ஈஷா ரெப்பா
ஈஷா ரெப்பா (Eesha Rebba) (பிறப்பு 19 ஏப்ரல் 1990) ஓர் இந்திய நடிகையாவார். இவர் முக்கியமாக தெலுங்குப் படங்களில் பணியாற்றுகிறார். அந்தக முந்து... ஆ தருவாத... (2013), பந்திபோடு (2015), ஓய் (2016), அமி துமி (2017), தர்சகுடு (2017), அவே(2018) போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார்
ஈஷா ரெப்பா | |
---|---|
மிர்ச்சி இசை விருது விழாவில் ஈஷா ரெப்பா | |
பிறப்பு | 19 ஏப்ரல் 1990[1] வாரங்கல், ஆந்திரப் பிரதேசம், (தற்போதைய தெலங்காணா), இந்தியா.[2] |
பணி | வடிவழகி, நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2013–தற்போது வரை |
ஆரம்ப வாழ்க்கையும் தொழிலும்
தொகுஈஷா ரெப்பா, வாரங்கல் நகரில் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார். மேலும் ஐதராபாத்தில் வளர்ந்தார்.[2] முதுகலை வணிக மேலாண்மை பட்டப்படிப்பை முடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும்போதே விளம்பர மாதிரிக் கலைஞராக வேலை செய்தார். அதன் பிறகு இயக்குனர் இந்திரகண்டி மோகன கிருஷ்ணனிடமிருந்து ஒரு அழைப்பைப் பெற்றார்.[1]
ரெப்பா, 2012இல் லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தக முந்து... ஆ தருவாத... என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றினார். இந்த படம் திரையரங்க வசூலில் வெற்றி பெற்றது. மேலும், தென்னாப்பிரிக்காவில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த படமாகப் பரிந்துரைக்கப்பட்டது.[3]
2017இல் வெளியான அமி துமி என்ற காதல்-நகைச்சுவைத் திரைப்படத்தில் இவரது நடிப்பு பரந்த வரவேற்பைப் பெற்றது. மேலும், இவருக்கு இரண்டு விருதுகளைப் பெற்றுத் தந்தது.[4][5] அவே (2018) படத்தில் ஒரு அகனள் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தில் இவரது நடிப்பை விமர்சகர்கள் பாராட்டினர்.[6][7] பின்னர், அதே ஆண்டு இவர் பிராண்ட் பாபு, அரவிந்த சமேத வீர ராகவா, சுப்ரமணியபுரம், சவ்யசாச்சி ஆகிய நான்கு படங்களில் நடித்தார். 2021 இல் ஒட்டு படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார்.[8] இப்படத்துக்காக வில்வித்தையையும், காலுதைச்சண்டையையும் கற்றார்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Eesha Rebba Birthday Special! 4 times the 'Awe' actress slipped into black outfits and proved she's a stunner". The Times of India (in ஆங்கிலம்). 2020-04-19. Archived from the original on 14 August 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-08-14.
- ↑ 2.0 2.1 "Why Telugu girl Eesha Rebba is an exception in Tollywood!". OnManorama. Archived from the original on 14 May 2019. பார்க்கப்பட்ட நாள் 14 May 2019.
- ↑ "Telugu films find acclaim globally". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Telugu-films-find-acclaim-globally/articleshow/28012422.cms.
- ↑ "Eesha Rebba Exclusive Interview- Ami Thumi Movie". ap7am.com (in ஆங்கிலம்). Archived from the original on 2021-06-24. பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
- ↑ Dundoo, Sangeetha Devi (2017-06-09). "Ami Thumi: Battle of wits" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/entertainment/reviews/many-laugh-aloud-moments-in-this-farcical-comedy/article18909901.ece.
- ↑ Natarajan, Saradha (2020-06-25). "The Lesbian Love tale of Krishna and Radha". Q Plus My Identity (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
- ↑ Awe! Review {4/5}: Go watch this movie if you’re looking for something definitely out of the box and fresh, ‘Awe’ will not disappoint you, பார்க்கப்பட்ட நாள் 2021-06-16
- ↑ "Telugu actress Eesha Rebba to debut in Malayalam through Ottu - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
- ↑ Adivi, Sashidhar (2021-06-10). "Eesha Rebba picks up archery and kickboxing". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.