உலக சதுரங்க வாகை 2014

உலக சதுரங்க வாகை 2014 (World Chess Championship 2014) என்பது நடப்பு உலக வாகையாளர் மாக்னசு கார்ல்சனுக்கும், விசுவநாதன் ஆனந்த்துக்கும் இடையில் 2014 ஆம் ஆண்டுக்கான உலக வாகையாளரைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற சதுரங்கப் போட்டித் தொடராகும். இவ்விறுதிப் போட்டித்தொடர் உருசியாவின் சோச்சி நகரில் 2014 நவம்பர் 7 முதல் நவம்பர் 28 வரை பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் ஆதரவுடன் நடைபெற்றது.[2]

2013 வெற்றியாளர் எதிர்த்துப் போட்டியிட்டவர்
மாக்னசு கார்ல்சன்
மாக்னசு கார்ல்சன்
விசுவநாதன் ஆனந்த்
விசுவநாதன் ஆனந்த்
 மாக்னசு கார்ல்சன் (நோர்வே)  விசுவநாதன் ஆனந்த் (இந்தியா)
பிறப்பு 30 நவம்பர் 1990
அகவை 23
பிறப்பு 11 டிசம்பர் 1969
அகவை 44
2013 உலக சதுரங்கப் போட்டியின் வெற்றியாளர் 2014 போட்டியாளர் தேர்வின் வெற்றியாளர்
தரவரிசை: 2863 (உலக முதல் வரிசை ஆட்டக்காரர்)[1] தரவரிசை: 2792 (உலக 6ம் வரிசை ஆட்டக்காரர்)[1]

திட்டமிடப்பட்ட 12 ஆட்டங்களில் 11வது ஆட்டத்தின் முடிவில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். கார்ல்சன் ஓர் ஆட்டத்தை மட்டும் இழந்து, ஏழு ஆட்டங்களை சமப்படுத்தி தனது உலக வாகையாளர் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

வேட்பாளர்களுக்கான போட்டித் தொடர்

தொகு

இறுதிப் போட்டித் தொடரில் மாக்னசு கார்ல்சனை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க எட்டுப் போட்டியாளர்கள் அடங்கிய இரட்டை தொடர் சுழல்முறைப் போட்டிகள் உருசியாவின் காண்டி-மான்சீஸ்கு நகரில் 2014 மார்ச் 13 முதல் 31 வரை நடைபெற்றன.[2] இப்போட்டி முடிவுகள் வருமாறு:[3]

2014 வேட்பாளர் தேர்ந்தெடுப்பின் இறுதி முடிவுகள்[4]
வரிசை ஆட்டக்காரர் எலோ தரவரிசை புள்ளிகள்
மார்ச் 2014[5]
1
(விஆ)
2
(செக)
3
(விகி)
4
(சம)
5
(திஅ)
6
(லெஅ)
7
(பீசு)
8
(வெதோ)
புள்ளிகள் சமம்[3]
H2H வெற்றிகள் சொப
வெ வெ வெ வெ வெ வெ வெ வெ
1   விசுவநாதன் ஆனந்த் 2770 ½ ½ ½ ½ ½ 1 ½ ½ 1 ½ ½ ½ 1 ½ 3 57.25
2   செர்கே கர்சாக்கின் 2766 ½ ½ 1 0 ½ ½ ½ ½ 0 1 ½ 1 ½ ½ 3 51.75
3   விளாடிமிர் கிராம்னிக் 2787 ½ ½ 1 0 1 ½ ½ ½ ½ ½ 0 ½ 1 0 7 3 49.25
4   சக்கிரியார் மமிதியாரொவ் 2757 0 ½ ½ ½ ½ 0 1 ½ 1 0 1 ½ ½ ½ 7 2 3 48.00
5   திமீத்ரி அந்திரேகின் 2709 ½ ½ ½ ½ ½ ½ ½ 0 1 ½ ½ 0 1 ½ 7 2 48.50
6   லெவோன் அரோனியான் 2830 ½ 0 0 1 ½ ½ 1 0 ½ 0 1 ½ ½ ½ 3 45.00
7   பீட்டர் சுவித்லர் 2758 ½ ½ 0 ½ ½ 1 ½ 0 1 ½ ½ 0 1 0 ½ 3 46.00
8   டோப்பலோவ் 2785 ½ 0 ½ ½ 1 0 ½ ½ ½ 0 ½ ½ 1 0 6 2 42.25

2014 உலக சதுரங்கப் போட்டி

தொகு

2014 ஆம் ஆண்டுக்கான வாகையாளரைத் தேர்ந்தெடுக்கும் இறுதிச் சுற்றுப் போட்டிகள் நோர்வேயைச் சேர்ந்த மாக்னசு கார்ல்சன், இந்தியாவின் விசுவநாதன் ஆனந்த் ஆகியோருக்கு இடையில் உருசியாவின் சோச்சி நகரில் 2014 நவம்பர் 7 தொடக்கம் 28 வரை நடைபெற்றன.

முன்னாள் நேருக்கு நேர் மோதல்கள்

தொகு

இறுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு முன்னர், 2005 முதல் 2014 நவம்பர் 6 வரை, கார்ல்சனும், ஆனந்தும் 40 போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர். இவற்றில் கார்ல்சன் 6 போட்டிகளிலும், ஆன்ந்த் ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்றனர். 28 போட்டிகள் வெற்றி-தோல்வியின்றி முடிந்தன.[6]

நேரடி மோதல்[7]
கால்சன் வெற்றிகள் சமம் ஆனந்த் வெற்றிகள் மொத்தம்
மரபார்ந்த கார்ல்சன் (வெள்ளை) 4 13 4 21
ஆனந்த் (வெள்ளை) 2 15 2 19
மொத்தம் 6 28 6 40
பிளிட்சு/rapid/காட்சி 9 18 10 37
மொத்தம் 15 46 16 77

ஆட்டமும் நிகழ்ச்சி நிரலும்

தொகு

இறுதிப் போட்டித் தொடரில் கார்ல்சன், ஆனந்த் இருவருக்கும் இடையே ஆகக்கூடியது 12 மரபார்ந்த ஆட்டங்களும், தேவைப்படின், மேலதிக சமநிலை-முறிப்பு ஆட்டங்களும் இடம்பெறுகின்றன. மரபார்ந்த ஆட்டங்களில், முதல் 40 நகர்வுகளுக்கு 120 நிமிடங்களும், அடுத்த 20 நகர்வுகளுக்கு 60 நிமிடங்களும் எடுத்துக் கொள்ளலாம். மீதமான ஆட்டத்திற்கு ஒவ்வொரு நகர்விற்கும் 30 செக்கன்களாக மொத்தம் 15 நிமிடங்களும் எடுத்துக் கொள்ளலாம்.[8] மரபார்ந்த போட்டித் தொடரில் முதலாவதாக 6.5 புள்ளிகள் பெறும் போட்டியாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

பணப் பரிசு

தொகு

மொத்தப் பணப் பரிசு 1 மில்லியன் யுரோக்கள் ஆகும். 12 மரபார்ந்த போட்டிகளுக்குள் தொடர் முடிவடையும் பட்சத்தில், இப்பரிசில் 60 விழுக்காடு வெற்றி பெறுபவருக்கும், மீதி தோற்பவருக்கும் தரப்படும். சமநிலை-முறிப்பில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவாராயின், வெற்றியாளர் 55 விழுக்காடும் தோற்பவர் 45 விழுக்காடும் பெறுவர்.[9]

முடிவுகள்

தொகு
உலக சதுரங்க வாகையாளர் போட்டி 2014
தரவரிசை ஆட்டம் 1
8 நவ.
ஆட்டம் 2
9 நவ.
ஆட்டம் 3
11 நவ.
ஆட்டம் 4
12 நவ.
ஆட்டம் 5
14 நவ.
ஆட்டம் 6
15 நவ.
ஆட்டம் 7
17 நவ.
ஆட்டம் 8
18 நவ.
ஆட்டம் 9
20 நவ.
ஆட்டம் 10
21 நவ.
ஆட்டம் 11
23 நவ.
ஆட்டம் 12
25 நவ.
புள்ளிகள்
  மாக்னசு கார்ல்சன் (நோர்வே) 2863 ½ 1 0 ½ ½ 1 ½ ½ ½ ½ 1 தேவைப்
படவில்லை
  விசுவநாதன் ஆனந்த் (இந்தியா) 2792 ½ 0 1 ½ ½ 0 ½ ½ ½ ½ 0

இறுதிப் போட்டிகள்

தொகு

முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட போட்டியாளர் வெள்ளைக் காய்களுடன் விளையாடுவார்.

ஆட்டம் 1, ஆனந்த்–கார்ல்சன், ½–½

தொகு
ஆனந்த்-கார்ல்சன், ஆட்டம் 1
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
42. Rd4 நகர்வின் பின்னரான நிலை.

போட்டியின் முதலாவது ஆட்டம் 2014 நவம்பர் 8 இல் இடம்பெற்றது. ஆனந்த் இராணியின் சிப்பாயைக் கொண்டு ஆட்டத்தைத் தொடக்கினார். பதிலுக்கு கார்ல்சன் இதற்கு குரூன்ஃபெல்டு பாதுகாப்பு முறையுடன் விளையாடினார். ஆட்டம் தொடரும் போது ஆனந்த் சில காய்களை இழந்தாலும், இடையில் இராணியுடனும் கோட்டையுடனும் விளையாடி உலக வாகையாளருடன் ஆட்டத்தை சமனாக முடித்துக் கொண்டார்.[10]

குரூன்ஃபெல்டு பாதுகாப்பு[11]
1. d4 Nf6 2. c4 g6 3. Nc3 d5 4. cxd5 Nxd5 5. Bd2 Bg7 6. e4 Nxc3 7. Bxc3 0-0 8. Qd2 Nc6 9. Nf3 Bg4 10. d5 Bxf3 11. Bxg7 Kxg7 12. gxf3 Ne5 13. 0-0-0 c6 14. Qc3 f6 15. Bh3 cxd5 16. exd5 Nf7 17. f4 Qd6 18. Qd4 Rad8 19. Be6 Qb6 20. Qd2 Rd6 21. Rhe1 Nd8 22. f5 Nxe6 23. Rxe6 Qc7+ 24. Kb1 Rc8 25. Rde1 Rxe6 26. Rxe6 Rd8 27. Qe3 Rd7 28. d6 exd6 29. Qd4 Rf7 30. fxg6 hxg6 31. Rxd6 a6 32. a3 Qa5 33. f4 Qh5 34. Qd2 Qc5 35. Rd5 Qc4 36. Rd7 Qc6 37. Rd6 Qe4+ 38. Ka2 Re7 39. Qc1 a5 40. Qf1 a4 41. Rd1 Qc2 42. Rd4 (படம்) Re2 43. Rb4 b5 44. Qh1 Re7 45. Qd5 Re1 46. Qd7+ Kh6 47. Qh3+ Kg7 48. Qd7+ ½–½

ஆட்டம் 2, கார்ல்சன்-ஆனந்த், 1–0

தொகு
கார்ல்சன்-ஆனந்த், ஆட்டம் 2
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
34. g3 நகர்வின் பின்னரான நிலை.

இரண்டாவது ஆட்டம் 2014 நவம்பர் 9 இல் நடைபெற்றது. ஆட்ட ஆரம்பம் உருய் உலோப்பசு முறையின் பெர்லின் வேறுபாட்டுடன் தொடங்கியது. கார்ல்சன் 4.0-0 Nxe4 இற்குப் பதிலாக 4.d3 என ஆடினார். ஆனந்தின் இரண்டு c-சிப்பாய்களுக்குப் பதிலாக கார்ல்சன் அமைச்சரைக் கொடுத்து விளையாடினார். ஆனாலும், ஆனந்தின் 16...Rd8, 18...Be6, 19...Ng6 நகர்வுகள் ஆட்டத்தை கார்ல்சனுக்கு சார்பாக்கியது. இறுதியாட்டம் கார்ல்சனுக்கு சாதகமானது. கார்ல்சன் வெற்றி பெற்றார்.[12]

உருய் உலோப்பசு, பெர்லின் பாதுகாப்பு[11]
1. e4 e5 2. Nf3 Nc6 3. Bb5 Nf6 4. d3 Bc5 5. 0-0 d6 6. Re1 0-0 7. Bxc6 bxc6 8. h3 Re8 9. Nbd2 Nd7 10. Nc4 Bb6 11. a4 a5 12. Nxb6 cxb6 13. d4 Qc7 14. Ra3 Nf8 15. dxe5 dxe5 16. Nh4 Rd8 17. Qh5 f6 18. Nf5 Be6 19. Rg3 Ng6 20. h4 Bxf5 21. exf5 Nf4 22. Bxf4 exf4 23. Rc3 c5 24. Re6 Rab8 25. Rc4 Qd7 26. Kh2 Rf8 27. Rce4 Rb7 28. Qe2 b5 29. b3 bxa4 30. bxa4 Rb4 31. Re7 Qd6 32. Qf3 Rxe4 33. Qxe4 f3+ 34. g3 (படம்) h5 35. Qb7 1–0

ஆட்டம் 3, ஆனந்த்-கார்ல்சன், 1–0

தொகு
ஆனந்த்-கார்ல்சன், ஆட்டம் 3
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
28. Ra1 நகர்வின் பின்னரான நிலை

மூன்றாம் ஆட்டம் 2014 நவம்பர் 11 இல் இடம்பெற்றது. ஆனந்த்தின் மிகத் துணிச்சலான ஆரம்ப நகர்வு இவ்வாட்டத்தின் போக்கை நிர்ணயித்தது. ஆனந்தின் ஆரம்ப இராணிப் பக்கத்தில் இருந்தான தாக்குதலை அடுத்து அவர் மிக விரைவில் ஆட்டத்தைத் தனக்கு சார்பானதாக ஆக்கிக் கொண்டார்.[13][14] இவ்வெற்றியுடன் ஆனந்த் ஆட்டத்தை 1½–1½ என சமப்படுத்தினார். உலக வாகையாளர் போட்டி ஒன்றில் கார்ல்சனை ஆனந்த் வென்ற முதலாவது ஆட்டம் இதுவாகும்.

Queen's Gambit Declined[11]
1. d4 Nf6 2. c4 e6 3. Nf3 d5 4. Nc3 Be7 5. Bf4 0-0 6. e3 Nbd7 7. c5 c6 8. Bd3 b6 9. b4 a5 10. a3 Ba6 11. Bxa6 Rxa6 12. b5 cxb5 13. c6 Qc8 14. c7 b4 15. Nb5 a4 16. Rc1 Ne4 17. Ng5 Ndf6 18. Nxe4 Nxe4 19. f3 Ra5 20. fxe4 Rxb5 21. Qxa4 Ra5 22. Qc6 bxa3 23. exd5 Rxd5 24. Qxb6 Qd7 25. 0-0 Rc8 26. Rc6 g5 27. Bg3 Bb4 28. Ra1 (படம்) Ba5 29. Qa6 Bxc7 30. Qc4 e5 31. Bxe5 Rxe5 32. dxe5 Qe7 33. e6 Kf8 34. Rc1 1–0

ஆட்டம் 4, கார்ல்சன்-ஆனந்த், ½–½

தொகு
கார்ல்சன்-ஆனந்த், ஆட்டம் 4
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
33...Nd4 நகர்வுக்குப் பின்னரான நிலை.

நான்காவது ஆட்டம் 2014 நவம்பர் 12 இல் இடம்பெற்றது. ஆனந்த் இப்போட்டியில் முதல் தடவையாக சிசிலியன் தற்காப்பு முறையில் ஆடத் தொடங்கினார். கறுப்பின் தனிமைப்படுத்தப்பட்ட d-சிப்பாயினால் கார்ல்சன் சிறிதளவு முன்னே நின்றார். ஆனாலும், ஆட்டம் இறுதியில் சமனாக முடிந்தது.[15][16]

சிசிலியன் தற்காப்பு[17] / அரசனின் இந்தியத் தாக்குதல்[11]
1. e4 c5 2. Nf3 e6 3. g3 Nc6 4. Bg2 d5 5. exd5 exd5 6. 0-0 Nf6 7. d4 Be7 8. Be3 cxd4 9. Nxd4 Bg4 10. Qd3 Qd7 11. Nd2 0-0 12. N2f3 Rfe8 13. Rfe1 Bd6 14. c3 h6 15. Qf1 Bh5 16. h3 Bg6 17. Rad1 Rad8 18. Nxc6 bxc6 19. c4 Be4 20. Bd4 Nh7 21. cxd5 Bxd5 22. Rxe8+ Rxe8 23. Qd3 Nf8 24. Nh4 Be5 25. Bxd5 Qxd5 26. Bxe5 Qxe5 27. b3 Ne6 28. Nf3 Qf6 29. Kg2 Rd8 30. Qe2 Rd5 31. Rxd5 cxd5 32. Ne5 Qf5 33. Nd3 Nd4 (படம்) 34. g4 Qd7 35. Qe5 Ne6 36. Kg3 Qb5 37. Nf4 Nxf4 38. Kxf4 Qb4+ 39. Kf3 d4 40. Qe8+ Kh7 41. Qxf7 Qd2 42. Qf5+ Kh8 43. h4 Qxa2 44. Qe6 Qd2 45. Qe8+ Kh7 46. Qe4+ Kh8 47. Qe8+ Kh7 ½–½

ஆட்டம் 5, ஆனந்த்-கார்ல்சன், ½–½

தொகு
ஆனந்த்-கார்ல்சன், ஆட்டம் 5
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
22. Qf3 ஆம் நகர்வின் பின்னரான நிலை.

ஐந்தாவது ஆட்டம் 2014 நவம்பர் 14 இல் நடைபெற்றது. கார்ல்சன் அரசியின் இந்தியப் பாதுகாப்பு முறையில் ஆடத் தொடங்கினார். ஆனலும், ஆனந்த் மிக விரைவாக முன்னேறினார். 22 ஆம் நகர்வில், கார்ல்சன் b2 இல் இருந்த சிப்பாயைக் கைப்பற்றினாலும், மிக விரைவிலேயே அதனைத் திரும்பக் கொடுக்க வேண்டியதாயிற்று. இதன் மூலம் தனது அரசன் பக்கமுள்ள சிப்பாய்களின் அமைப்பைக் குழப்ப வேண்டியதாயிற்று. அதன் பின்னர் ஆட்டம் சமனாக முடிந்தது.[18]

அரசியின் இந்தியப் பாதுகாப்பு[11]
1. d4 Nf6 2. c4 e6 3. Nf3 b6 4. g3 Bb4+ 5. Bd2 Be7 6. Nc3 Bb7 7. Bg2 c6 8. e4 d5 9. exd5 cxd5 10. Ne5 0-0 11. 0-0 Nc6 12. cxd5 Nxe5 13. d6 Nc6 14. dxe7 Qxe7 15. Bg5 h6 16. d5 Na517. Bxf6 Qxf6 18. dxe6 Qxe6 19. Re1 Qf6 20. Nd5 Bxd5 21. Bxd5 Rad8 22. Qf3 (படம்) Qxb2 23. Rad1 Qf6 24. Qxf6 gxf6 25. Re7 Kg7 26. Rxa7 Nc6 27. Rb7 Nb4 28. Bb3 Rxd1+ 29. Bxd1 Nxa2 30. Rxb6 Nc3 31. Bf3 f5 32. Kg2 Rd8 33. Rc6 Ne4 34. Bxe4 fxe4 35. Rc4 f5 36. g4 Rd2 37. gxf5 e3 38. Re4 Rxf2+ 39. Kg3 Rxf5 ½–½

ஆட்டம் 6, கார்ல்சன்-ஆனந்த், 1–0

தொகு
கார்ல்சன்-ஆனந்த், ஆட்டம் 6
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
26.Kd2 ஆம் நகர்வுக்குப் பின்னரான நிலை.

ஆறாவது ஆட்டம் 2014 நவம்பர் 15 இல் இடம்பெற்றது. ஆரம்பத்திலேயே அரசியைப் பரிமாற்றம் செய்த கார்ல்சன், விரைவிலேயே ஆட்டத்தில் வெற்றி பெறும் நிலைக்கு வந்தார். 26 ஆம் நகர்வில் இரு பெரும் தவறுகள் இடம்பெற்றன. கார்ல்சனின் 26.Kd2?? என்ற நகர்விற்கு ஆனந்த் 26...Nxe5! 27.Rxg8 Nxc4+ 28.Kd3 Nb2+ 29.Ke2 Rxg8, எனப் பதிலளித்திருக்க வேண்டும், இதன் மூலம் கருப்புக்கு ஒரு சிப்பாய் அதிகமாக இருந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்திருக்கும். ஆனால் ஆனந்து இந்த வாய்ப்பைத் தவற விட்டு, 26...a4?? என விளையாடினார். கார்ல்சன் மேலும் தவறிழைக்காமல், இலகுவாக வெற்றியைத் தனதாக்கிக் கொண்டார்.[19]

சிசிலியன் தற்காப்பு[11]
1. e4 c5 2. Nf3 e6 3. d4 cxd4 4. Nxd4 a6 5. c4 Nf6 6. Nc3 Bb4 7. Qd3 Nc6 8. Nxc6 dxc6 9. Qxd8+ Kxd8 10. e5 Nd7 11. Bf4 Bxc3+ 12. bxc3 Kc7 13. h4 b6 14. h5 h6 15. 0-0-0 Bb7 16. Rd3 c5 17. Rg3 Rag8 18. Bd3 Nf8 19. Be3 g6 20. hxg6 Nxg6 21. Rh5 Bc6 22. Bc2 Kb7 23. Rg4 a5 24. Bd1 Rd8 25. Bc2 Rdg8 26. Kd2 (படம்) a4 27. Ke2 a3 28. f3 Rd8 29. Ke1 Rd7 30. Bc1 Ra8 31. Ke2 Ba4 32. Be4+ Bc6 33. Bxg6 fxg6 34. Rxg6 Ba4 35. Rxe6 Rd1 36. Bxa3 Ra1 37. Ke3 Bc2 38. Re7+ 1–0

ஆட்டம் 7, கார்ல்சன்-ஆனந்த், ½–½

தொகு
கார்ல்சன்-ஆனந்த், ஆட்டம் 7
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
31.Rh5 ஆம் நரவிற்குப் பின்னரான நிலை

ஏழாவது ஆட்டம் 2014 நவம்பர் 17 அன்று நடைபெற்றது. உருய் உலோப்பசு-பெரின் பாதுகாப்பு என்ற ஆரம்ப நகர்வு முறை மூஅம் கார்ல்சன் விளையாடத் தொடங்கினார். ஒரு சிப்பாயை இழந்திருந்தாலும், கார்ல்சனின் நிலையில் சிறிதளவு மேல்தன்மை காணப்பட்டது. 31 ஆம் நகர்வில் ஆனந்த் இரு சிப்பாய்களுக்காகத் தனது அமைச்சரைக் கொடுத்து விளையாடி, அரசு பக்கத்தில் இருந்த சிப்பாய்களை இல்லாமல் ஆக்கினார். மேலதிக குதிரை ஒன்றுடன் வெற்றியைத் தனதாக்கிக் கொள்ள முயன்றார். ஆனாலும், அவரால் ஆனந்தின் பாதுகாப்புத் தடையை உடைக்க முடியாமல் போனது. இறுதியில், இருவரும் சிப்பாய்கள் எதுவுமில்லாமல் ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு ஆட்டத்தை சமப்படுத்திக் கொண்டார்கள். இவ்வாட்டத்தின் மூலம் கார்ல்சன் ஆனந்தை விட ஒரு புள்ளி முன்னே உள்ளார்.[20]

உருய் உலோப்பசு பெர்லின் பாதுகாப்பு[11]
1. e4 e5 2. Nf3 Nc6 3. Bb5 Nf6 4. 0-0 Nxe4 5. d4 Nd6 6. Bxc6 dxc6 7. dxe5 Nf5 8. Qxd8+ Kxd8 9. h3 Ke8 10. Nc3 h5 11. Bf4 Be7 12. Rad1 Be6 13. Ng5 Rh6 14. g3 Bxg5 15. Bxg5 Rg6 16. h4 f6 17. exf6 gxf6 18. Bf4 Nxh4 19. f3 Rd8 20. Kf2 Rxd1 21. Nxd1 Nf5 22. Rh1 Bxa2 23. Rxh5 Be6 24. g4 Nd6 25. Rh7 Nf7 26. Ne3 Kd8 27. Nf5 c5 28. Ng3 Ne5 29. Rh8+ Rg8 30. Bxe5 fxe5 31. Rh5 (படம்) Bxg4 32. fxg4 Rxg4 33. Rxe5 b6 34. Ne4 Rh4 35. Ke2 Rh6 36. b3 Kd7 37. Kd2 Kc6 38. Nc3 a6 39. Re4 Rh2+ 40. Kc1 Rh1+ 41. Kb2 Rh6 42. Nd1 Rg6 43. Ne3 Rh6 44. Re7 Rh2 45. Re6+ Kb7 46. Kc3 Rh4 47. Kb2 Rh2 48. Nd5 Rd2 49. Nf6 Rf2 50. Kc3 Rf4 51. Ne4 Rh4 52. Nf2 Rh2 53. Rf6 Rh7 54. Nd3 Rh3 55. Kd2 Rh2+ 56. Rf2 Rh4 57. c4 Rh3 58. Kc2 Rh7 59. Nb2 Rh5 60. Re2 Rg5 61. Nd1 b5 62. Nc3 c6 63. Ne4 Rh5 64. Nf6 Rg5 65. Re7+ Kb6 66. Nd7+ Ka5 67. Re4 Rg2+ 68. Kc1 Rg1+ 69. Kd2 Rg2+ 70. Ke1 bxc4 71. Rxc4 Rg3 72. Nxc5 Kb5 73. Rc2 a5 74. Kf2 Rh3 75. Rc1 Kb4 76. Ke2 Rc3 77. Nd3+ Kxb3 78. Ra1 Kc4 79. Nf2 Kb5 80. Rb1+ Kc4 81. Ne4 Ra3 82. Nd2+ Kd5 83. Rh1 a4 84. Rh5+ Kd4 85. Rh4+ Kc5 86. Kd1 Kb5 87. Kc2 Rg3 88. Ne4 Rg2+ 89. Kd3 a3 90. Nc3+ Kb6 91. Ra4 a2 92. Nxa2 Rg3+ 93. Kc2 Rg2+ 94. Kb3 Rg3+ 95. Nc3 Rh3 96. Rb4+ Kc7 97. Rg4 Rh7 98. Kc4 Rf7 99. Rg5 Kb6 100. Na4+ Kc7 101. Kc5 Kd7 102. Kb6 Rf1 103. Nc5+ Ke7 104. Kxc6 Rd1 105. Rg6 Kf7 106. Rh6 Rg1 107. Kd5 Rg5+ 108. Kd4 Rg6 109. Rh1 Rg2 110. Ne4 Ra2 111. Rf1+ Ke7 112. Nc3 Rh2 113. Nd5+ Kd6 114. Rf6+ Kd7 115. Nf4 Rh1 116. Rg6 Rd1+ 117. Nd3 Ke7 118. Ra6 Kd7 119. Ke4 Ke7 120. Rc6 Kd7 121. Rc1 Rxc1 122. Nxc1 ½–½

உலக வாகையாளர் போட்டியொன்றில் விளையாடப்பட்ட இரண்டாவது மிக நீண்ட போட்டி இதுவாகும். 1978 ஆம் ஆண்டு போட்டியின் 5ம் ஆட்டத்தின் போது விக்தர் கர்ச்னோயும் அனத்தோலி கார்ப்பொவ்வும் 124 நகர்வுகள் விளையாடி சாத்தியமான நகர்வற்ற நிலை முடிவுக்கு வந்தமையே மிக நீண்ட போட்டியாகும்.[21]

ஆட்டம் 8, ஆனந்த்-கார்ல்சன், ½–½

தொகு
ஆனந்த்-கார்ல்சன், ஆட்டம் 8
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
20. Nc5 ஆம் நகர்வின் பின்னரான நிலை.

எட்டாவது ஆட்டம் 2014 நவம்பர் 18 அன்று இடம்பெற்றது. ஆனந்த் இராணியின் உத்தி மறுப்பு (Bf4 நகர்வு) மூலம் விளையாடினார். மூன்றாம் ஆட்டத்தில் இந்நகர்வு ஆனந்துக்கு வெற்றியை ஈட்டித் தந்தது. ஆனாலும், கார்ல்சன் இம்முறை 1970கள்-90கள் வரை பிரபலமாகவிருந்த 6...c5 என்ற பழையகால நகர்வு மூலம் எதிர்கொண்டார். இதன் மூலம் அவருக்கு ஆட்டத்தை இலகுவாக சமப்படுத்த முடிந்தது.

இராணியின் உத்தி மறுப்பு[11]
1. d4 Nf6 2. c4 e6 3. Nf3 d5 4. Nc3 Be7 5. Bf4 0-0 6. e3 c5 7. dxc5 Bxc5 8. a3 Nc6 9. Qc2 Re8 10. Bg5 Be7 11. Rd1 Qa5 12. Bd3 h6 13. Bh4 dxc4 14. Bxc4 a6 15. 0-0 b5 16. Ba2 Bb7 17. Bb1 Rad8 18. Bxf6 Bxf6 19. Ne4 Be7 20. Nc5 (படம்) Bxc5 21. Qxc5 b4 22. Rc1 bxa3 23. bxa3 Qxc5 24. Rxc5 Ne7 25. Rfc1 Rc8 26. Bd3 Red8 27. Rxc8 Rxc8 28. Rxc8+ Nxc8 29. Nd2 Nb6 30. Nb3 Nd7 31. Na5 Bc8 32. Kf1 Kf8 33. Ke1 Ke7 34. Kd2 Kd6 35. Kc3 Ne5 36. Be2 Kc5 37. f4 Nc6 38. Nxc6 Kxc6 39. Kd4 f6 40. e4 Kd6 41. e5+ ½–½

ஆட்டம் 9, கார்ல்சன்-ஆனந்த், ½–½

தொகு
கார்ல்சன்-ஆனந்த், ஆட்டம் 9
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
16. Ng5+ ஆம் நகர்விற்குப் பின்னரான நிலை.

ஒன்பதாவது ஆட்டம் 2014 நவம்பர் 20 அன்று இடம்பெற்றது. உருய் உலோப்பசு பெர்லின் பாதுகாப்பு ஊடாக ஆட்டம் ஆரம்பமானது. 20வது நகர்வில் மூன்றுதடவைகள் ஒரே நகர்வுகள் நகர்த்தப்பட்டதை அடுத்து ஆட்டம் சமனாக முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. இச்சமநிலையுடன் கார்ல்சன் 5-4 என்ற கணக்கில் முன்னணிக்கு வந்தார்.[22]

உருய் உலோப்பசு[11]
1.e4 e5 2. Nf3 Nc6 3. Bb5 Nf6 4. 0-0 Nxe4 5. d4 Nd6 6. Bxc6 dxc6 7. dxe5 Nf5 8. Qxd8+ Kxd8 9. h3 Ke8 10. Nc3 h5 11. Ne2 b6 12. Rd1 Ba6 13. Nf4 Bb7 14. e6 Bd6 15. exf7+ Kxf7 16. Ng5+ (படம்) Kf6 17. Ne4+ Kf7 18. Ng5+ Kf6 19. Ne4+ Kf7 20. Ng5+ ½–½

ஆட்டம் 10, ஆனந்த்-கார்ல்சன், ½–½

தொகு
ஆனந்த்-கார்ல்சன், ஆட்டம் 10
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
27... Rxe5 ஆம் நகர்வின் பின்னரான நிலை.

பத்தாவது ஆட்டம் 2014 நவம்பர் 21 இல் நடைபெற்றது. முதலாவது ஆட்டம் போலவே கார்ல்சன் இம்முறையும் குரூன்பெல்டு பாதுகாப்பு முறையில் ஆடத் தொடங்கினார். ஆனால் ஆனந்த் இம்முறை உருசிய முறையில் விளையாடினார். பெரும்பாலான நேரத்தில் கார்ல்சன் கடுமையான அழுத்தத்துடனேயே ஆடவேண்டி இருந்தது. இறுதியில் இருவரும் ஆட்டத்தை சமப்படுத்த ஒப்புக் கொண்டார்கள்.[23]

குரூன்ஃபெல்டு முறை[11]
1. d4 Nf6 2. c4 g6 3. Nc3 d5 4. Nf3 Bg7 5. Qb3 dxc4 6. Qxc4 0-0 7. e4 Na6 8. Be2 c5 9. d5 e6 10. 0-0 exd5 11. exd5 Re8 12. Bg5 h6 13. Be3 Bf5 14. Rad1 Ne4 15. Nxe4 Bxe4 16. Qc1 Qf6 17. Bxh6 Qxb2 18. Qxb2 Bxb2 19. Ng5 Bd4 20. Nxe4 Rxe4 21. Bf3 Re7 22. d6 Rd7 23. Bf4 Nb4 24. Rd2 Re8 25. Rc1 Re6 26. h4 Be5 27. Bxe5 Rxe5 (படம்) 28. Bxb7 Rxb7 29. d7 Nc6 30. d8=Q+ Nxd8 31. Rxd8+ Kg7 32. Rd2 ½–½

ஆட்டம் 11, கார்ல்சன்-ஆனந்த், 1–0

தொகு
கார்ல்சன்-ஆனந்த், ஆட்டம் 11
abcdefgh
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
77
66
55
44
33
22
11
abcdefgh
27. Ke4 ஆம் நகர்விற்குப் பின்னரான நிலை.

பதினோராவது ஆட்டம் 2014 நவம்பர் 23 இல் இடம்பெற்றது. இவ்வாட்டத்தில், ஆன்ந்த் 45வது நகர்வில் தோல்வியை ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து வாகையாளர் தேர்வுக்கான 6.5 புள்ளிகளைப் பெற்று கார்ல்சன் போட்டியில் வெற்றி பெற்று உலக வாகையாளர் விருதைத் தக்க வைத்துக் கொண்டார்.[24]

உருய் உலோப்பசு[11]
1. e4 e5 2. Nf3 Nc6 3. Bb5 Nf6 4. 0-0 Nxe4 5. d4 Nd6 6. Bxc6 dxc6 7. dxe5 Nf5 8. Qxd8+ Kxd8 9. h3 Bd7 10. Nc3 h6 11. b3 Kc8 12. Bb2 c5 13. Rad1 b6 14. Rfe1 Be6 15. Nd5 g5 16. c4 Kb7 17. Kh2 a5 18. a4 Ne7 19. g4 Ng6 20. Kg3 Be7 21. Nd2 Rhd8 22. Ne4 Bf8 23. Nef6 b5 24. Bc3 bxa4 25. bxa4 Kc6 26. Kf3 Rdb8 27. Ke4 (படம்) Rb4 28. Bxb4 cxb4 29. Nh5 Kb7 30. f4 gxf4 31. Nhxf4 Nxf4 32. Nxf4 Bxc4 33. Rd7 Ra6 34. Nd5 Rc6 35. Rxf7 Bc5 36. Rxc7+ Rxc7 37. Nxc7 Kc6 38. Nb5 Bxb5 39. axb5+ Kxb5 40. e6 b3 41. Kd3 Be7 42. h4 a4 43. g5 hxg5 44. hxg5 a3 45. Kc3 1–0

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Top 100 Players". Ratings.fide.com. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2014.
  2. 2.0 2.1 FIDE Calendar 2014
  3. 3.0 3.1 FIDE: Rules & regulations for the Candidates Tournament of the FIDE World Championship cycle 2012–2014
  4. "Pairings and results". FIDE. Archived from the original on 2014-03-13. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச்சு 2014.
  5. "FIDE Top players – Top 100 Players March 2013". FIDE. பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச்சு 2014.
  6. Oliver Roeder (6 நவம்பர் 2014). "Magnus Carlsen Is More Than An Odds-On Favorite To Win The World Chess Championship". FiveThirtyEight. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2014.
  7. "ஆனந்த் எ. கார்ல்சன்". Chessgames.com. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2014.
  8. "Rules & Regulations for the FIDE World Championship Match (FWCM) 2014" (PDF). www.fide.com/. FIDE. பார்க்கப்பட்ட நாள் 2014-09-24.
  9. Anand-Carlsen Match Only a Week Away
  10. Anand and Carlsen draw an interesting first game of their World Championship Match in Sochi
  11. 11.00 11.01 11.02 11.03 11.04 11.05 11.06 11.07 11.08 11.09 11.10 "Carlsen-Anand World Championship Match". Chessgames.com. பார்க்கப்பட்ட நாள் 14 November 2014.
  12. Mark Crowther (9 November 2014). "Ominous signs for Anand as Carlsen wins Sochi World Championship game 2". The Week In Chess.
  13. Alejandro Ramirez (11 November 2014). "Sochi G3: Anand strikes back – with a vengeance!". ChessBase.
  14. Anand back level in the World Chess Championship with a game three win
  15. Carlsen brands his play "not good enough" in World Championship game 4 draw
  16. Alejandro Ramirez (12 November 2014). "Sochi G4: Level game ends in Draw".
  17. Carlsen-Anand World Championship Game 4: Draw
  18. Anand and Carlsen draw in a rare line in World Championship game 5
  19. ""Massively relieved" Carlsen takes the lead in dramatic World Championship game 6". Archived from the original on 2014-11-18. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.
  20. Anand confidently holds the draw in 122 move marathon World Championship game 7
  21. Anand Holds Draw In 2nd-Longest World Championship Game Ever
  22. Carlsen gets no advantage against Anand's Berlin in drawn World Championship Game 9
  23. Silver, Albert (21 நவம்பர் 2014). "Sochi G10: Unrealized opportunities". ChessBase. பார்க்கப்பட்ட நாள் 21 நவம்பர் 2014.
  24. Carlsen retains World Chess Championship title after beating Anand in Game 11

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_சதுரங்க_வாகை_2014&oldid=4155108" இலிருந்து மீள்விக்கப்பட்டது