உலக இடைக்கழி

உலக இடைக்கழி என்பது மோரியர் சங்ககாலத்தில் தமிழகத்திற்குள் நுழைந்த வழி.

இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் ஓய்மானாட்டு நல்லியக்கோடனைச் சிறப்பித்துப் பாடிய பாடல் சிறுபாணாற்றுப்படை. ஓய்மானாடு இப்போதுள்ள திண்டிவனம் என்னும் ஊரை மையமாகக் கொண்டது. சங்ககாலத்தில் இது மாவிலங்கை என்னும் ஊரை மையமாகக் கொண்டிருந்தது.

இது இடைக்கழி நாடு. இதனின்று வேறுபட்டது உலக இடைக்கழி.

உலக இடைக்கழி என்பது மோரியர் தமிழ்நாட்டுக்குள் நுழையத், தேரில் வர, தேர்ச்சக்கரம் உருண்டு உருண்டு பள்ளப்படுத்திய, மலையிடைக் கணவாய்.

இது இக்காலத்து மங்களூர் மலையிடைப் பிளவு.
சங்ககாலத்தில் இது கொண்கானம் எனப் பெயர் பெற்றிருந்தது.
இங்குதான் கோசரின் பொற்கிடங்கு இருந்தது.
அகப்பா என்னும் ஊரின் கோட்டை இருந்தது.
இந்தக் கிடங்குக்குத்தான் தூங்கெயில் கதவம் அமைக்கப்பட்டிருந்தது.
இங்குதான் அறத்துறை எனப்பட்ட மடம் ஒன்றும் இருந்தது.

வள்ளல் ஆதனுங்கன் புலவர் கள்ளில் ஆத்திரையனார் என்பவரால் பாராட்டப்பட்டுள்ளான். பாராட்டும்போது உலக இடைக்கழி அறத்துறை போல ஆதனுங்கன் அறத்துறையாக விளங்கினான் என்று பாராட்டுகிறார்.[1]

சான்றுகோள்

தொகு
  1. ‘வென் வேல் விண் பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர் திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த, உலக இடைக்கழி அறைவாய் நிலைஇய, மலர்வாய் மண்டிலத்து அன்ன நாளும் புரவு எதிர்ந்த அறத்துறை’ –புறநானூறு 175.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_இடைக்கழி&oldid=804169" இலிருந்து மீள்விக்கப்பட்டது