பரிசால் கோட்டம்
பரிசால் கோட்டம் (வங்காள மொழி: বরিশাল বিভাগ) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டில் உள்ள எட்டு கோட்டங்களில் ஒன்றாகும். பரிசால் கோட்டம் 1 சனவரி 1993-இல் துவக்கப்பட்டது.[2]
பரிசால் கோட்டம்
বরিশাল বিভাগ (வங்காளம்) | |
---|---|
வங்காளதேசத்தில் பரிசால் கோட்டம் | |
பரிசால் கோட்டத்தின் மாவட்டங்கள் | |
நாடு | வங்காளதேசம் |
நிறுவப்பட்டது | சனவரி 1, 1993 |
தலைநகர் | பரிசால் |
பரப்பளவு | |
• மொத்தம் | 13,225.20 km2 (5,106.28 sq mi) |
ஏற்றம் | 1.2 m (3.9 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 83,25,666 |
• அடர்த்தி | 630/km2 (1,600/sq mi) |
நேர வலயம் | ஒசநே+6 (வங்காளதேச சீர் நேரம்) |
தொலைபேசிக் குறியீடு | +880 |
ஐஎசுஓ 3166 குறியீடு | BD-A |
மனித மேம்பாட்டுச் சுட்டெண்(2018) | 0.629[1] மத்திமம் |
மாவட்டங்கள் | 6 |
துணை மாவட்டங்கள் | 41 |
கிராம ஒன்றியக் குழுக்கள் | 352 |
இணையதளம் | barisaldiv |
தென்மத்திய வங்காளதேசத்தில் அமைந்த இக்கோட்டம், 13,644.85 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 81,47,000 மக்கள் தொகையும் கொண்டது.
பரிசால் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பத்மா (கங்கை ஆறு) ஆற்றின் வடிநிலத்தில் உள்ள பரிசால் நகரம் ஆகும்.
பரிசால் கோட்டம், பிரோஜ்பூர் மாவட்டம், போலா மாவட்டம், பரிசால் மாவட்டம், பர்குனா மாவட்டம், ஜலோகட்டி மாவட்டம் மற்றும் பதுவாகாளி மாவட்டம் என ஆறு மாவட்டங்களைக் கொண்டுள்ளது.
கோட்ட எல்லைகள்
தொகுபரிசால் கோட்டத்தின் வடக்கில் டாக்கா கோட்டமும், தெற்கில் வங்காள விரிகுடாவும், கிழக்கில் சிட்டகாங் கோட்டமும், மேற்கில் குல்னா கோட்டமும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
பொருளாதாரம்
தொகுவங்காளதேசத்தின் நெற்களஞ்சியம் என பரிசால் கோட்டத்தை அழைப்பர். இக்கோட்டத்தில் நெல், கரும்பு, வாழை, தானியங்கள், பருப்பு வகைகள், சணல், கரும்பு, பருத்தி, பஞ்சு மற்றும் துணி ஆலைகள், மருந்து தொழிற்சாலைகள் உள்ளது. மீன் பிடி தொழில் பெரிய அளவில் நடைபெறுகிறது.
ஆற்று வழி நீர்த் தடங்கள் வழியாக கொல்கத்தா – பரிசால் – டாக்கா நகரங்கள் இணைக்கப்படுகிறது. பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்திற்கு இயந்திரப் படகுகள் துணையாக உள்ளது.
முக்கிய இடங்கள்
தொகுசூரியோதம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகிய இரண்டையும் ஒரு சேரக் காணப்படும் தெற்காசியாவின் இரண்டு கடற்கரைகளில் பரிசால் கோட்டத்தின் குவாகத்தா கடற்கரையும் ஒன்றாகும். (மற்றொன்று கன்னியாகுமரி கடற்கரையாகும்) இக்கோட்டத்தில் உள்ள துர்கா சாகர் எனுமிடத்தில் குளிர்காலத்தில் பன்னாட்டுப் பறவைகள் வலசை வரும் இடமாக உள்ளது.
கோட்ட நிர்வாகம்
தொகுபரிசால் கோட்டத்தை நிர்வாக வசதிக்காக ஆறு மாவட்டங்களாகவும், 42 துணைக் கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
இக்கோட்டம் 12 நகராட்சி மன்றங்களையும் 353 கிராம ஒன்றியக் குழுக்களையும், 3159 வருவாய் கிராமங்களையும், 4163 கிராமங்களையும் கொண்டுள்ளது.
வரைபடம் | பெயர் | தலைமையிடம் | பரப்பு (km²) | மக்கள் தொகை 1991 கணக்கெடுப்பு |
மக்கள் தொகை 2001 கணக்கெடுப்பு |
மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பு |
---|---|---|---|---|---|---|
பரிசால் மாவட்டம் | பரிசால் | 2,784.52 | 22,07,426 | 23,55,967 | 23,24,310 | |
பர்குனா மாவட்டம் | பர்குனா | 1,831.31 | 7,75,693 | 8,48,554 | 8,92,781 | |
போலா மாவட்டம் | போலா | 3,403.48 | 14,76,328 | 17,03,117 | 17,76,795 | |
ஜலோகட்டி மாவட்டம் | ஜலோகட்டி | 706.76 | 6,66,139 | 6,94,231 | 6,82,669 | |
பதுவாகாளி மாவட்டம் | பதுவாகாளி | 3,221.31 | 12,73,872 | 14,60,781 | 15,35,854 | |
பிரோஜ்பூர் மாவட்டம் | பிரோஜ்பூர் | 1,277.80 | 10,63,185 | 11,11,068 | 11,13,257 | |
மொத்ம் | பரிசால் | 13,255.20 | 74,62,643 | 81,73,718 | 83,25,666 |
போக்குவரத்து
தொகுபரிசால் கோட்டத்தில் பாயும் பல ஆறுகள், கால்வாய்கள், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு நீர் வழித் தடங்களாகப் பயன்படுகிறது. இயந்திரப் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.
ஆற்று நீர் வழித் தடங்கள் வழியாக பரிசால் கோட்டத்திலிருந்து டாக்கா 73 கிலோ மீட்டர் தொலைவிலும், சிட்டகாங் 117 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. பரிசால் உள்நாட்டு வானூர்தி நிலையம் நாட்டின் பிற கோட்டங்களின் நிர்வாகத் தலைமையிடங்களையும், முக்கிய நகரங்களையும் வான் வழியாக இணைக்கிறது.
கல்வி
தொகுவங்காளதேசத்தில் மற்ற கோட்டங்களை விட பரிசால் கோட்டம் டாக்கா கோட்டத்திற்கு அடுத்து, எழுதப் படிக்கப் தெரிந்தவர்கள் அதிகம் கொண்டுள்ளது.
கல்வி நிலையங்கள்
தொகுபல்கலைக்கழகங்கள்
தொகுஇக்கோட்டத்தின் செர்-இ-வங்காள மருத்துவக் கல்லூரியும், பதுவாகாளி மருத்துவக் கல்லூரியும் புகழ் பெற்றது.
பதுவாகாளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் பரிசால் பல்கலைக்கழகம்
கல்லூரிகள்
தொகுஇக்கோட்டத்தில் 13 அரசுக் கல்லூரிகளும்; 13 தனியார் கல்லூரிகளும் உள்ளது. சாகித் அப்துர் ரப் செர்னியாபத் நெசவு பொறியியல் (பரிசால் மாவட்டம்) உள்ளது.
பள்ளிகள்
தொகுஇக்கோட்டத்தில் 19 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 852 தனியார் உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளது. நான்கு தொழில்நுட்ப பட்டயப் படிப்பு (Polytechnic Institute) பயிற்சி நிறுவனங்களும் உள்ளது.[3]
180 இளையோர் மேனிலைப் பள்ளிகளும், மூன்று சட்டக் கல்லூரிகளும், ஒரு இராணுவப் பயிற்சிப் பள்ளியும், நான்கு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும், 1616 இசுலாமிய சமயக் கல்விக்கான மதராசாக்களும், 2,853 அரசு தொடக்கப் பள்ளிகளும், 1,982 தனியார் தொடக்கப் பள்ளிகளும் உள்ளது.
சமயம்
தொகுபரிசால் கோட்டத்தில் இசுலாம், இந்து சமயம், கிறித்தவம், பௌத்தம் மற்றும் பிற சமயங்கள் இருப்பினும், இசுலாமிய சமயத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
- ↑ "The Rise of Islam and the Bengal Frontier, 1204–1760". Escholarship.org. பார்க்கப்பட்ட நாள் 2013-02-15.
- ↑ "infra.edu.bd". infra.edu.bd. பார்க்கப்பட்ட நாள் 2013-02-15.
ஆதாரங்கள்
தொகுCensus figures for 1991, 2001 and 2011 are from Bangladesh Bureau of Statistics, Population Census Wing. The 2011 Census figures are based on preliminary results.
வெளி இணைப்புகள்
தொகு