உசாகோதி காட்டுயிர் சரணாலயம்

உசாகோதி காட்டுயிர் சரணாலயம் (Ushakothi Wildlife Sanctuary) என்பது 1962ஆம் ஆண்டு[2] 304.03 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வனப்பகுதியில் நிறுவப்பட்ட காட்டுயிர் காப்பகம் ஆகும். இது சம்பல்பூரிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தச் சரணாலயத்தின் மேற்கில் ஈராக்குது அணை அமைந்துள்ளது.[3]

உசாகோதி காட்டுயிர் சரணாலயம்
Ushakothi Wildlife Sanctuary
பாத்திராம காட்டுயிர் காப்பகம்
Map showing the location of உசாகோதி காட்டுயிர் சரணாலயம் Ushakothi Wildlife Sanctuary
Map showing the location of உசாகோதி காட்டுயிர் சரணாலயம் Ushakothi Wildlife Sanctuary
அமைவிடம்ஒடிசா
அருகாமை நகரம்சாம்பல்பூர்
ஆள்கூறுகள்21°29′00″N 84°17′00″E / 21.483333°N 84.283333°E / 21.483333; 84.283333[1]
பரப்பளவு304 km2 (117 sq mi)
அறிவிக்கப்பட்டது1962
நிருவாகிமண்டல வன அலுவலர், பாம்ரா

தாவரங்களும் விலங்குகளும்

தொகு

இது முக்கியமாக வறண்ட இலையுதிர் காடு வகையாகும். இங்குக் குங்கிலியம், சந்தனம், வெண்மருது, வேம்பு, அகாசியா, சவுக்கு போன்ற மரங்கள் அதிகமாக உள்ளன. விலங்கினங்களில் புலிகள், யானைகள், சாம்பார் சிறுத்தைகள் மற்றும் காட்டெருமை ஆகியவை காணப்படுகின்றன. தற்போது சரணாலயத்தில் சுமார் 15 புலிகள் மற்றும் 35 யானைகள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.[4] இது பறவைகள் வளம் நிறைந்த பகுதியாகும். இந்த சரணாலயத்தின் முக்கிய ஈர்ப்பு துடுப்பு வால் கரிச்சான் மற்றும் பறக்கும் அணில் ஆகும். இரவு தங்குவதற்குச் சரணாலயத்திற்குள் இரண்டு அறைகள் கொண்ட வன ஓய்வு இல்லம் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Badrama PA :: Odisha Wildlife Organisation". Welcome. பார்க்கப்பட்ட நாள் 2020-07-21.
  2. "Odisha Tourism | Tourism in Odisha | India | Orissa Travel Guide".
  3. "Ushakothi Wildlife Sanctuary India". www.indiantigers.com. Archived from the original on 2006-03-17.
  4. http://sambalpur.nic.in/

வெளி இணைப்புகள்

தொகு