
சிகப்பு : தாய்நாட்டின் விடுதலையையும் விடுதலைக்காக குருதி சிந்திய ஈகிகளையும் குறிக்கிறது.
உறுதிமொழியும் நாட்டுப்பண்ணும்
தொகுமாணவர்களும், படைசார் குழுக்களும் ஜுராமெண்டோ ஆ லா பந்தாரா எனப்படும் கொடிக்கான உறுதிமொழியை எடுக்க வேண்டும். இந்த உறுதிமொழி தேசிய விடுமுறைகளிலோ அல்லது பட்டமளிப்பு போன்ற கல்விசார் நிகழ்ச்சிகளிலோ[7] எடுக்கப்படும். ஹிம்னோ அ லா பந்தாரா எனப்படும் நாட்டுப்பண் உறுதிமொழிக்கு பிறகு பாடப்படுகிறது.[8]
மாறுபட்ட வடிவங்கள்
தொகுபதிவு செய்யப்பட்ட அரசாணை எண் 1271 இன்படி டிசம்பர் 5, 1900 இல் ஈக்குவடாரின் தேசியக் கொடிக்கு இரண்டு அதிகாரமான வடிவமைப்புகள் உள்ளன என சட்டப்படி கையொப்பமிடப்பட்ட ஒரு அரசாணை நிறைவேற்றப்பட்டது. அரசமைப்பு சட்டம் 2 இன்படி இரண்டு வடிவமைப்புகளுமே நீலம், சிகப்பு நிறப் பட்டைகளின் அளவை இரட்டிப்பாக கொண்ட மஞ்சள் நிற பட்டைகளை கொண்டுள்ள மூவண்ணக் கொடியாக வடிவமைக்கப்பட்டது. அரசமைப்பு சட்டம் 3 இன்படி மையத்தில் கேடய வடிவிலான மரபுச் சின்னத்தைப் பெற்றுள்ள கொடியினை இராணுவம், அரசாங்க அலுவலர்கள் வெளியுறவுத் தூதுவர்கள் பயன்படுத்த வேண்டும். அதே சமயம் பொது மக்கள் பயன்படுத்துவதற்குத் தடையேதும் செய்யப்படவில்லை. ஆனால் சிதைவின்றிப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். அரசாணை எண் 6 இன்படி கடல் வணிகர்கள் மரபுச் சின்னம் இல்லாத கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஈக்குவடாரைப் போல் இல்லாமல் பெரு, பொலிவியா, அர்ஜெண்டினா போன்ற தென் அமெரிக்க நாடுகளில் மரபுசின்னத்துடன் கூடிய கொடியைப் பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது[9][10].
கொலம்பியா நாட்டு கொடியுடன் வேறுபடுத்துவதற்காக ஈக்குவடார் மரபுச் சின்னத்துடன் கொடியினை பயன்படுத்தும். கொலம்பியா கடல் வணிகர்கள் சிகப்பு, நீல வண்ண பிண்ணனியில் நீள்வட்ட வடிவில் உடுக்களை கொண்ட கொடியினைப் பயன்படுத்துவர்.[11]
அரசாணை 4 இன்படி மாகானாட்சியகங்கள் மரபுச் சின்னத்துடன் கூடிய கொடியைப் பயன்படுத்த தடை செய்யப்பட்டது. எனவே மாகாணங்களுக்கு என தனியாக கொடி வடிவமைக்கப்பட்டது.மாகாணங்களை குறிக்கும் வகையில் ஒரு பொதுக்கொடி வடிவமைக்கப்பட்டது. அதில் மூவண்ணக் கொடியில் ஒவ்வொரு மாகாணங்களையும் குறிக்கும் வெள்ளை உடுக்கள் வட்ட வடிவில் அமைக்கப்பட்டன. 1905 முதல் 1930 வரை இக்கொடி வெனிசுலா நாட்டு கொடியை ஒத்திருந்தது. தற்போது உள்ள வெனிசுலா நாட்டுக் கொடியில் உடுக்கள் அரைவட்ட வடிவில் அமைந்திருக்கும்.
குறியீட்டின் கிளைப்பொருள்கள்
தொகுஈக்குவடாரில் உள்ள மாகாணங்களில், குவாயாசு மாகாணத்தின் தலைநகரம்தான் பாலத்தீனா. இதனுடைய கொடியில் ஈக்குவடாரின் தேசியக்கொடி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆலிவ் பச்சை[12] பின்னணியில் மூவண்ணக் கொடி உள்ளதுபோல் வடிவமைத்தனர். தங்களது தாய்நாட்டுடனான பற்றினை வெளிபடுத்தும் வண்ணம் ஈக்குவடார் கொடியைப் பயன்படுத்தியதாக மாகாண ஆட்சி தெரிவித்தது. மேலும் பச்சை நிறம் தங்களது முன்னேற்றத்தை குறிக்கும் என குறிப்பிட்டது.
உ லோஜா மாகாணமும் 1963 இல் தாய்நாட்டுக் கொடியை போன்றே தங்கள் மாகாணக் கொடியை வடிவமைத்தது[13]. இதனை வடிவமைத்தவர் கூறும்போது தங்கள் தாய்நாட்டின் இறையாண்மையும், புகழும்ம் குறிக்கும் வகையில் இக்கொடி வடிவமைக்கப்பட்டது என கூறுகிறார்.
நெப்போ மாகாணமும் கேடய வடிவிலான மரபுச் சின்னம் இல்லாத் தேசியக் கொடியை போன்றே தங்கள் கொடியை வடிவமைத்தது. ஒரே ஒரு மாற்றம் என்னவென்றால், மஞ்சள், நீல நிறங்களுக்கு இடையில் ஒரு வெள்ளை பட்டை காணப்படும்.[14]
மாகாணங்களின் கொடிகள்
தொகு-
அஜூவே மாகாணக் கொடி
-
பொலிவர் மாகாணக் கொடி
-
காஅனார் மாகாணக் கொடி
-
கார்ச்சி மாகாணக் கொடி
-
கோடோபாக்சி மாகாணக் கொடி
-
எல் ஓரோ மாகாணக் கொடி
-
எசுமெரால்டாசு மாகாணக் கொடி
-
காலாபாகோசு மாகாணக் கொடி
-
குவாயாசு மாகாணக் கொடி
-
டி லம்பபுரா மாகாணக் கொடி
-
உலோஜா மாகாணக் கொடி
-
இலாசு இரியோசு மாகாணக் கொடி
-
மானாபி மாகாணக் கொடி
-
மொரொனா சாண்டியாகோ மாகாணக் கொடி
-
நேப்போ மாகாணக் கொடி
-
ஒரேலானா மாகாணக் கொடி
-
பாசுதாசா மாகாணக் கொடி
-
பிச்சின்சா மாகாணக் கொடி
-
சாண்டோ டொமிங்கோ டொ லாஸ் டிசாசிலாஸ் மாகாணக் கொடி
-
சுகும்பியாசு மாகாணக் கொடி
-
துன்குராகுவா மாகாணக் கொடி
-
ஜமோரா சின்சிபி மாகாணக் கொடி
மேற்கோள்கள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Minahan, James. (2010). The complete guide to national symbols and emblems. Santa Barbara, Calif.: Greenwood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-34496-1. இணையக் கணினி நூலக மைய எண் 436221284.
- ↑ Instructivo de uso de los Símbolos Patrios
- ↑ Norma Que Establece Los Requisitos de Diseno, Caracteristicas de Confeccion y Modo de Empleo de Los Emblemas Patrios, ப. 6.1
- ↑ "The Flag and The Coat of Arms". Embassy of the Republic of Ecuador in the United States. Archived from the original on 29 ஜூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 27 July 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Other descriptions attribute it to the symbolism of the glory of the heroes of independence.
- ↑ "Símbolos Patrios" (in ஸ்பானிஷ்). Presidencia de la República del Ecuador. Archived from the original on 2010-07-17. பார்க்கப்பட்ட நாள் 2010-07-27.
- ↑ "Tradiciones Militares — Juramento a la Bandera" (in ஸ்பானிஷ்). Ministry of National Defense of Ecuador. Archived from the original on 2010-06-15. பார்க்கப்பட்ட நாள் 2010-07-28.
- ↑ "Tradiciones Militares — Incineración de la Bandera" (in ஸ்பானிஷ்). Ministry of National Defense of Ecuador. Archived from the original on April 18, 2009. பார்க்கப்பட்ட நாள் 2010-07-28.
- ↑ D.L. 11323 del 31 de Marzo de 1950
- ↑ "Bandera Nacional" (in ஸ்பானிஷ்). Ministry of Defense of Bolivia. Archived from the original on 2010-03-13. பார்க்கப்பட்ட நாள் 2010-07-24.
- ↑ "Historia de la Bandera" (in ஸ்பானிஷ்). Vice President of the Republic of Colombia. 2008. பார்க்கப்பட்ட நாள் 2010-07-25.
- ↑ "Símbolos" (in ஸ்பானிஷ்). Canton of Palestina. 2005-10-27. Archived from the original on 2008-12-23. பார்க்கப்பட்ட நாள் 2010-07-26.
- ↑ "Bandera" (in ஸ்பானிஷ்). Tourism Loja. Archived from the original on 2010-07-16. பார்க்கப்பட்ட நாள் 2010-07-26.
- ↑ "Provincia de Napo" (in ஸ்பானிஷ்). Centros de Investigación del Exterior. 2008. பார்க்கப்பட்ட நாள் 2010-07-26.[தொடர்பிழந்த இணைப்பு]