ஈரல் அழற்சி பி
ஈரலழற்சி பி அல்லது ஹெபாடைடிஸ் பி என்பது 'ஹெபாடிடிஸ் பி' (HBV) எனும் தீநுண்மியால் ஏற்படும் ஒரு தொற்று நோய் ஆகும், இது கல்லீரலைப் பாதிக்கிறது.[1] இது கடுமையான மற்றும் நீண்ட கால நோய் தாக்கங்களை மனித உடலில் ஏற்படுத்துகிறது.[1] பல மனிதர்களிடம் இந்த நோய் குறித்த ஆரம்பகால அறிகுறியானது தெரிவதில்லை.[1] இருப்பினும் சிலர் இந்த நோயின் ஆரம்பகாலத்தில் வாந்தி, மஞ்சள் காமாலை, சோர்வு, கருப்பு சிறுநீர் மற்றும் அடிவயிற்று வலியினால் பாதிக்கப்படுகின்றனர்.[1] பெரும்பாலும் இந்த அறிகுறிகள் சில வாரங்கள் நீடிக்கும், அரிதாகவே ஆரம்ப கால ஹெபாடிடிஸ் நோய் மரணத்தை ஏற்படுத்தும்.[1][2] இந்த அறிகுறிகள் ஏற்பட 30 முதல் 180 நாட்கள் ஆகலாம்.[1] ஹெபாடைடிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பிறந்த குழந்தைகளில் 90 சதவீதம் பேருக்கும், 5 வயதிற்கும் குறைந்த வயதுடைய பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் 10 சதவீதம் பேருக்கு இந்நோயினால் நீண்ட காலத் தாக்கம் இருக்கலாம்.[3] இந்த நோயினால் நீண்ட கால தொற்று ஏற்பட்டவரிடம் எந்த அறிகுறியும் தெரிவதில்லை, இருப்பினும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படுத்துகிறது.[4] இந்த நோயின் நீண்டகால தொற்று சிக்கல்களின் காரணமாக 15 முதல் 25 சதவீதம் பேர் இறக்கின்றனர்.[1]
இந்த கிருமி பாதிக்கப்பட்ட இரத்தம் மற்றும் உடல் திரவம் மூலம் கடத்தப்படுகிறது.[1] பிறந்த குழந்தைகளுக்கு எளிதில் இந்த நோய் தொற்று பரவலாம், சிறுவயதில் இந்த நோய்தொற்று உள்ளவரிடமிருந்து இரத்தம் மாற்றப்பட்டாலோ, மேலும் இந்த நோய் பாதிக்கப்பட்டோருடன் வசிப்பதாலோ, மருத்துவமனைகளிலோ, குருதி மாற்றீடு, கூழ்மப்பிரிப்பு செய்யும் பொழுதும், நோய்தொற்று அதிகம் உள்ள நாடுகளுக்கு பயணம் செய்வதாலோ, நோய்தொற்றுள்ளோரிடம் பாலுறவு வைப்பதினாலோ பரவ வாய்ப்பு உள்ளது.[1][3] 1980களில் உடல்களில் பச்சை குத்துதல் மற்றும் குத்தூசி மருத்துவமானது குறிப்பிட்ட எண்ணிக்கையிளவில் இந்த நோய் தாக்கத்தினை ஏற்படுத்தியது. பின்னர் மேம்பட்ட நோய்கிருமிகள் ஒழித்த ஊசிகளின் பயன்பாடு காரணமாக இந்த நோய் குறைந்தது.[5] ஈரழற்சி கிருமியானது இரு மனிதர்களுக்கிடையே கைகளை குழுக்குவதினாலோ, அனைத்துக் கொள்வதினோலோ, உணவருந்தும் தட்டினை பகிர்ந்து கொள்வதினாலோ, இருமவதினாலோ, தும்முவதினாலோ, தாய்ப் பால் கொடுப்பதினாலோ பரவுவதில்லை.[3] இந்த தொற்றுநோய் ஏற்பட்ட 30 முதல் 60 நாட்களுக்கு பிறகே எளிதில் கண்டறியமுடியும்.[1] இந்த நோய் பாதிக்கப்பட்டோரின் மாதிரி இரத்தத்தினை பரிசோதிப்பதின் மூலம் கிருமியின் பாகங்களையும் மற்றும் கிருமிகளுக்கு எதிராக செயற்படும் பிறபொருளெதிரிகளையும் உறுதிசெய்வதின் மூலம் நோய் தாக்கத்தினை கண்டறியலாம்.[1] அவை, ஐந்து முக்கிய ஹெபாடைடிஸ் கிருமிகள் ஏ, பி, சி, டி மற்றும் ஈ ஆகும்.[6]
தடுப்பு மற்றும் சிகிச்சை
தொகு1982 ஆம் ஆண்டு முதல் இந்த தொற்றுநோய் தடுப்பூசி போடுவதின் மூலம் தடுக்கப்படுகிறது.[1][7] உலக சுகாதார அமைப்பினால், குழந்தை பிறந்த முதல் நாளில் இந்த தடுப்பூசி போடுவது பரிந்துரைக்கப்படுகிறது.[1] பின்னர் தடுப்பூசி எடுப்பதாக இருந்தால், முழுப்பயனையும் பெற இரண்டு அல்லது மூன்று முறை தடுப்பூசி போட வேண்டும்.[1] இந்த தடுப்பூசி 95% பயனளிக்கிறது.[1] 2006ஆம் ஆண்டில் 180நாடுகளுக்கும் மேலாக தேசிய அளவில் இந்த தடுப்பூசி போடும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.[8] குருதி மாற்றீடு செய்வதற்கு முன்பு ஹெபாடைடிஸ் பி கிருமி குறித்த இரத்த பரிசோதனை மேற்கொள்வதின் மூலமும், உடலுறுவின்பொழுது ஆணுறையை உபயோகிப்பதன் மூலமும், இந்த நோய் தொற்றிலிருந்து காத்துக்கொள்ளலாம்.[1] நோயின் ஆரம்பகாலத்தில் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்வதினால் இந்த நோய்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.[1] நீண்டகால நோய் தொற்றுடையவர்கள் கிருமிநாசினிகளை எடுத்துக்கொள்வதின் மூலமும், கல்லீரல் மாற்றீடு மூலமும் பாதுகாத்துக் கொள்ளலாம்.[1]
வரலாறு
தொகுஇந்த ஹெபாடைடிஸ் பி வைரஸ் தொற்றுநோய் குறைந்தது 500 ஆண்டுகளாக மனிதனை பாதித்து வந்துள்ளது.[9] 2018-ல் ஆய்வு செய்யப்பட்ட 16 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒர் எஞ்சியுள்ள மம்மியாக பாடம் செய்யப்பட்ட குழந்தையிடம் ஹெபாடைடிஸ் கிருமியின் வடிவம் காணப்பட்டது. இது நவீன கிருமி வகைகளுடன் தொடர்புடையதாக உள்ளது.[10]
சமூகம் மற்றும் கலாச்சாரம்
தொகுஉலக கல்லீரல் அழற்சி தினம் ஜூலை 28 ஆம் தேதி ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது. இதன் நோக்கம் ஆனது உலகளாவிய அளவில் ஹெபாடிடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறிதல், தடுப்பு ஊசி மற்றும் சிகிச்சை எடுத்துக்கொள்வதை ஊக்குவிப்பதாகும். உலக ஹெபடைடிஸ் கூட்டணி தலைமையில் 2007 மற்றும் மே 2010ல் அதற்கான முன்னேற்பாடு எடுக்கப்பட்டு, பின்னர் அது உலக சுகாதார அமைப்பினால் உலகாளவிய அளவில் அங்கீகரிக்கப்பட்டது.[11]
மேலும் பார்க்க
தொகு- கல்லீரல் புற்றுநோய்
- Oncovirus
சான்றுகள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 "Hepatitis B Fact sheet N°204". who.int. July 2014. Archived from the original on 9 November 2014. பார்க்கப்பட்ட நாள் 4 November 2014.
- ↑ Raphael Rubin; David S. Strayer (2008). Rubin's Pathology : clinicopathologic foundations of medicine ; [includes access to online text, cases, images, and audio review questions!] (5. ed.). Philadelphia [u.a.]: Wolters Kluwer/Lippincott Williams & Wilkins. p. 638. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780781795166. Archived from the original on 28 செப்டெம்பர் 2015.
- ↑ 3.0 3.1 3.2 "Hepatitis B FAQs for the Public — Transmission". U.S. Centers for Disease Control and Prevention (CDC). Archived from the original on 11 திசம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 29 நவம்பர் 2011.
- ↑ Chang MH (June 2007). "Hepatitis B virus infection". Semin Fetal Neonatal Med 12 (3): 160–167. doi:10.1016/j.siny.2007.01.013. பப்மெட்:17336170.
- ↑ Thomas HC (2013). Viral Hepatitis (4th ed.). Hoboken: Wiley. p. 83. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118637302. Archived from the original on 28 செப்டெம்பர் 2015.
- ↑ Global hepatitis report 2017 (PDF). WHO. 2017. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-4-156545-5.
- ↑ "Natural History of Hepatitis B Virus Infection: an Update for Clinicians". Mayo Clinic Proceedings 82 (8): 967–975. 2007. doi:10.4065/82.8.967. பப்மெட்:17673066. https://archive.org/details/sim_mayo-clinic-proceedings_2007-08_82_8/page/967.
- ↑ Williams R (2006). "Global challenges in liver disease". Hepatology 44 (3): 521–526. doi:10.1002/hep.21347. பப்மெட்:16941687.
- ↑ Fleur, Nicholas St (2018). "A Mummified Child’s Remains Show Signs of a Modern Scourge" (in en-US). The New York Times. பன்னாட்டுத் தர தொடர் எண்:0362-4331. https://www.nytimes.com/2018/01/05/science/child-mummy-hepatitis-naples.html. பார்த்த நாள்: 2018-01-09.
- ↑ Ross, Zoe Patterson; Klunk, Jennifer; Fornaciari, Gino; Giuffra, Valentina; Duchêne, Sebastian; Duggan, Ana T.; Poinar, Debi; Douglas, Mark W. et al. (2018-01-04). "The paradox of HBV evolution as revealed from a 16th century mummy". PLOS Pathogens 14 (1): e1006750. doi:10.1371/journal.ppat.1006750. பன்னாட்டுத் தர தொடர் எண்:1553-7374. http://journals.plos.org/plospathogens/article?id=10.1371/journal.ppat.1006750.
- ↑ "Viral hepatitis" (PDF). Archived from the original (PDF) on 11 August 2011.