உருக்னுதீன் பர்பக் ஷா
உருக்னுதீன் பர்பக் ஷா ( Ruknuddin Barbak Shah) ஆட்சி. 1459-1474) சுல்தான் நசிருதீன் முகமது ஷாவின் மகனும் வாரிசுமாவார். ஆரம்பத்தில் தனது தந்தையின் ஆட்சியின் போது சத்கானின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பார்பக் 1459 இல் வங்காள சுல்தானகத்தின் அரியணை ஏறினார். இவர் அபிசீனிய சமூகத்திற்கு சுல்தானகத்தின் நிர்வாகத்தில் முக்கிய பங்குகளை வழங்கிய முதல் ஆட்சியாளராவார். வங்காளத்தில் நகரமயமாக்கலின் முன்னோடியாக இவர் இருந்ததாக வரலாற்றாசிரியர் அனிருத்தா ரே குறிப்பிடுகிறார்.
உருக்னுதீன் பர்பக் ஷா Ruknuddin Barbak Shah | |
---|---|
வங்காள சுல்தானகம் | |
ஆட்சிக்காலம் | 1459-1474 |
முடிசூட்டுதல் | 1459 |
முன்னையவர் | நசிருதீன் மக்மூத் ஷா |
பின்னையவர் | சம்சுதீன் யூசுப் ஷா |
பிறப்பு | பர்பக் பின் மக்மூத் வங்காள சுல்தானகம் |
இறப்பு | 1474 வங்காள சுல்தானகம் |
புதைத்த இடம் | 1474 |
குழந்தைகளின் பெயர்கள் | சம்சுதீன் யூசுப் ஷா |
மரபு | இலியாசு வம்சம் |
தந்தை | நசிருதீன் மக்மூத் ஷா |
மதம் | சுன்னி இசுலாம் |
ஆரம்ப வாழ்க்கையும் அரியணை ஏற்றமும்
தொகுகி.பி.1352 இல் வங்காள சுல்தானகத்தை நிறுவிய இலியாஸ் ஷாஹி வம்சம் என்று அழைக்கப்படும் ஒரு பிரபுத்துவ பெங்காலி முஸ்லிம் சுன்னி இசுலாம் குடும்பத்தில் பர்பக் பிறந்தார். இப்பகுதியில் இவரது குடும்பம் நீண்ட காலமாக இருந்தபோதிலும், பர்பக்கின் மூதாதையர்கள் சிசுதான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், இப்போது கிழக்கு ஈரான் மற்றும் தெற்கு ஆப்கானித்தானில் இருந்து வந்தவர்கள். இவரது தந்தை சுல்தான் நசிருதீன் மக்மூத் ஷா இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வங்காளத்தை ஆட்சி செய்தார்.
ஆட்சி
தொகுஇவரது தந்தையின் ஆட்சியின் போது, பர்பக் சத்கான் பகுதியின் ஆளுநராக பணியாற்றினார்.[2] 1455 இல் திரிபெனியில் ஜாபர் கான் காஜி மசூதியை நிறுவினார். [3] கி.பி.1459 இல் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு பர்பக் நாட்டின் அரியணையில் ஏறினார். [4]
பர்பக் ஷா மிதிலை பிரதேசம் (இன்றைய ஜனக்பூர் ) மீது படையெடுத்து அந்தப் பகுதியைக் கைப்பற்றியதாகவும் அறியப்படுகிறது. கேதார் ராயை அந்தப் பிராந்தியத்தின் ஆளுநராக நியமித்தார். அவர் 1468 இல் திருஹட்டில் உள்ள ஹாஜிகஞ்ச் கோட்டை மற்றும் சுற்றுப்புறங்களை ஆக்கிரமித்தார்.
1459 இல், பர்பக் பர்பகாபாத் என்று அழைக்கப்படும் மகிசந்தோஷ் நகரை தங்க சாலையாக மேம்படுத்தினார். இது இவரது இராச்சியத்தை வடக்கே புரிகங்கா ஆறு வரை நீட்டிக்க உதவியது. 1474 இல், இவர் சிட்டகொங்கில் தனது அதிகாரத்தை மீண்டும் நிறுவினார். [5] மால்டா, ராஜசாகி, ரங்க்பூர், சிட்டகொங் , டாக்கா, சில்ஹெட், மைமென்சிங் மற்றும் முதன்முறையாக பரிசால் ஆகிய இடங்களில் ஜேம் மசூதிகள் மற்றும் அரச வாயில்கள் கட்டப்பட்டதை நினைவுகூரும் பல்வேறு கல்வெட்டுகள் மூலம் பர்பக் ஷாவின் இராச்சியத்தின் அளவைக் கண்டறிய முடியும். [6]
இலக்கியம்
தொகுபர்பக் ஷா பெங்காலி மற்றும் பாரசீக இலக்கியங்களின் புரவலர் ஆவார். இவரது காலத்தில் கவிஞர் ஜைனுதீன் தனது ரசூல் பிஜாய் என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார். இப்ராஹிம் கவ்வாம் பாருக்கி பாரசீக அகராதியான பர்ஹாங்-இ-இப்ராஹிம் ( ஷரப்நாமா என்று அறியப்படுறது) என்பதை இயற்றினார். ரைமுகுடா பிரஹஸ்பதி மிஸ்ரா, மாலாதர் பாசு, கிருட்டிபாஸ் ஓஜா மற்றும் குலாதர் ஆகியோர் அந்த நேரத்தில் வாழ்ந்த மிகவும் பிரபலமான இந்து அறிஞர்கள்.[7]
இறப்பு
தொகு15 ஆண்டுகள் வங்காளத்தை ஆண்ட உருக்னுதீன் பர்பக் ஷா 1474 இல் இறந்தார்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ahmad Hasan Dani (1957). "Analysis of the Inscriptions". Asiatic Society Of Pakistan Vol-ii. pp. 21–28.
- ↑ Sarkar, Jadunath, ed. (1973). "VI: Later Ilyās Shahis and the Abyssinian Regime". The History of Bengal. Vol. II: Muslim Period, 1200–1757. Patna: Academica Asiatica. இணையக் கணினி நூலக மைய எண் 924890.
- ↑ "Analysis of the Inscriptions". Asiatic Society Of Pakistan Vol-ii. 1957.Ahmad_Hasan_Dani(1957). "Analysis of the Inscriptions". Asiatic Society Of Pakistan Vol-ii. pp. 21–28.
- ↑ Riyazu-s-Salatin: History of Bengal. Asiatic Society, Baptist Mission Press. 1902.
- ↑ Ahmed, ABM Shamsuddin (2012). "Ruknuddin Barbak Shah". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- ↑ Ahmad Hasan Dani (1957). "Analysis of the Inscriptions". Asiatic Society Of Pakistan Vol-ii.Ahmad Hasan Dani (1957). "Analysis of the Inscriptions". Asiatic Society Of Pakistan Vol-ii. pp. 21–28.
- ↑ Ahmed, ABM Shamsuddin (2012). "Ruknuddin Barbak Shah". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.