உப்பல் கலான்
உப்பல் (Uppal) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்தின் கிழக்குப்பகுதியிலுள்ள புறநகர் பகுதியாகும். இது மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் கீசரா வருவாய் பிரிவில் உப்பல் மண்டலத்தின் மண்டல தலைமையகம் ஆகும். [1] இது பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் வட்டம் எண் 2 ஐ உருவாக்குகிறது.
உப்பல்
உப்பல் கமாம் | |
---|---|
ஆள்கூறுகள்: 17°23′N 78°33′E / 17.38°N 78.55°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | மெட்சல்-மல்கஜ்கிரி |
நகரம் | ஐதராபாத்து |
ஏற்றம் | 455 m (1,493 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு, உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 500 039 |
தொலைபேசி இணைப்பு எண் | 91 040 |
வாகனப் பதிவு | டிஎஸ்-08 |
பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியில் இணைவதற்கு முன்னர் இது ஒரு நகராட்சியாக இருந்தது. [2] குர்த் மற்றும் காலன் என்ற சொற்கள் முகலாயர் காலத்திற்கு முந்தைய நிர்வாக சொற்களாகும். ஒரே பெயரில் இரண்டு பகுதிகளை வேறுபடுத்துகின்றன. குர்த் என்றால் "சிறியது" என்றும் கலான் என்றால் "பெரியது" என்பது பாரசீக மொழியிலிருந்து எடுக்கப்பட்டது.
புள்ளிவிவரங்கள்
தொகு2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[3] உப்பல் கலானின் மக்கள் தொகை 118,259 என்ற அளவில் இருந்தது. இதில் ஆண்கள் 52% எனவும், பெண்கள் 48% எனவும் இருந்தனர். இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 73% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 80%, பெண் கல்வியறிவு 66% ஆகும். ஊரின் மக்கள் தொகையில் 12% 6 வயதுக்குட்பட்டவர்கள்.
1991இல், இது 78,644 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. 10 ஆண்டுகளில் (1991-2001) இந்த பகுதியின் வளர்ச்சி விகிதம் சுமார் 56 சதவீதமாக இருந்தது.
மத இடம்
தொகுசொரூப் நகர் குடியிருப்பில் அமைந்துள்ள கரிகிரி வெங்கடேசுவரா சுவாமி கோயில் நன்கு அறியப்பட்ட மத இடங்களில் ஒன்றாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Medchal−Malkajgiri district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 30 November 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2016.
- ↑ "Greater Hyderabad Municipal Corporation". www.ghmc.gov.in. Archived from the original on 1 January 2016. பார்க்கப்பட்ட நாள் 2 November 2016.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.