உறுமீன்

உறுமீன் (Urumeen) அறிமுக இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில், 2015 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும். பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி. டில்லிபாபு தயாரிப்பில், அச்சு ராஜாமணி இசை அமைப்பில், 142 நிமிட[1] நீளத்தை கொண்ட இப்படம், 4 டிசம்பர் 2015 ஆம் தேதி வெளியானது.

நடிகர்கள்தொகு

பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன், சார்லீ, மனோபாலா, அப்புக்குட்டி, காளி வெங்கட், ஆர். எஸ். சிவாஜி, சாண்ட்ரா ஏமி, அந்தோணி தாசன், குரு, கஜராஜ், வீர சந்தானம், தருண் குமார்.

கதைச்சுருக்கம்தொகு

ராஜ சிம்ஹா, பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து இந்தியாவின் விடுதலைக்காக போராடும் வீரரின் அறிமுகத்துடன் படம் துவங்குகிறது. ராஜ சிம்ஹா, தன் தோழன் கருணாவால் (கலையரசன்) துரோகம் செய்யப்பட்டு, பிரிட்டிஷ்காரர்களிடம் அகப்படும் சூழல் ஏற்படுகிறது. பின்னர், அவர் இறக்க, அவரது கடைசி ஆசைப்படி ஒரு புத்தகத்துடன் புதைக்கப்படுகிறார்.

1939-யில் செழியனாக மறுபிறவி எடுக்கும் ராஜ சிம்ஹா, கிருஷ்ணா எனும் தன் நண்பனால் துரோகம் செய்யப்படுகிறான். கிருஷ்ணா, கருணாவின் மறுபிறவி. துரோகத்தின் முடிவாக, செழியன் கொல்லப்படுகிறான்.

நிகழ் காலத்தில், செல்வாவாக மறுபிறவி எடுக்கும் ராஜ சிம்ஹா, ஜான் என்ற நபருடன் மோத நேரிடுகிறது. தன் முந்தைய பிறவிகளில் தன்னிடம் துரோகம் செய்தது ஜான் தான் என்று ஒரு புத்தகம் வாயிலாக செல்வாவிற்கு தெரிய வருகிறது. இறுதியில், செல்வாவின் பழி வாங்கும் எண்ணம் நிறைவேறியதா என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவுதொகு

இந்தப் படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தவர் அச்சு ராஜாமணி ஆவார். மணி அமுதவாணன், கவின், கணியன் பூங்குன்றனார் ஆகியோர் பாடலாசிரியர்கள் ஆவர். ஆறு பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 2015 ஆண்டு சோனி மியூசிக் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.[2] அச்சு ராஜாமணியின் இசை நல்ல விமர்சனங்களை பெற்றது.[3][4]

வெளியீடுதொகு

4 டிசம்பர் 2015 வெளியான இப்படத்திற்கு இந்திய தணிக்கை குழு "யு/ஏ" சான்றிதழ் வழங்கியது.[5] சிங்கப்பூர் தணிக்கை குழு "பிஜி13" சான்றிதழ் வழங்கியது.[6] கலைஞர் தொலைக்காட்சி இப்படத்தின் செயற்கைக்கோள் உரிமத்தை வாங்கியது.[7]

பாக்ஸ் ஆபீஸ்தொகு

சென்னையில் முதல் இரண்டாம் வார இறுதியில், இப்படம் ரூ. 39,01,707 ரூபாயை வசூல் செய்தது.[8] மூன்றாவது வாரம், சென்னையில் வசூல் குறைந்திருந்தாலும், மொத்தமாக ரூ.47,42,843 ரூபாயை இப்படம் வசூல் செய்தது.[9]

வெளி-இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "https://in.bookmyshow.com/movies/urumeen/ET00028993".
  2. "https://itunes.apple.com/".
  3. "http://www.behindwoods.com/tamil-movies/urumeen/urumeen-songs-review.html".
  4. "http://www.hindustantimes.com".
  5. "http://kalakkalcinema.com/censors-pat-for-urumeen/".
  6. "https://app.imda.gov.sg".
  7. "https://www.facebook.com".
  8. "http://www.behindwoods.com".
  9. "http://www.behindwoods.com".
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறுமீன்&oldid=2908236" இருந்து மீள்விக்கப்பட்டது