உப்பதசாந்தி பகோடா
உப்பதசாந்தி பகோடா அல்லது அமைதி கோயில் (Uppatasanti Pagoda) மியான்மர் நாட்டின் புதிய தலைநகரமான நைப்பியிதோவில் உலக அமைதிக்காக அமைக்கப்பட்ட பௌத்தக் கோயிலாகும். இக்கோயில் பகோடா கட்டிட வடிவில் கட்டப்பட்டதாகும். சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட புத்தரின் புனிதப் பல் ஒன்று இக்கோயில் பீடத்தில் வைத்து வழிபடுகின்றனர்.[1] உப்பதசாந்தி பகோடா 99 மீட்டர் உயரம் கொண்டது.[2]
உப்பதசாந்தி பகோடா | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | நைப்பியிதோ |
புவியியல் ஆள்கூறுகள் | 19°46′16.14″N 96°10′58.76″E / 19.7711500°N 96.1829889°E |
சமயம் | பௌத்தம் |
அமைப்பு
தொகுஉப்பதசாந்தி பகோடாவின் சிறப்பம்சங்கள்:[2]
- கோயில் மூலஸ்தானத்தில் கௌதம புத்தரின் பெரிய அளவிலான சிற்பம்
- கோயிலின் நான்கு பக்கங்களிலும் பச்சை மாணிக்க கல்லிலான புத்தரின் நான்கு சிற்பங்கள் கொண்டது.
- கோயில் கொடி மரம் 108 உயரம் கொண்டது.
- 108 போதி மரங்களுடன் கூடியத் தோட்டம், 28 புத்த சிற்பங்கள் கொண்டது.
- மர்லினி மங்கலா ஏரியில் உபகுப்தரின் சன்னதி அமைந்துள்ளது.
- ஒருங்கிணைப்பு மண்டபம்
- சேத்தியபால சன்னதி
- சங்க யம விருந்தினர்கள் வளாகம்
- பகோடா அருங்காட்சியகம்
படக்காட்சியகம்
தொகு-
கோயில் வெள்ளை யானை
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Than Shwe’s New Pagoda Hides More than a Buddha Relic". The Irrawaddy. March 10, 2009 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 11, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100811211913/http://irrawaddy.org/article.php?art_id=15275.
- ↑ 2.0 2.1 "Signs of rapid development in Nay Pyi Taw". MRTV-3. Archived from the original on 2011-04-28. பார்க்கப்பட்ட நாள் 2017-11-21.