ஆர். சி. சக்தி

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

ஆர். சி. சக்தி (R. C. Sakthi) இந்தியத் திரைப்பட இயக்குனராவார். இவர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய தர்மயுத்தம், விஜயகாந்த் நடித்த மனக்கணக்கு, கமலஹாசன் நடித்த உணர்ச்சிகள், மற்றும் ராஜேஷ், லட்சுமி நடித்த சிறை ஆகிய திரைப்படங்களின் மூலம் புகழ்பெற்றார்.

ஆர். சி. சக்தி
இறப்பு(2015-02-23)பெப்ரவரி 23, 2015
இருப்பிடம்சென்னை, இந்தியா
பணிஇயக்குனர் (திரைப்படம்)
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1972–2015
வாழ்க்கைத்
துணை
லட்சுமி
பிள்ளைகள்செல்வகுமார், மகேசுவரி, சாந்தி

வரலாறு

தொகு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த புழுதிகுளத்தில் பிறந்த ஆர். சி. சக்தி, சிறுவயதிலேயே, கல்வியில் கவனத்தை செலுத்தாமல், சினிமாவில் ஆசையில் இருந்தார். இளைஞராக இருந்தபோதே, நண்பர்களுடன் இணைந்து நாடகக் கம்பெனியை துவங்கினார் சென்னை வந்த சக்தி, சுப்பு ஆறுமுகம் குழுவில் சேர்ந்து, திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றி வந்தார். தீவிர முயற்சிக்கு பிறகு, பொற்சிலை படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின் நடன இயக்குனர் தங்கத்துடன் இணைந்து, அன்னை வேளாங்கண்ணி படத்தில் திரைக்கதை எழுதினார். 1972ஆம் ஆண்டு, உணர்ச்சிகள் படத்தின் மூலம் இயக்குனராக உயர்ந்தார். தனது முதல் படத்திலேயே, பால்வினை நோய்களை மையமாகக்கொண்டு படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. உணர்ச்சிகள் திரைப்படம் நடிகரான கமலஹாசனை உயரச்செய்தது.

இயக்கிய படங்கள்

தொகு
ஆண்டு படத்தின் பெயர்
1976 உணர்ச்சிகள்
1978 மனிதரில் இத்தனை நிறங்களா?
1979 தர்மயுத்தம்
மாம்பழத்து வண்டு
1981 ராஜாங்கம்
1982 ஸ்பரிசம்
1983 உண்மைகள்
1984 சிறை
தங்கக்கோப்பை
1985 நாம்
சந்தோஷக் கனவுகள்
தவம்
1986 மனக்கணக்கு
1989 வரம்
1987 கூட்டுப்புழுக்கள்
தாலி தானம்
1989 வரன்
1990 அம்மா பிள்ளை
1993 பத்தினிப்பெண்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சி._சக்தி&oldid=3954187" இலிருந்து மீள்விக்கப்பட்டது