உற்றான் (Utraan) என்பது இயக்குநர் இராசகசினி இயக்கிய 2020இல் வெளியான தமிழ் மொழிப் படமாகும். இப்படத்தில் புதுமுகம் இரோசன் உதயகுமார், புதுமுகம் இரோசினி கோமாலி, பிரியங்கா நாயர் (ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரைப்படங்களுக்கு திரும்பினார்) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பு. ரவிசங்கர், மதுசூதன் ராவ், வேல ராமமூர்த்தி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தின் இசையமைப்பை என். ஆர். ரகுநந்தன் மேற்கொண்டிருந்தார்.[1]

உற்றான்
இயக்கம்ஓ. இராசகசனி
தயாரிப்புஓ. இராசகசனி
கதைஓ. இராசகசனி
இசைஎன். ஆர். ரகுநந்தன்
நடிப்புஇரோசன் உதயகுமார்
இரோசினி கோமாலி
பிரியங்கா நாயர்
ஒளிப்பதிவுகோலிக் பிரபு
படத்தொகுப்புஎஸ். பி. அகமது
கலையகம்சாட் சினிமாஸ்
வெளியீடு31 சனவரி 2020 (2020-01-31)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சுருக்கம் தொகு

படம் ஒரு இருசக்கர வாகனத்தின் ஒரு திருகு காரணமாக தவறாக நடந்த ஒரு காதல் கதையைச் சுற்றி வருகிறது.[2]

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

பலகுரலுக்கு பெயர் பெற்ற இரோசினி கோமாலி, இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் ஒரு காவல் அதிகாரியின் மகளாக நடித்துள்ளார். மதுசூதன் ராவ் மற்றும் வேலா ராமமூர்த்த ஆகியோர் எதிர்மறை வேடங்களில் நடித்திருந்தனர். பி.ரவிசங்கர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.[3] வெயில் படத்தில் நடித்திருந்த பிரியங்கா நாயர் இப்படத்தில் கல்லூரி விரிவுரையாளராக நடித்திருந்தார் .[4] பாடகர் கானா சுதாகர் இப்படத்தில் துணை வேடத்தில் தோன்றினார்.

வெளியீடு தொகு

இரோசன் உதயகுமார் மற்றும் மதுசூதன் ராவ் ஆகியோரின் நடிப்பை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா பாராட்டியது.[5] மாலை மலரும், தினத்தந்தியும் பாடல்களையும் ஒளிப்பதிவையும் பாராட்டியது.[6][7]

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உற்றான்&oldid=3709687" இருந்து மீள்விக்கப்பட்டது