உயிரி இயந்திர மின்நுட்பவியல்

உயிரி இயந்திர மின்நுட்பவியல் (Biomechatronics) என்பது உயிரியல், எந்திர மின்னணுவியல் (மின்பொறியியல், மின்னணுப் பொறியியல், இயந்திரப் பொறியியல்) உள்ளடங்கலான ஒரு பல்துறைமை அறிவியல் ஆகும். அத்துடன் தானியங்கியியல், நரம்பணுவியல் போன்ற படிப்புகளும் உள்ளடங்குகிறது. உயிரி இயந்திர மின்நுட்பவியல் மூலம் உருவாக்கப்படும் பொறியியல் கருவிகள் செயற்கை சீரமைவுக் கருவிகள் முதல் சுவாசம், பார்வை, இதய அமைப்புகளை சீரமைக்க உதவுகின்றன.[1]

உயிரி இயந்திர மின்நுட்பவியலின் செயல்பாடு தொகு

உயிரி இயந்திர மின்நுட்பவியல் மனித உடல் எப்படி இயங்குகிறது என்பதைப் பிரதிபலிக்கிறது. எடுத்துக்காட்டாக, காலைத் தூக்கி நடக்க நான்கு வெவ்வேறு படிகள் ஏற்பட வேண்டும். முதலில் மனித மூளையின் மோட்டார் மையத்திலிருந்து வரும் தூண்டுதல்கள் கால் மற்றும் கால் தசைகள் ஆகியவற்றுக்கு அனுப்பப்படுகின்றன. அடுத்து, பாதங்களில் உள்ள நரம்பணுக்கள், மூளைக்குக் கருத்து தெரிவிக்கின்றன. இதனால் எலும்புத்தசைக் குழுக்கள் தரையில் நடக்க வேண்டிய விசையின் அளவை சரிசெய்ய உதவுகிறது. மீண்டும் காலின் தசை சுழல் நரம்பு உயிரணுக்கள் மூலம் தரையின் நிலையை மூளைக்கு அனுப்புகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Brooker, Graham (2012). Introduction to Biomechatronics. University of Sydney, Australia. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-891121-27-2. 

வெளி இணைப்புகள் தொகு