ஈ. ஆர். கே. மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தருமபுரி)

ஈ.ஆர்.கே. மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஈ.ஆர்.கே கல்வி அறக்கட்டளையால் 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.[1] இக்கல்லூரி தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் எருமியாம்பட்டியில் அமைந்துள்ளது. மேலும் இக்கல்லூரி பெரியார் பல்கலைகழகத்தின் இணைவுபெற்ற கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. ஈ.ஆர்.கே. கல்விநிலைய வளாகத்தினுள் ஈ.ஆர்.கே. கல்வியியல் கல்லூரி மற்றும் ஈ.ஆர்.கே. மேல்நிலைப் பள்ளியும் அமைந்துள்ளது.

குறிக்கோள்

தொகு

ஈ.ஆர்.கே. அறக்கட்டளை தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் கல்வியில் பின்தங்கியவர்களுக்குக் கல்வியை அளிப்பதில் முன்னோடியாகச் செயல்பட்டுவருகிறது. இதன் முக்கியக் குறிக்கோள் கிராமப்புற மாணவிகளுக்கு கல்வியளித்து அவர்களைப் பொருளாதாரத்திலும், சமூகத்திலும் முன்னேற்றுவதாகும்.

உட்கட்டமைப்பு

தொகு

மாணவிகள் தேவைகளை நிறைவுசெய்யும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. நூலகமானது, மின்னியல் முறையில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள தகவல்களைக் கொண்ட எண்ணிம நூலகமாக இருப்பதுடன், நவீன வசதிகள் கொண்ட ஆய்வுக்கூடம் மற்றும் இலவச இணைய வசதி போன்றவற்றையும் கொண்டுள்ளது. தகுதியும் திறமையும் கொண்ட ஆசிரியர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். கல்லூரிக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாணவிகளுக்கு இலவச ஆங்கில வகுப்புகள் மற்றும் யோகாப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மாணவிகளின் இடர்களை நீக்கும் பொருட்டு மாணாக்கர் குறைதீர் மையம் (students grivence cell) செயல்படுகிறது.

வழங்கும் துறைகள்

தொகு

இக்கல்லூரியில் 7 துறைகளின் கீழ் 9 இளங்கலை கல்வியியல் பட்டப் படிப்புகளும்; 3 முதுநிலை பட்டப் படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "E.R.K. Arts and Science College". ERK Institutions. Archived from the original on 2018-02-15. பார்க்கப்பட்ட நாள் 4 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புக்கள்

தொகு