உச்சகல்ப வம்சம்
உச்சகல்ப வம்சம் ( Uchchhakalpa dynasty ) என்பது 5 - 6 ஆம் நூற்றாண்டுகளில் மத்திய இந்தியாவின் சில பகுதிகளை ஆண்ட இந்திய வம்சமாகும். இவர்களின் பிரதேசத்தில் இன்றைய மத்தியப் பிரதேசத்தின் வடகிழக்கு பகுதிகள் அடங்கும். இவர்களின் தலைநகரம் இன்றைய உஞ்சௌகாராவான உச்சகல்பத்தில் அமைந்திருந்தது.
உச்சகல்ப வம்சம் उच्छकल्प | |
---|---|
சுமார் பொ.ச. 5ஆம் நூற்றாண்டு–சுமார் பொ.ச. 6ஆம் நூற்றாண்டு | |
நிலை | நிலபிரபுத்துவம் |
தலைநகரம் | உசாகல்பம் (நவீன உஞ்சேகரா |
அரசாங்கம் | முடியாட்சி |
வரலாறு | |
• தொடக்கம் | சுமார் பொ.ச. 5ஆம் நூற்றாண்டு |
• முடிவு | சுமார் பொ.ச. 6ஆம் நூற்றாண்டு |
உச்சகல்பர்கள் பரிவிராஜகர்களின் அண்டை நாடுகளாக இருந்தனர். மேலும் குப்தப் பேரரசின் நிலப்பிரபுக்களாக இருந்ததாகத் தெரிகிறது. இந்த வம்சம் ஜெயநாதன், சர்வநாதன் என்ற இரண்டு மன்னர்களால் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகிறது:
வரலாறு
தொகுஜெயநாதன் (ஆண்டு 174-182), சர்வநாதரன் (ஆண்டு 191-214) என்ற இரண்டு உச்சகல்ப மன்னர்களின் தேதி குறிப்பிடப்படாத கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இப்போது பொதுவாக குப்த காலத்துடன் அடையாளம் காணப்பட்டுள்ளது (இது பொ.ச. 318-319 இல் தொடங்குகிறது). இருப்பினும் சில முந்தைய அறிஞர்கள் இதை காலச்சூரிகளின் காலம் என்று அடையாளம் கண்டுள்ளனர் (இது பொ.ச. 248-249 இல் தொடங்குகிறது). உச்சகல்ப கல்வெட்டுகள் குப்தர் எழுத்துகளின் மத்திய இந்திய வகைகளில் எழுதப்பட்டுள்ளன. மேலும், பூமாரா கல் தூண் கல்வெட்டு உச்சகல்ப ஆட்சியாளர் சர்வநாதன், பரிவிராஜக ஆட்சியாளர் அஸ்டின் ஆகியோரை சமகாலத்தவர்கள் என்று பெயரிடுகிறது. இருவருமே குப்தர்களின் ஆட்சியாளர்கள் என்றும், உச்சகல்ப கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சகாப்தம் குப்தர் சகாப்தம் என்றும் இது அறிவுறுத்துகிறது. [1]
இந்த கல்வெட்டுகளின்படி, வம்சத்தின் ஆரம்பகால மன்னர் ஓகதேவன் என்பராவார். அவருக்குப் பின் குமாரதேவன், ஜெயசுவாமின், வியாக்ரன் ஆகியோர் ஆட்சி செய்தனர். இவரது சொந்த கல்வெட்டுகளின் மூலம் சான்றளிக்கப்பட்ட வம்சத்தின் ஆரம்பகால அரசரான ஜெயநாதர், வியாக்ரன் மற்றும் இராணி அஜ்ஜிதாதேவியின் மகன் ஆவார். சர்வநாதனுக்குப் பின் இராணி முருண்டசுவாமினியின் மகன் ஜெயநாதர் பதவியேற்றார். [2] சர்வநாதனின் வாரிசுகள் பற்றி எதுவும் தெரியவில்லை. [3]
கல்வெட்டுகள்
தொகுஉச்சகல்ப ஆட்சியாளர்களின் பின்வரும் செப்புத் தகடு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
-
ஜெயநாதரின் கட்னி கல்வெட்டு, தகடு 1
-
ஜெயநாதரின் கட்னி கல்வெட்டு, தகடு 2
-
ஜெயநாதரின் கட்னி கல்வெட்டு, தகடு 3
-
பொ.ச.512-513 சர்வநாதரின் கோஹ் கல்வெட்டு
-
பொ.ச.517 சர்வநாதரின் கோ கல்வெட்டு
-
பொ.ச.533-534 சர்வநாதரின் கோஹ் கல்வெட்டு
வியாக்ர-தேவன் என்ற வாகாடக நிலப்பிரபுவின் கல்வெட்டுகள் நச்னா கஞ்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு கோட்பாட்டின் படி, இந்த ஆட்சியாளர் உச்சகல்ப வம்சத்தின் வியாக்ரருடன் அடையாளம் காணலாம். ஆனால் இந்த அடையாளம் சந்தேகத்திற்குரியது. [4]
சான்றுகள்
தொகு- ↑ Ashvini Agrawal 1989, ப. 261.
- ↑ Manabendu Banerjee 1989, ப. 242.
- ↑ Om Prakash Misra 2003, ப. 8.
- ↑ Ajay Mitra Shastri 1997, ப. 179.
உசாத்துணை
தொகு- Ajay Mitra Shastri (1997). Vākāṭakas: Sources and History. Aryan Books International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7305-123-4.
- Ashvini Agrawal (1989). Rise and Fall of the Imperial Guptas. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0592-7.
- Moirangthem Pramod (2013). "The Parivrajaka Maharaja". Asian Journal of Multidimensional Research 2 (4). பன்னாட்டுத் தர தொடர் எண்:2278-4853. http://www.tarj.in/images/download/ajmr/AJMR%20APRIL%202013%20COMPETE%20PDF/4.10,%20Dr.%20Moirangthem%20Pramod.pdf. பார்த்த நாள்: 2022-02-17.
- Madan Mohan Upadhyay (2005). Inscriptions of Mahakoshal: Resource for the History of Central India. B.R. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176464963.
- Manabendu Banerjee (1989). Historical and social interpretations of the Gupta inscriptions. Sanskrit Pustak Bhandar. இணையக் கணினி நூலக மைய எண் 22347582.
- Om Prakash Misra (2003). Archaeological Excavations in Central India: Madhya Pradesh and Chhattisgarh. Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-874-7.
வெளி இணைப்புகள்
தொகு- Uchchhakalpa inscriptions by D.N Lielukhine, Oriental Institute
- Siddham – the South Asia Inscriptions Database: Jayanātha[தொடர்பிழந்த இணைப்பு] and Śarvanātha[தொடர்பிழந்த இணைப்பு]