ஈரசிட்டைல் பெராக்சைடு
ஈரசிட்டைல் பெராக்சைடு (Diacetyl peroxide) என்பது (CH3CO2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் பெராக்சைடு ஆகும். வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாகவும் அல்லது கூர்மையான நெடியுடன் கூடிய எண்ணெய்ப் பசை கொண்ட நீர்மமாகவும் இச்சேர்மம் காணப்படுகிறது.[4] பல்வேறு கரிமப் பெராக்சைடுகளைப் போலவே இதுவும் ஒரு வெடிபொருளாகும்.[5] இருமெத்தில் தாலேட்டு போன்ற கரைசலாகவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அசிட்டிக் பெராக்சிநீரிலி[1] | |
வேறு பெயர்கள்
அசிட்டைல்பெராக்சைடு; ஈரசிட்டைல் பெராக்சைடு; பெராக்சைடு, ஈரசிட்டைல்; எத்தனாயில் பெராக்சைடு; அசிட்டைல் ஈத்தேன்பெராக்சோயேட்டு;பெரசிட்டிக் அமில அசிட்டைல் எசுத்தர்
| |
இனங்காட்டிகள் | |
110-22-5 | |
ChemSpider | 7749 |
EC number | 203-748-8 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8040 |
| |
UNII | FDU6Y8075A |
UN number | 2084 |
பண்புகள் | |
C4H6O4 | |
வாய்ப்பாட்டு எடை | 118.09 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற படிகங்கள்[2] |
அடர்த்தி | 1.163 கி/செ.மீ3[2] |
உருகுநிலை | 30 °C (86 °F; 303 K) |
கொதிநிலை | 121.4 °C (250.5 °F; 394.5 K) 760 மிமீபா; 63 °C (145 °F; 336 K) at 21 mmHg[3] |
குளிர் நீரில் சிறிதளவு [2] | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | வெடிக்கும் |
தீப்பற்றும் வெப்பநிலை | 32.2 °C (90.0 °F; 305.3 K) (45 °C [113 °F; 318 K][4]) |
Explosive data | |
Shock sensitivity | மிக அதிகம் / ஈரநிலையில் மிதம் |
Friction sensitivity | மிக அதிகம் / ஈரநிலையில் மிதம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வரலாறு
தொகு1858 ஆம் ஆண்டு பெஞ்சமின் கோலின்சு புரோதி என்பவரால் ஈரசிட்டைல் பெராக்சைடு கண்டுபிடிக்கப்பட்டது.[6] உறைந்த அசிட்டிக் அமிலத்தை நீரற்ற ஈரெத்தில் ஈதரில் கரைந்த பேரியம் பெராக்சைடுடன் வினைபுரியச் செய்து படிப்படியாக ஈரசிட்டைல் பெராக்சைடை இவர் தயாரித்தார்.[7]
தயாரிப்பு
தொகுஐதரசன் பெராக்சைடுடன் மிகையளவு அசிட்டிக் நீரிலியைச் சேர்த்து வினைப்படுத்தி ஈரசிட்டைல் பெராக்சைடு தயாரிக்கப்படுகிறது. பெர் அசிட்டிக் அமிலம் இங்கு ஓர் இடைநிலையாகும்.[8]
பாதுகாப்பு
தொகுஅதிர்ச்சி உணரியான ஈரசிட்டைல் பெராக்சைடு ஒரு வெடிபொருளாகும். the O-O பிணைப்பால் ஓர் ஆக்சிசனேற்றியாகவும், C-C மற்றும் C-H பிணைப்புகளால் ஓர் ஒடுக்கும் முகவராகவும் இது செயல்படுகிறது.[9][10][2]
ஈரசிட்டைல் பெராக்சைடு கரைசலின் செறிவு 70 சதவீதத்தை விட அதிகமாக இருந்தால், அமெரிக்க தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகத்திற்கான செயல்முறை பாதுகாப்பு மேலாண்மைக்கான வரம்பு அளவு 5,000 பவுண்டு (2,300 கிலோ) என முறைப்படுத்தப்பட்டுள்ளது.[11]
தூயநிலை ஈரசிட்டைல் பெராக்சைடு வெடித்து சிதறியதாக செய்திகள் வந்துள்ளன. 25% கரைசலும் வெடிக்கும் திறனை கொண்டுள்ளது.[12] படிக பெராக்சைடு குறிப்பாக அதிர்ச்சி உணர்திறன் மற்றும் அதிக வெடிப்பு அபாயம் கொண்டுள்ளது.[13][10]
உடல்நலத் தீங்குகள்
தொகுதிரவத்துடன் தொடர்பு கொள்வது கண்கள் மற்றும் தோலில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. உட்கொண்டால், வாய் மற்றும் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (2014). Nomenclature of Organic Chemistry: IUPAC Recommendations and Preferred Names 2013. The Royal Society of Chemistry. p. 829. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Lewis, R. J., Sr, ed. (1997). Hawley's Condensed Chemical Dictionary (13th ed.). New York, NY: John Wiley & Sons. p. 13.
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link) - ↑ Lide, D. R., ed. (1998–1999). CRC Handbook of Chemistry and Physics (79th ed.). Boca Raton, Florida: CRC Press. pp. 3–250.
- ↑ 4.0 4.1 "Acetyl peroxide" (PDF). NJ.gov.
- ↑ Sax, N. I. (1975). Dangerous Properties of Industrial Materials (4th ed.). New York, NY: Van Nostrand Reinhold. p. 357. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780442273682.
- ↑ "Anniversary Meeting". Journal of the Chemical Society, Transactions 39: 177–201. 30 March 1881. doi:10.1039/CT8813900177. https://pubs.rsc.org/en/content/articlelanding/1881/ct/ct8813900177. பார்த்த நாள்: 17 February 2022.
- ↑ Brodie, Benjamin Collins (1 January 1859). "I. Note on the formation of the peroxides of the radicals of the organic acids". Proceedings of the Royal Society of London 9: 361–365. doi:10.1098/rspl.1857.0087. https://royalsocietypublishing.org/doi/10.1098/rspl.1857.0087. பார்த்த நாள்: 17 February 2022.
- ↑ "Chemical Safety: Synthesis Procedure". Chemical & Engineering News 89 (2): 2. 2011-01-10. http://cen.acs.org/articles/89/i2/Chemical-Safety-Synthesis-Procedure.html.
- ↑ "Chemical Safety: Synthesis Procedure". Chemical & Engineering News 89 (2): 2. 2011-01-10. http://cen.acs.org/articles/89/i2/Chemical-Safety-Synthesis-Procedure.html.
- ↑ 10.0 10.1 National Fire Protection Association (1978). Fire Protection Guide on Hazardous Materials (7th ed.). Boston, MA: National Fire Protection Association. pp. 49–110.
- ↑ "1910.119 App A - List of Highly Hazardous Chemicals, Toxics and Reactives (Mandatory) | Occupational Safety and Health Administration".
- ↑ National Research Council (1981). Prudent Practices for Handling Hazardous Chemicals in Laboratories. Washington, DC: National Academy Press. p. 106.
- ↑ Bretherick, L. (1990). Handbook of Reactive Chemical Hazards (4th ed.). Boston, MA: Butterworth-Heinemann. pp. 453, 1104.
- "Peroxide, diacetyl (C4H6O4)". Landolt-Boernstein Substance/Property Index.
- "Zuordnung der Organischen Peroxide zu Gefahrgruppen nach § 3 Abs. 1". Berufsgenossenschaft Handel und Warendistribution (in German). Archived from the original on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2022-05-17.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)