உப்புக் கழிப்பு

(உப்பு கரைப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உப்புக் கழிப்பு அல்லது உப்புக் கவாத்து (Salt pruning) என்பது கடல்நீரால் உருவாக்கப்படும் உப்புநீராவிக்காற்று கரையை நோக்கி வீசும் போது காலப்போக்கில் கடற்பகுதியில் இருக்கும் மரங்கள் அல்லது புதர்களின் வடிவத்தை மாற்றமடையச் செய்யும் ஒரு செயல்முறையாகும். இந்தச் செயல்முறை உப்பு நீர்நிலையை எதிர்கொள்ளும் தாவரத்தின் காற்றுமறைவுப் பக்கத்திலுள்ள இலைதழைகளை விட காற்றெதிர்நோக்கும் பக்கத்திலுள்ள இலைதழைகளையும் கிளைகளையும் வெகுவாகச் சிதைக்கிறது.[1] இதன் விளைவாகத் தாவரங்களின் உருவ வளர்ச்சி கடலிலிருந்து எதிராக "பின்னோக்கி இழுத்து"ச் செல்லப்படுவதைப் போல் சமச்சீரற்றதாகத் தோற்றமளிக்கின்றது.

உப்புக் கழிப்பால் வடிவம் மாற்றப்பட்ட ஒரு டோரெ பைன்.

எடுத்துக்காட்டுகள்

தொகு

இந்த வகையான நிகழ்வுகளுக்கு உலகளவில் பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப்பகுதியில் லாங் தீவில் ஆளிச் சதுப்புநிலத்தில உப்புக் கழிக்கப்பட்ட குவெர்க்குஸ் ஸ்டெல்லாட்டாக்கள் எனப்படும் கம்பக் கருவாலிகள் காணப்படுகின்றன.[2] கலிபோர்னியாவின் சான் டியாகோ வட்டத்தில் பைனுஸ் டோர்ரேயானாத் தொகுதி பசிபிக் பெருங்கடலிலிருந்து வரும் உப்புக்காற்றால் உப்புக் கழிக்கப்பட்டுவருகின்றது.[3]

கலிபோர்னியாவின் லா ஹோயாவில் உள்ள டோரெ பைன்ஸ் குழிப்பந்தாட்டத் திடலின் இலச்சினையாக உப்புக் கழிக்கப்பட்ட டோரெ பைன் உள்ளது.

சான்றுகள்

தொகு
  1. Brooks, Robbyn (August 22, 2005). "Salt, storms stimulate trees and vegetation". Northwest Florida Daily News. Archived from the original on January 25, 2016. பார்க்கப்பட்ட நாள் August 2, 2012.
  2. Mineral Science Institute (2005) [1] பரணிடப்பட்டது மே 10, 2008 at the வந்தவழி இயந்திரம்
  3. C. Michael Hogan (2008) "Torrey Pine: Pinus torreyana." பரணிடப்பட்டது 2011-07-11 at the வந்தவழி இயந்திரம் Globaltwitcher, ed. Nicklas Stromberg
"https://ta.wikipedia.org/w/index.php?title=உப்புக்_கழிப்பு&oldid=3918294" இலிருந்து மீள்விக்கப்பட்டது