ஈப்போ மருத்துவமனை

ஈப்போ ராஜா பரமேசுவரி பைனுன் மருத்துவமனை அல்லது ஈப்போ மருத்துவமனை (மலாய்: Hospital Raja Permaisuri Bainun Ipoh அல்லது Hospital Ipoh; ஆங்கிலம்: Ipoh General Hospital அல்லது Raja Permaisuri Bainun Hospital Ipoh) என்பது மலேசியா, பேராக் ஈப்போ மாநகர்ப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஆகும்.[1]

ஈப்போ ராஜா பரமேசுவரி பைனுன் மருத்துவமனை
Hospital Raja Permaisuri Bainun Ipoh
Raja Permaisuri Bainun Hospital Ipoh
அமைவிடம் ராஜா அசுமான் சா சாலை, ஈப்போ, பேராக்
Jalan Raja Ashman Shah, Ipoh, Perak,
பேராக்,
 மலேசியா
ஆள்கூறுகள் 4°36′15″N 101°05′32″E / 4.60417°N 101.09222°E / 4.60417; 101.09222
மருத்துவப்பணி பொது நிபுணத்துவ மருத்துவமனை
நிதி மூலதனம் மலேசிய அரசு நிதியுதவி
வகை பயிற்சி மருத்துவமனை
முழு சேவை மருத்துவமனை
இணைப்புப் பல்கலைக்கழகம் மருத்துவத் துறை
தரநிலை தேசிய தரநிலைகள்
அவசரப் பிரிவு 24 மணி நேர சேவை
நிறுவல் 1891
பட்டியல்கள்
Map
ஈப்போ மருத்துவமனை அமைவிடம்

மலேசியாவில் மூன்றாவது பெரிய மருத்துவமனையாக அறியப்படும் இந்த மருத்துவமனை; முதலாம் நிலை மற்றும் சிறப்பு மருத்துவமனைப் பராமரிப்புச் சேவைகளை வழங்குகிறது. மலேசியாவில் முதலாவது பெரிய மருத்துவமனையாக கோலாலம்பூர் மருத்துவமனை; இரண்டாவது பெரிய மருத்துவமனையாக பினாங்கு மருத்துவமனை ஆகியவை உள்ளன.

பொது

தொகு

இந்த மருத்துவமனை, அனைத்து அடிப்படை நிபுணத்துவச் சேவைகள், சிறுநீரகவியல், சுவாச மருத்துவம், இரத்தவியல் (Hematology), நரம்பியல் அறுவை சிகிச்சை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை போன்ற துணைத் துறைகளிலும் சிறப்புச் சேவைகளை வழங்குகிறது.

மேலும், படிமத் தொழில்நுட்பம் சேவைகள் (Imaging services), உள்ளுறுப்பு ஊடு பதிவுக் கருவிகள் (MRI CT scan) மற்றும் நகில்வரைவு (Mammography) சேவைகளையும் வழங்குகிறது.

வரலாறு

தொகு

ஈப்போ ராஜா பரமேசுவரி பைனுன் மருத்துவமனையின் வரலாறு; 1891-இல் 50 படுக்கைகள் மட்டுமே கொண்டஒரு மாவட்ட மருத்துவமனையாக தொடங்கியது. அப்போது அதன் பெயர் ஈப்போ மருத்துவமனை. பின்னர், 1942 இல் அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டது.

8-அடுக்கு முதன்மைக் கட்டிடம் 1980-இல் கட்டி முடிக்கப்பட்டது. 1992-இல் சிறப்பு நிபுணத்துவ வளாகம் (Specialist Clinic Complex); 2005-இல் தினசரி சிகிச்சை வளாகம் (Daily Treatment Complex) ஆகியவை அடங்கும். 12 சூன் 2008 அன்று, ஈப்போ மருத்துவமனை எனும் பழைய பெயர், ஈப்போ ராஜா பரமேசுவரி பைனுன் மருத்துவமனை என மாற்றப்பட்டது.

பயிற்சி மருத்துவமனை

தொகு

தற்போது ஈப்போ ராஜா பரமேசுவரி பைனுன் மருத்துவமனை பயிற்சி மருத்துவமனையாகவும் செயல்படுகிறது. செவிலியர்கள், மருத்துவக மாணவர்கள், தனியார் உயர்க்கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவப் பணியாளர்கள்; போன்றவர்களுக்கு மருத்துவப் பயிற்சி மருத்துவமனையாகச் செயல்படுகிறது.

அத்துடன் இந்த மருத்துவமனை பட்டதாரி மருத்துவர்களுக்கான பயிற்சி மருத்துவமனையாகவும் உள்ளது.

தரமான சேவைச் சாதனைக்காக, இந்த மருத்துவமனை 2005-இல் ஐஎஸ்ஓ 9000 (MS ISO 9001) சான்றிதழ் விருதைப் பெற்றது. 2006-இல் மருத்துவமனை அங்கீகாரச் சான்றிதழைப் பெற்றது. 1996 முதல், இந்த மருத்துவமனைக்கு குழந்தை நட்பு மருத்துவமனை (Baby-friendly Hospital) என்ற தகுதியும் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளமைவு

தொகு
  • 990 படுக்கைகள் - (Beds)
  • 16 அறுவை சிகிச்சை அரங்குகள் - (Operating Theaters)
  • 16 முதியவர் தீவிரச் சிகிச்சை படுக்கைகள் - (Adult Intensive Care Unit Beds)
  • 8 இதய சிகிச்சை படுக்கைகள் - (Cardiac Care Unit Beds)
  • 17 குழந்தை தீவிரச் சிகிச்சை படுக்கைகள் - (Pediatric Intensive Care Unit Beds)
  • 20 பிரசவக் குழந்தை பராமரிப்பு படுக்கைகள் - (Neonatal Care Unit Beds)

முகவரி

தொகு

Hospital Raja Permaisuri Bainun, Jalan Raja Ashman Shah[2]
30450 Ipoh, Perak Darul Ridzuan
Tel : +60 05-2087000
Faks : +06-2841590
hrpb.moh.gov.my/v3/index.php/en/

மேற்கோள்கள்

தொகு
  1. "Sejarah Hospital". Hospital Raja Permaisuri Bainun. பார்க்கப்பட்ட நாள் 13 July 2024.
  2. "Hospital Raja Permaisuri Bainun". பார்க்கப்பட்ட நாள் 13 July 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈப்போ_மருத்துவமனை&oldid=4048726" இலிருந்து மீள்விக்கப்பட்டது