உராசுபிசு
உராசுபிசு செகுண்டா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
காரங்கிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
உராசுபிசு

(பிளீக்கெர், 1855)
மாதிரி இனம்
உராசுபிசு காரங்காய்டெசு
(பிளீக்கெர், 1855)
வேறு பெயர்கள் [1]
  • பாசுடினா ஒயிட்லே, 1941
  • லுகோக்ளோசா ஜோர்டன் & எவர்மேன், 1927
  • பிளாட்யூராசுபிசு பெளலர், 1938
  • சமோரா ஒயிட்லே, 1931

உராசுபிசு (Uraspis) என்பது பாரை மீன் குடும்பத்தினைச் சேர்ந்த பேரினம் ஆகும்.

சிற்றினங்கள்

தொகு

இந்த பேரினத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட மூன்று சிற்றினங்கள் உள்ளன.[2]

படம் விலங்கியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
  உராசுபிசு கெல்வோலா (ஜே. ஆர். பார்சுடர், 1801) வெண் நாக்கு பாரை அத்திலாந்திக்குப் பெருங்கடலில், மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில், இதன் பரவல் செங்கடல், மற்றும் பாரசீக வளைகுடா தெற்கே கிழக்கு ஆப்பிரிக்கா, மடகாசுகர், சீசெல்சு மற்றும் கொமொரோசு வரை காணப்படுகிறது. இது மேற்கு இந்தியா, மாலத்தீவுகள், இலங்கை, அந்தமான் கடல், மேற்கு சுமத்திரா, தெற்கு இந்தோனேசியா மற்றும் மேற்கு மற்றும் தெற்கு ஆத்திரேலியாவிலும் காணப்படுகிறது. பசிபிக் பெருங்கடலில், இது கிழக்கு ஆசியாவில், ஹவாய் மற்றும் நியூசிலாந்தைச் சுற்றிக் காணப்படுகிறது.
  உராசுபிசு செகுண்டா (போய், 1860) பருத்தி வாய் பாரை மேற்கு இந்தியப் பெருங்கடலில், இவை தான்சானியா கடற்கரையில், கிழக்கு பசிபிக் பெருங்கடலில் காணப்படுகின்றன. இவை கலிபோர்னியாவிலிருந்து கோஸ்டாரிகா மற்றும் ஹவாய் வரை அறியப்படுகின்றன.
  உராசுபிசு உராசுபிசு (குந்தர், 1860) வெள்ளைவாய் பாரை செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடா இந்தியப் பெருங்கடலில் இலங்கை வரையிலும், பிலிப்பீன்சியிலிருந்து சப்பானில் உள்ள இரியுக்யு தீவுகள் வரை மற்றும் கிழக்கே ஹவாய் நோக்கி.

மேற்கோள்கள்

தொகு
  1. Eschmeyer, William N.; Fricke, Ron & van der Laan, Richard (eds.). "Genera in the family Carangidae". Catalog of Fishes. California Academy of Sciences. Retrieved 4 December 2019.
  2. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2013). Species of Uraspis in FishBase. February 2013 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உராசுபிசு&oldid=3745808" இலிருந்து மீள்விக்கப்பட்டது