ஆர். எஸ். சிவாஜி
ஆர். எஸ். சிவாஜி (26 அக்டோபர் 1956 – 2 செப்டம்பர் 2023)[1]) என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். குறிப்பாக இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார். கமல்ஹாசன் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட படங்களில் இவர் மிகுதியாக நடித்துள்ளார். இவர் உதவி இயக்குநராகவும், ஒலி வடிவமைப்பாளராகவும், லைன் புரொடியூசராகவும் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.[2][3][4]
ஆர். எஸ். சிவாஜி | |
---|---|
பிறப்பு | சென்னை, சென்னை மாநிலம், இந்தியா | 26 அக்டோபர் 1956
இறப்பு | 2 செப்டம்பர் 2023 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 66)
பணி | நடிகர், இணைத்தயாரிப்பாளர், ஒலிப்பதிவாளர் |
பெற்றோர் | எம். ஆர். சந்தானம், இராஜலட்சுமி |
தொழில்
தொகுஎல்லிஸ் ஆர். டங்கனின் மீரா (1945) உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய நடிகரும் தயாரிப்பாளருமான எம். ஆர். சந்தானத்தின் மகன்தான் ஆர். எஸ். சிவாஜி. இவரது சகோதரரான சந்தான பாரதியும் பிரபல நடிகரும், திரைப்பட இயக்குநரும் ஆவார், இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றிவருகிறார்.[5]
சிவாஜி முதன்மையாக நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். 1980 கள் மற்றும் 1990 களில் கமல்ஹாசனின் படங்களில் தவறாமல் நடித்தார். இவர் சார்! நீங்க எங்கயோ போயிட்டீங்க என்று அபூர்வ சகோதரர்கள் (1989) படத்தில் சனகராஜை பார்த்துப் பேசிய வசனம் புகழ்பெற்றது. பின்னர் பல தமிழ்த் திரைப்படங்களில் இந்த வசனத்தைக் கொண்டு கேலிசெய்யப்பட்டு வருகிறது.[6] இவர் முறையே நயன்தாராவின் தந்தையாக கோலமாவு கோகிலா படத்திலும், விவேக்கின் உதவியாளராக தாராள பிரபு படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.[7][8]
குறிப்பிடத்தக்க திரைப்படவியல்
தொகு- பன்னீர் புஷ்பங்கள் (1981)
- மதுமலர் (1981)
- வசந்தம் வரும் (1981)
- வடிவங்கள் (1981)
- மீண்டும் ஒரு காதல் கதை (1983)
- விக்ரம் (1986)
- சத்யா (1988)
- ஜீவா (1988)
- அபூர்வ சகோதரர்கள் (1989)
- மாப்பிள்ளை (1989)
- ஜகதேக வீரடு அதிலோக சுந்தரி (1990; தெலுங்கு)
- மைக்கேல் மதன காமராஜன் (1990)
- மௌனம் சம்மதம் (1990)
- மை டியர் மார்த்தாண்டன் (1990)
- எலி மை பிரண்ட் (1990 ஆங்கலம்)
- காவலுக்குக் கெட்டிக்காரன் (1991)
- தம்பிக்கு ஒரு பாட்டு (1991)
- குணா (1991)
- கலைஞன் (திரைப்படம்) (1993)
- ஆத்மா (1993)
- உடன் பிறப்பு (திரைப்படம்) (1993)
- மகளிர் மட்டும் (1994)
- வியட்நாம் காலனி (1994)
- பவித்ரா (திரைப்படம்) (1994)
- சின்ன வாத்தியார் (1995)
- பூவே உனக்காக (1996)
- கோபுர தீபம் (1997)
- தாலி புதுசு (1997)
- சாச்சி 420 (1997)
- குட்டி (2001)
- லிட்டில் ஜான் (2001)
- பம்மல் கே. சம்பந்தம் (2002)
- என் மன வானில் (2002)
- வில்லன் (2002)
- அன்பே சிவம் (2003)
- குறும்பு (திரைப்படம்) (2003)
- ஆய்த எழுத்து (திரைப்படம்) (2004)
- எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004)
- ஒயிட் ரெயின்போ (2005; Hindi)
- பரமசிவன் (திரைப்படம்) (2006)
- குஸ்தி (2006 திரைப்படம்) (2006)
- ஜெயம் கொண்டான் (திரைப்படம்) (2008)
- உன்னைப்போல் ஒருவன் (2009)
- கண்டேன் காதலை (2009)
- தம்பிக்கு இந்த ஊரு (2010)
- மாஞ்சா வேலு (2010)
- மாலை பொழுதின் மயக்கத்திலே (2012)
- சொன்னா புரியாது (2013)
- சுட்ட கதை (2013)
- நவீன சரஸ்வதி சபதம் (2013)
- கல்யாண சமையல் சாதம் (2013)
- உறுமீன் (2015)
- ஜில்.ஜங்.ஜக் (2016)
- கணிதன் (திரைப்படம்) (2016)
- என்னுள் ஆயிரம் (2016)
- மீன் குழம்பும் மண் பானையும் (2016)
- 8 தோட்டாக்கள் (2017)
- வனமகன் (திரைப்படம்) (2017)
- சங்கிலி புங்கிலி கதவத் தொற (2017)
- கோலமாவு கோகிலா (2018)
- பப்பி (2019)
- காட் ஃபாதர் (2020)
- தாராள பிரபு (2020)
- சூரரைப் போற்று (திரைப்படம்) (2020)
- மாறா (2021)
- பாரிஸ் ஜெயராஜ் (2021)
- வணக்கம் டா மாப்பிள்ளை (2021)
- தள்ளி போகாதே (2021)
- பயணிகள் கவனிக்கவும் (2022)
- கார்கி (2022
தொலைக்காட்சி
தொகு- குலவிளக்கு
- எத்தனை கோணம் எத்தனை பார்வை
- அன்புள்ள சினேகிதியே
- மருதாணி
வலைத் தொடர்
தொகுஆண்டு | நிரல் பெயர் | பாத்திரம் | வலைப்பின்னல் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2020 | டைம் என்ன பாஸ் | ரூம் ஜஹாம் | அமேசான் பிரைம் | [9] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Veteran actor RS Shivaji passes away
- ↑ RS Shivaji Retrieved 25 July 2018.
- ↑ R.S. Shivaji ஒன்இந்தியா. Retrieved 25 July 2018.
- ↑ R.S. Shivaji British Film Institute. Retrieved 25 July 2018.
- ↑ Mohan V. Raman (14 November 2015). "A brief history of Nadigar Sangam". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/a-brief-history-of-nadigar-sangam/article7877460.ece. பார்த்த நாள்: 25 July 2018.
- ↑ PRIDE OF TAMIL CINEMA: 1931 TO 2013: Tamil Films that have earned National and International Recognition.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Kolamaavu Kokila review: If you enjoy the unconventional, give it a shot!". Sify.
- ↑ "Dharala Prabhu Movie Review: Vivekh shoulders a fairly enjoyable remake". The New Indian Express.
- ↑ "Time Enna Boss trailer: A fun Tamil series about time travel". The Indian Express (in ஆங்கிலம்). 2020-09-15. பார்க்கப்பட்ட நாள் 2020-09-18.