உலொக்குவட்டு
லக்கோட்டா (Eriobotrya japonica, Loquat) என்பது தென்-மத்திய சீனாவின் குளிரான மலைப் பகுதிகளுக்குச் சொந்தமான ரோசாசி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். ஜப்பான், கொரியா, இந்தியாவின் மலைப் பிரதேசங்கள் (இமாச்சல்), போடோஹார் மற்றும் பாக்கிஸ்தானின் அடிவார பகுதிகளிலும் இது மிகவும் பொதுவானது மற்றும் சிலவற்றை பிலிப்பைன்ஸின் சில வடக்குப் பகுதிகளிலும், இலங்கையின் மலைநாட்டிலும் காணலாம். துருக்கி, சைப்ரஸ், கிரேக்கம், மால்டா, இத்தாலி, அல்பேனியா, மொண்டெனேகுரோ, குரோவாசியா, சுலோவீனியா , பிரான்சு, எசுப்பானியா மற்றும் போர்த்துகல் போன்ற சில தென் ஐரோப்பிய நாடுகளிலும் இதைக் காணலாம். மொராக்கோ, அல்சீரியா, மற்றும் ஈரான், சிரியா, ஈராக், ஜோர்டான், பாலஸ்தீனம், இசுரேல், லெபனான் போன்ற நாடுகளிலும், பல வட ஆபிரிக்க நாடுகளிலும் கென்யாவின் கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது.[2] இதற்கு 'ஜப்பான் பிளம்' என்றும் பெயருண்டு. இதன் உயிரியற்பெயர் எரியோபோட்ரியா ஜப்பானிகா என்பதாகும். இது உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மஹாராஷ்டிரா மாநிலங்களில் விளைகிறது. இப்பழத்தில் சர்க்கரையும், பெக்டினும் மிகுதியாக உள்ளது. தென்னிந்திய மலைப் பகுதிகளிலும் இது பயிரிடப்படுகிறது. பதியன்கள், மொட்டுச் செடிகள், நெருக்கோட்டு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நட்ட மூன்றாவது ஆண்டில் பலன் கிடைக்கும். ஒரு மரத்திலிருந்து 40 கிலோ வரை பழங்கள் கிடைக்கும். இந்தச்செடி அதன் மஞ்சள் பழத்திற்காக வணிக நோக்கில் வளர்க்கப்படுகிறது. மேலும் அழகுச்செடியாகவும் பயிரிடப்படுகிறது.
Loquat | |
---|---|
லக்கோட்டா இலைகளும் பழங்களும் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
இனக்குழு: | |
பேரினம்: | |
இனம்: | E. japonica
|
இருசொற் பெயரீடு | |
Eriobotrya japonica (Thunb.) Lindl. | |
வேறு பெயர்கள் [1] | |
|
உருவ அமைப்பு
தொகுஇந்த மரம் 5-10 மீற்றர் (16–33 அடி) உயரத்திற்கு வளரக்கூடியது. ஆனால் பெரும்பாலும் 3-4 மீற்றர் (10–13 அடி) சிறியதாக இருக்கும். வளரும் பகுதியின் வெப்பநிலையைப் பொறுத்து வசந்த காலம் முதல் கோடை காலம் வரை பழம் பழுக்கத் தொடங்குகிறது. இலைகள் எளிமையானவை. 10-25 சென்றிமீற்றர் (4-10 அங்குலம்) நீளமாக காணப்படும். அடர் பச்சை நிறமானவை. கடினமானவை தோல் விளிம்புடன் காணப்படும்.[3]
பழம்
தொகுஇந்த தாவரத்தின் பழங்கள் குளிர்காலத்தின் ஆரம்பத்தில் காய்க்கும். மேலும் பழங்கள் வசந்த காலத்தின் துவக்கத்தில் இருந்து கோடையின் தொடக்கத்தில் எந்த நேரத்திலும் பழுக்கும். மலர்கள் 2 செ.மீ (1 அங்குலம்) விட்டமுடையவை. வெள்ளை நிறத்தில், ஐந்து இதழ்களுடன் காணப்படும். இந்த மலர்கள் இனிமையான வாசனையுடையவை. தூரத்தில் இருந்தே இந்த மலர்களின் வாசனையை நுகரலாம்.
பழங்கள் கொத்து கொத்தாக வளரும். வட்டமான அல்லது பேரிக்காய் வடிவிலானவை. 3–5 சென்றிமீற்றர் (1-2 அங்குலம்) நீளமுள்ளவை. ஆரஞ்சு, வெள்ளை, மஞ்சள் நிற தோல்களுடன் காணப்படும். மென்மையான மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் போது பழங்கள் இனிமையானவை. குழிப்பேரி, நாரத்தை, லேசான மா சுவைகளின் கலவையான சுவையை கொண்டிருக்கும்.
வரலாறு
தொகுலாக்கோட் சீனாவை பூர்வீகமாக கொண்டது. சீனாவின் காடுகளில் இதன் இனங்கள் காடுகளில் வளர்வதைக் காணலாம்.[4] இது சுமார் 1,000 ஆண்டுகளாக யப்பானில் பயிரிடப்பட்டு வருகிறது. மேலும் பல பழங்களும் விதைகளும் சீனாவிலிருந்து யப்பானுக்கு கொண்டு வரப்பட்டன. பல ஜப்பானிய அறிஞர்கள் டாங் வம்சத்தின் போது சீனாவுக்கு வருகை தந்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.
போர்த்துகல்லில் மிகவும் பொதுவான வகை தாமதமாக பழுக்க வைக்கும் தனகா என்பதாகும். இது தோட்டங்களிலும் கொல்லைப்புறங்களிலும் பிரபலமாக வளர்க்கப்படுகின்றது. ஆனால் வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படவில்லை. வடக்கு போர்த்துகல்லில் இது பிரபலமாக மாக்னாரியோ / மாக்னலியோ என்றும் அழைக்கப்படுகிறது.
சீனாவிற்கு பிறகு வணிக ரீதியாக அதிகளவு பழங்களை எசுப்பானியா உற்பத்தி செய்கின்றது.
சமையல் பயன்பாடுகள்
தொகுலாக்கோட்டில் அதிக சர்க்கரை, அமிலம் மற்றும் பெக்டின் உள்ளடக்கம் உள்ளது.[5] இது பழமாக உண்ணப்படுகிறது. மற்றும் பழ கலவைகளில் அல்லது பழ கோப்பைகளில் மற்ற பழங்களுடன் நன்றாக கலந்து உட்கொள்ளப்படுகிறது. இந்த பழங்கள் பொதுவாக ஜாம் , ஜெல்லி மற்றும் சட்னி தயாரிக்கப் பயன்படுகின்றன.
மதுபானம் தயாரிப்பு
தொகுலேசான வைன் வகை மதுபானம் தயாரிக்க லாக்கேட்டுகள் பயன்படுத்தலாம். இந்த பழங்களை புளிக்க வைத்து வைன் தயாரிக்கப்படுகிறது.
ஊட்டச்சத்து
தொகுலாக்கேட்டில் சோடியம் குறைவாகவும், வைட்டமின் ஏ , வைட்டமின் பி 6 , நார்ச்சத்து , பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு அதிகமாகவும் உள்ளது.[6]
மருத்துவ பண்புகள்
தொகுபழங்கள் வாந்தியை நிறுத்தும். தாகத்தை தணிக்கும். இதன் பூக்கள் சீன தேசத்தல் இருமல், ஆஸ்துமா ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இலைக்கு போதையைத் தெளிய வைக்கவும் வயிற்றுப் போக்கை நிறுத்தவும் கூடிய குணங்களுண்டு.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் 13 April 2014.
- ↑ "Wozu lassen sich die Früchte der Mispel verarbeiten?". www.edeka.de (in ஜெர்மன்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
- ↑ "Eriobotrya japonica"".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Loquat, production and market" (PDF). Archived from the original (PDF) on 2016-03-05.
- ↑ "LOQUAT Fruit Facts". www.crfg.org. Archived from the original on 2012-10-24. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
- ↑ "loquat - Wolfram|Alpha". www.wolframalpha.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-06.
- ↑ அர்ச்சுணன், கோ, (2008), மருத்துவத்தில் காய்கனிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ப. 125.