உணர்ச்சிகள் (திரைப்படம்)

ஆர். சி. சக்தி இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

உணர்ச்சிகள் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், எல். காஞ்சனா, ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். கமல்ஹாசன் இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

உணர்ச்சிகள்
இயக்கம்ஆர். சி. சக்தி
தயாரிப்புகே. எல். போஸ்
எம். சர்தார்
பி. எஸ். புரொடக்ஷன்ஸ்
கதைஆர். சி. சக்தி
இசைஷியாம்
நடிப்புகமல்ஹாசன்
எல். காஞ்சனா
ஸ்ரீவித்யா
ஒளிப்பதிவுஆர். என். பிள்ளை
படத்தொகுப்புஜி. கல்யாண சுந்தரம்
வெளியீடுசூன் 25, 1976
நீளம்3962 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

பரமக்குடியை சேர்ந்த இயக்குநர் ஆர். சி. சக்தி மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து கே. தங்கப்பன் மாஸ்டரிடம் அன்னை வேளாங்கண்ணி மற்றும் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினர். பின்னர் ஆர். சி. சக்தி இப்படத்தில் இயக்குநராக வாய்ப்பு பெற்ற பிறகு கமல்ஹாசனை கதாநாயகனாக தேர்ந்தெடுத்தார்.

1972 ஆண்டில் கமல்ஹாசன் கதாநாயகனாக ஒப்பந்தமாகி நடித்த முதல் திரைப்படம், ஆனால் இத்திரைப்படம் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு தணிக்கை சான்றிதழ் வழங்க காலாதாமத்தினால் இத்திரைப்படம் நான்கு ஆண்டுகள் கழித்து 1976 ஆண்டில் சூன் 25 அன்று வெளியானது.[1] உணர்ச்சிகள் திரைப்படத்தின் கதை மலையாள மொழியில் ராசலீலா எனும் பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் மீண்டும் எடுக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்றது. 'ராசலீலா' திரைப்படம் 'உணர்ச்சிகள்' படம் வெளிவருவதற்கு ஒரு வருடம் முன்பே 1975ல் வெளியானது.[2]

பாடல்கள்

தொகு

ஷியாம் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. பாடல் வரிகள் கண்ணதாசன், பட்டுக்கோட்டை தண்டாயுதபாணி, வெழவந்தான், முத்துலிங்கம் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது.

எண். பாடல் பாடகர்கள் நீளம்
1 "நெஞ்சத்தில் போராடும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 4:20
2 "உன் ஆசையா" ஷியாம் 4:13
3 "நான் என்ன செய்தேன்" பலர் 2:24
4 "அலைந்திடும் நான்" எஸ். ஜானகி, பி. சுசீலா 5:00

மேற்கோள்கள்

தொகு
  1. "சகலவல்ல நாயகரே! கமல்-60". தினமலர். 6 நவம்பர் 2019. Archived from the original on 6 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. ஹாசன், கமல் (14 டிசம்பர் 2017). "என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 11 - அரவணைத்தவர்கள்... அன்பு செலுத்தியவர்கள்!". ஆனந்த விகடன். Archived from the original on 2021-05-10. பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2021. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உணர்ச்சிகள்_(திரைப்படம்)&oldid=4074680" இலிருந்து மீள்விக்கப்பட்டது