உமா டோக்ரா

இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர், நடன ஆசிரியர், நடன அமைப்பாளர்

உமா டோக்ரா (Uma Dogra, பிறப்பு 23 ஏப்ரல் 1957) என்பவர் இந்திய பாரம்பரிய நடன வடிவமான கதக் நடனக் கலைஞர் ஆவார். [1] இவர் ஜெய்ப்பூர் கரானாவைச் சேர்ந்த கதக் ஆசிரியர் பண்டிட் துர்கா லாலின், [2] மூத்த சீடர் ஆவார். இவர் ஒரு கதக் தனி நடனக் கலைஞர், நடன இயக்குநர் மற்றும் ஆசிரியர் ஆவார். [3] இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஆடி வருகிறார்.

உமா டோக்ரா
பிறப்பு23 ஏப்பிரல் 1957 (அகவை 67)
புது தில்லி
இணையம்http://umadogra.com/

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் புது தில்லியில் உள்ள மால்வியா நகரில் மோதிராம் மற்றும் சகுந்தலா சர்மா ஆகியோருக்கு பிறந்தார். உமா தனது 7 வயதில் நடனமாடத் தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் குரு பன்சிலாலிடமும் பின்னர் ரெபா வித்யார்த்தியிடமும் புது தில்லியில் உள்ள கதக் கேந்திரத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் இவர் ஜெய்ப்பூர் கரானா, பண்டிட் துர்கா லால் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். [4] இவர் தனது தந்தை பண்டிட் மோதிராம் சர்மாவிடம் பாரம்பரிய இந்துஸ்தானி குரல் இசை பயிற்சி பெற்றார். இவரது தந்தை மோதிராம் சர்மா சித்தார் கலைஞராவார். மோதிராம் சர்மா பண்டிட் ரவி சங்கரின் சீடர் ஆவார்.

தொழில்

தொகு

இவர் ரெபா வித்யார்த்தி மற்றும் பண்டிட் பிர்ஜு மகாராஜ் ஆகியோரிடம் 1969 முதல் 1972 வரை கதக் கற்றுக்கொண்டார். பின்னர் 1972 முதல் 1984 வரை குரு பண்டிட் துர்கா லாலிடம் கதக் கற்றுக்கொண்டார். [4] மற்றும் எஸ்.பி.கே.கே, ராம்லீலா, சுர்தாஸ், ஷா-நே-முகல் ஆகிய தயாரிப்புகளில் நடனமாடினார். இவர் 1984 இல் பம்பாய்க்குச் சென்று ஹேம மாலினியுடன் நிருத்ய பாரதி, நூபூர் சீரியல் மற்றும் பாலேட் மீரா ஆகிய படங்களில் பணியாற்றினார். ஆஷா பரேக்குடன் சீரியல் ஜங்காரில் பணிபுரிந்தார்.

உமா டோக்ரா 1990 ஆம் ஆண்டில் சாம் வேத் சொசைட்டி ஃபார் பெர்ஃபாமிங் ஆர்ட்ஸ் அமைப்பை நிறுவி இந்திய கலை நிகழ்ச்சிகளை ஊக்குவித்தார். இதன் பதாகையில், கடந்த 25 ஆண்டுகளாக மும்பையில் ஆண்டுக்கு இரண்டு விழாக்களை ஏற்பாடு செய்து வருகிறார். இதில் ஒன்று, பண்டிட். துர்கா லால் விழா ஆகும். இது ஆண்டின் முதல் பாதியில் நடைபெறுகிறது. இசை, நடனம் மற்றும் நாடகத் துறையைச் சேர்ந்தவர்களைக் கொண்டு இது நடத்தப்படுகிறது. இரண்டாவது, விழாவானது சூலை மாதத்தில் நடத்தப்படுகிறது. இது பாரம்பரிய நடன விழவாக, தனி நடனக் கலைஞர்களுக்கு ஒரு மேடை வழங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. மேலும் இவர் கசுரகோ நடன விழா, மார்கழி விழா போன்ற பல விழாக்களில் பங்கேற்றுள்ளார். [5] மும்பையில் உள்ள உமா டோக்ரா கதக் பள்ளியில் வகுப்புகள் நடத்துகிறார். இவர் ஏராளமான மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார், அவர்களில் சிலர் பாலிவுட்டைச் சேர்ந்தவர்கள். சோனம் கபூர், ஜெபா பக்தியார், சாதியா சித்திகி, மீட்டா வசிஸ்த், நுஷ்ரத் பருச்சா மற்றும் ராச்சனா பருல்கர் ஆகியோருக்கு உமா டோக்ரா பயிற்சி அளித்துள்ளார்.  

2004 ஆம் ஆண்டில் இவர் பண்டிதராக கௌரவிக்கப்பட்டார். இவர் 2014 இல் சங்கீத நாடக அகாதமி விருது உட்பட பல உள்ளூர், பிராந்திய மற்றும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார். [6]

2016 மே 18 அன்று, உமா தனது சீடர்களான சரிதா காலே மற்றும் கீதாஞ்சலி சர்மா [7] ஆகியோருடன் ஒரு மாத கால கலாச்சார விழாவான உஜ்ஜைன் சிம்ஹஸ்தாவில் நடன நிகழ்சிகளை நிகழ்த்தினர்.

கௌரவ முனைவர் பட்டம்

தொகு

உமா டோக்ராவுக்கு 2016 திசம்பர் 12 அன்று ராய்ப்பூரில் உள்ள ஐடிஎம் பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. ஐடிஎம் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரும், ஐடிஎம் பல்கலைக்கழகத்தின் அதிபருமான டாக்டர் பி.வி.ரமணாவிடம் இவர் முனைவர் பட்டம் பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

உமா டோக்ரா தேசிய விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் சித்ரார்த்தா சிங்கை மணந்தார். இந்த இணையருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவர்களின் மகளான சுகாசினி சிங் இந்தியா டுடேயில் எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் உள்ளார். மேலும் இவர்களது மகனான மனஸ் சிங் ஒரு நடிகராக உள்ளார். உமா மும்பையில் குடியேறி வாழ்ந்து வருகிறார்.

புத்தகங்கள்

தொகு

இவர் தனது நடனக் கலைப் தனது பயணம் மற்றும் கதக்கின் நுட்பங்களைப் பற்றி "In Praise of Kathak" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். [8] இந்த புத்தகத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஹேம மாலினி 2015 சனவரி 30 அன்று சம்வேதின் ரஜத் ஜெயந்தி மகோத்சவ விழாவில் வெளியிட்டார். [9]

கதக் பள்ளி

தொகு

உமா டோக்ரா கதக் பள்ளி என்ற பெயரிலான பள்ளியை மும்பையில் உமா டோக்ரா நடத்தி வருகிறார். [7] அதன் செயல்பாடுகளாக வகுப்பறை கற்றல், பட்டறைகள், முதுநிலை வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் விழாக்கள் போன்றவை அடங்கும்.

குறிப்புகள்

தொகு
  1. Sridharan, Divya (28 May 2009). "A Katha on Kathak" (in en-IN). The Hindu (The Hindu). http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/a-katha-on-kathak/article647891.ece. 
  2. "Remembering the Legend - Times of India" (in en-IN). The Times of India (The Times of India). 8 February 2008. http://timesofindia.indiatimes.com/bombay-times/Remembering-the-Legend/articleshow/1080507156.cms. 
  3. Modi, Chintan Girish (5 March 2016). "Remembering a maestro" (in en-IN). The Hindu (The Hindu). http://www.thehindu.com/news/cities/mumbai/remembering-a-maestro/article8317656.ece. 
  4. 4.0 4.1 "Repose in rhythm" (in en-IN). The Hindu (The Hindu). 11 February 2011. http://www.thehindu.com/features/friday-review/dance/repose-in-rhythm/article1327302.ece. 
  5. Subramanian, Mahalakshmi. "Dancers like Uma Dogra and Vaibhav Arekar, drew an overwhelming crowd". DNA. பார்க்கப்பட்ட நாள் 31 December 2013.
  6. Sarkar, Gaurav (12 June 2015). "Danseuse Uma Dogra to get National Award for Kathak". dna (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 June 2015.
  7. 7.0 7.1 Denishua, HPA,. "School of Kathak | Uma Dogra". www.umadogra.com.{{cite web}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  8. Denishua, HPA,. "Book | Uma Dogra". www.umadogra.com.{{cite web}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  9. "Book Review - In praise of Kathak - Shyamhari Chakra". www.narthaki.com. Samved Society.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_டோக்ரா&oldid=3291133" இலிருந்து மீள்விக்கப்பட்டது